Monthly Archives: December 2011

இன்னம் உறங்குதியோ?

எல்லே! இளம் கிளியே! இன்னம் உறங்குதியோ? ’சில்’ என்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன், வல்லை, உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும், வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக; ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை; எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள் வல் ஆனை கொன்றானை, மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடு, … Continue reading

Posted in ஆண்டாள், திருப்பாவை, நாடகம், பாவைப் பாட்டு, பெண்மொழி | 3 Comments

மெல்ல நடந்தாள்

மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத, வான் கருப்பு வில்லி கணை தெரிந்து மெய் காப்ப, முல்லை மலர் மென் மாலைத் தோள் அசைய மெல்ல நடந்ததே புன் மாலை அந்திப் பொழுது நூல்: நளவெண்பா பாடியவர்: புகழேந்தி சூழல்: நளன்மீது காதல்வயப்படுகிறாள் தமயந்தி, அப்போது நிகழும் ஒரு மாலை நேரக் காட்சி (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading

Posted in இயற்கை, கதை கேளு கதை கேளு, சினிமா, நளவெண்பா, மாலை, வர்ணனை, வெண்பா | 6 Comments

அவளோடு வாழ்க!

வெண் தலைக் குருகின் மென் பறை விளிக்குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர! எம் இவண் நல்குதல் அரிது, நும் மனை மடந்தையொடு தலைப் பெய்தீமே! நூல்: ஐங்குறுநூறு (#86) பாடியவர்: ஓரம்போகியார் சூழல்: மருதத் திணை. சொந்த மனைவியை மறந்து இன்னொருத்தியுடன் வாழ்கிறான் ஒருவன். இந்தச் சூழ்நிலையில் ஒருநாள் அவன் தன்னுடைய மகனை … Continue reading

Posted in ஊடல், ஐங்குறுநூறு, பரத்தை, பெண்மொழி, மருதம் | 7 Comments

உவமையில் பலவகை

கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும், மேகமும், இருளும், விரிமலர்ச் சோலையும், வண்டுக் கூட்டமும், மற்று ஓர் விதப் பனை காய்த்து உள கொத்தும் கரும் குழலுக்கு இணை; அது பின்உறில் கொன்றைக் காய் எனப் பிறங்கும், அவிழ்ப்பு உறில் அகத்திக் காய்க் கொத்து அனையதாம் நூல்: அறுவகை இலக்கணம் பாடியவர்: தவத்திரு தண்டபாணி சுவாமிகள் பெண்களின் … Continue reading

Posted in இலக்கணம், உவமை நயம், பட்டியல் | 11 Comments

செருக்கு

பிறர் தன்னைப் பேணும்கால் நாணலும், பேணார் திறன் வேறு கூறில் பொறையும், அறவினையைக் கார் ஆண்மை போல ஒழுகலும் இம்மூன்றும் ஊர் ஆண்மை என்னும் செருக்கு நூல்: திரிகடுகம் (#7) பாடியவர்: நல்லாதனார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) 1. மற்றவர்கள் தங்களை அளவுக்கு மீறிப் புகழும்போது, … Continue reading

Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா | 3 Comments

மாலை தா!

ஆழி இழைப்பப் பகல் போம், இரவு வரின், தோழி துணையாத் துயர் தீரும்; வாழி நறு மாலை தாராய், திரையவோ என்னும் சிறு மாலை சென்று அடையும் போழ்து நூல்: யாப்பருங்கலக் காரிகை பாடியவர்: அமுதசாகரர் சூழல்: காதல் கொண்ட ஒருத்தி. துணையைப் பிரிந்து அவள் படுகிற வேதனையைக் கண்ட செவிலித் தாய்க்கு ஆதங்கம். அந்தக் … Continue reading

Posted in அகம், காதல், பிரிவு, பெண்மொழி, யாப்பருங்கலக் காரிகை, வெண்பா | 7 Comments

முத்து இட்டல்

நகை செய் தன்மையின் நம்பு இழீஇத் தாய், துகள் பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற, முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும், குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே நூல்: தேம்பாவணி பாடியவர்: வீரமாமுனிவர் சூழல்: இயேசு பிறந்ததும் அன்னை மரியாள் அவரை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சி … Continue reading

Posted in இயேசு, நண்பர் விருப்பம், பக்தி, பண்டிகை, பிள்ளைத்தமிழ், வீரமாமுனிவர் | 6 Comments