Monthly Archives: May 2012

இடித்துரைத்தல்

உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக் குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார்க் கொளுத்தல் மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல் நூல்: பழமொழி நானூறு பாடியவர்: முன்றுரையரையனார் அழிவில்லாத இந்த உலகத்தில் நாம் சிறந்த விஷயங்களைமட்டுமே தேடிச் செல்லவேண்டும், நல்ல அறச் செயல்களில்மட்டுமே ஈடுபடவேண்டும். யாரேனும் அப்படிச் செய்யாமல் கெட்ட வழியில் … Continue reading

Posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, வெண்பா | 11 Comments

கண்ணை இமை காப்பதுபோல்…

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர் நூல்: கம்ப ராமாயணம் (பாலகாண்டம், வேள்விப் படலம்) பாடியவர்: கம்பர் சூழல்: விசுவாமித்திரரின் யாகத்தைக் காவல் காக்கிறார்கள் ராமனும் லட்சுமணனும் விசுவாமித்திரர் செய்யத் திட்டமிட்டிருந்த யாகம், மற்ற யாராலும் செய்யமுடியாதது. … Continue reading

Posted in உவமை நயம், கம்ப ராமாயணம், கம்பர், Uncategorized | 24 Comments

பத்தும் செய்யும்

குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும், அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும், நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப் புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ? நூல்: வளையாபதி பாடியவர்: தெரியவில்லை நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? எந்தக் குலத்தில் பிறந்தவர்களையும் அது உயர்குடிமக்களாக உயர்த்திவிடும், … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், வளையாபதி | 30 Comments

பந்திக்கும் முந்து, படைக்கும் முந்து

’வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் யாம் தனக்கு உறுமுறை வளாவ விலக்கு வாய்வாள் பற்றி நின்றனன்’ என்று சினவல் ஓம்புமின் சிறு புல்லாளர், ஈண்டே போல வேண்டுவன் ஆயின் ’என்முறை வருக’ என்னான் கம்மென எழுதரு பெரும்படை விலக்கி ஆண்டு நிற்கும் ஆண்தகை அன்னே நூல்: புறநானூறு (#292) பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார் சூழல்: … Continue reading

Posted in கிண்டல், புறநானூறு, புறம், வீரம் | 26 Comments

நீ நடந்தால் நடை அழகு!

தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சலங்கைகள் கொஞ்சிட, மணித் தண்டைகள் கலின் கலின் கலின் எனத் திருவான சங்கரி மனம் குழைந்து உருக – முத்தம் தர வரும் செழுந்தளர் நடைச் சந்ததி சகம் தொழும் சரவணப் பெருமாளே! செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுறக் கந்தனை அறிந்து அறிந்தி அறிவினில் சென்று செருகும் தடம் தெளிதரத் … Continue reading

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன் | 11 Comments

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம் காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா, ஆட்டியவா நாடகம், ஆடகத் தாமரை ஆர் அணங்கே! நூல்: அபிராமி அந்தாதி (#80) பாடியவர்: அபிராமி பட்டர் தங்கத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் உயர்வானவளே, அபிராமி அன்னையே, இப்போதெல்லாம் என்னைச் … Continue reading

Posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், சினிமா, பக்தி | 6 Comments

ஓவியம் தவிர்

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியை யான் அழைத்திட, ‘ஆண் சித்திரமேல் நான் பாரேன், பாவையர்தம் உருவம் எனில் பார்க்க மனம் பொறேன்’ என்றாள், காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால் நூல்: நீதி நூல் உரை பாடியவர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்கதை மதுரையில் திருமலை நாயக்கர் ஓர் … Continue reading

Posted in அகம், ஊடல், காதல், தனிப்பாடல், நாடகம் | 18 Comments