Monthly Archives: June 2012

எழுந்தருள்!

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான், ….கனைஇருள் அகன்றது, காலை அம் பொழுதாய், மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம், ….வானவர், அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த ….இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும், ….அரங்கத்து அம்மா, பள்ளி எழுந்தருளாயே! நூல்: நாலாயிரம் … Continue reading

Posted in அருளிச் செயல், ஆசிரிய விருத்தம், ஆழ்வார்கள், திருமால், தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 29 Comments

போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ் அம் கண் உலகு அளித்தலான்! * ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்! * மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு அவன் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா | 22 Comments

துணை நீ

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே! நூல்: கந்தர் அலங்காரம் (#70) பாடியவர்: அருணகிரிநாதர் முருகா, நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் உன்னையே காணவேண்டும். … Continue reading

Posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், பக்தி, முருகன் | 29 Comments

எழுத்தெழுத்தாக…

ஏந்திய வெண்படையும், முன்னாள் எடுத்ததுவும், பூந்துகிலும், மால் உந்தி பூத்ததுவும், வாய்த்த உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றாச் சேர்க்கத் தலை, மலை, பொன், தாமரை என்றாம் நூல்: தண்டியலங்கார உதாரணம் பாடியவர்: தெரியவில்லை 1. திருமால் கையில் ஏந்திய வெள்ளைச் சங்கு 2. முன்பு ஒருநாள் கண்ணனாக அவதரித்தபோது, மக்களை மழையிலிருந்து காப்பதற்காக … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், திருமால், வார்த்தை விளையாட்டு, விஷ்ணு, வெண்பா | 7 Comments

வீரத்துக்கு மரியாதை

நகை நீ கேளாய் தோழி! அல்கல் வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது ‘அருவழி விலக்கும் எம் … Continue reading

Posted in அகநானூறு, அகம், கபிலர், குறிஞ்சி, நாடகம் | 15 Comments

வேஷமும் நிஜமும்

செய் தவ வேடம் மெய்யில் தாங்கி, கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும், வடதிசைக் குன்றம் வாய் பிளந்தன்ன கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு உய்வது கிடைத்தனன், யானே உய்தற்கு ஒரு பெரும் தவமும் உஞற்றிலன், உஞற்றாது எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பின், கூடா ஒழுக்கம் பூண்டும் வேடம் கொண்டதற்கு ஏற்ப நின் தொண்டரொடு … Continue reading

Posted in குமரகுருபரர், சிவன், பக்தி | 12 Comments

குயிலே, அவன் வரக் கூவு!

மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் ….வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன் அடி காண்பது ஓர் ஆசையால் ….பொரு கயல் கண் இணை துஞ்சா, இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி, ….எடுத்த என் கோலக் கிளியை உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே! ….உலகு அளந்தான் வரக் கூவாய்! நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / … Continue reading

Posted in அருளிச் செயல், ஆண்டாள், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி | 10 Comments