உவமையில் பலவகை

கார்மணல் ஓட்டமும், பாசிக் கொத்தும்,

மேகமும், இருளும், விரிமலர்ச் சோலையும்,

வண்டுக் கூட்டமும், மற்று ஓர் விதப் பனை

காய்த்து உள கொத்தும் கரும் குழலுக்கு இணை; அது

பின்உறில் கொன்றைக் காய் எனப் பிறங்கும்,

அவிழ்ப்பு உறில் அகத்திக் காய்க் கொத்து அனையதாம்

நூல்: அறுவகை இலக்கணம்

பாடியவர்: தவத்திரு தண்டபாணி சுவாமிகள்

பெண்களின் கரும் கூந்தலுக்கு எதையெல்லாம் உவமையாகச் சொல்லலாம்?

 • ஆற்று ஓரத்தில் படிந்துள்ள கருப்பு மணல்
 • கடல் பாசிக் கொத்து
 • மேகம்
 • இருள்
 • மலர்கள் நிறைந்த சோலை
 • வண்டுக் கூட்டம்
 • ஒரு வகைப் பனையின் கொத்தான காய்கள்
 • அந்தக் கூந்தல் பின்னிவிடப்பட்டால், கொன்றைக் காய்போல் இருக்கும்
 • பின்னாமல் அவிழ்த்துவிடப்பட்டால், அகத்திக் காய்க் கொத்துபோல் இருக்கும்
175/365
Advertisements
This entry was posted in இலக்கணம், உவமை நயம், பட்டியல். Bookmark the permalink.

11 Responses to உவமையில் பலவகை

 1. You should write about different உவம உருபுs also 🙂

  போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப நேர நிகர அன்ன….

  (Any spelling mistake is blamed on NHM writer)

 2. குடந்தை மணி says:

  தவத்திரு தண்டபாணி சுவாமிகள் அவர்கள் கூந்தலோடு நிறுத்திவிட்டாரா? அல்ல இன்னபிற இலக்கண /உவமைகளை பெண்டிருக்கு இட்டு சென்றுள்ளாரா?

  உங்களின் தினம் ஒரு பாவில், பாடல் எழுதப்பட்ட காலத்தையும் சேர்த்தால் நன்றாக இருக்கும்!

  • GiRa says:

   கூந்தலோட நிறுத்தல தண்டபாணி சுவாமிகள். இன்னும் சொல்லியிருக்காரு. அணியிலக்கணம் பகுதியில் நெறைய பல தகவல்களை ஓரளவு நமக்குப் புரியும் தமிழில் சொல்லீருக்காரு.

 3. GiRa says:

  நூலின் பெயரும் ஆசிரியரின் பெயரும் புதிதாக இருக்கிறதே என்று தகவல்களைத் தேடினால் வியப்புதான் மிஞ்சியது.

  நூறு ஆண்டுகளுக்கு முன்னம் வாழ்ந்த புலவர் தவத்திரு தண்டபாணி சுவாமிகள்.

  அரும் பெரும் முருக பக்தரான இவரின் தமிழ்த்தொண்டுகளும் சிறப்பானவை. 

  அறுவகை இலக்கண நூல் காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். புரியும் எளிய தமிழில் இலக்கணத்தைக் கற்றுத் தரும் இனிய நூல். தொல்காப்பியம் தெரிவது நன்றே. அதைப்படிப்பது கடினமாயின் அறுவகை இலக்கண நூலைப் படிப்பது மிக நன்று.

 4. GiRa says:

  தவத்திரு தண்டபாணி சுவாமிகள் புலவர் புராணமும் எழுதியதாகத் தெரிகிறது. அந்நூலையும் தேடிப் பார்க்க வேண்டும்.

  கிட்டத்தட்ட ஒரு அகராதி எழுதீருக்காரு புலவர். பாட்டெழுதுறவங்க இதப்படிச்சா நெறைய எழுதலாம்.

  எனக்கு ரொம்பப் பிடிச்சது கார்மணல் ஓட்டமும் என்ற் உவமை. இத வண்டல்மண் பிரதேசத்துலதான் பாக்க முடியும்.

  ஆத்தோரமா பாத்தா கருப்பா வண்டல்மண் படிஞ்சி அழகாயிருக்கும். மலேசியாவுல லங்காவியில black sand beachனு இருக்கு. அங்கயும் பாக்கலாம்.

  பனம்பழம் வெளிய கருப்பா இருக்கும். உள்ள பொன்னிறத்துல இருக்கும். சின்ன வயசுல நெறையா சாப்டிருக்கேன்.

  பனமரத்துல அன்னாந்து பாத்தா கொத்துக்கொத்தா பனம்பழங்கள் இருக்கும். அதத்தான் இன்னொரு உவமையாச் சொல்றாரு.

 5. amas32 says:

  கருங்கூந்தலுக்கு தான் என்ன அலாதியான உவமைகள்! என்னை மிகவும் கவர்ந்த உவமை, கார்மணல் ஓட்டமும் – ஆற்று ஓரத்தில் படிந்துள்ள கருப்பு மணல். அந்த கருப்பு மணல் அலை அலையாக பார்க்க மிகவும் அழகாக இருக்கும். மேகமும், இருளும் பல கவிஞர்கள் கையாண்ட உவமை தான். மலர்கள் நிறைந்த சோலை, பெண்ணுக்குப் பெருமை தரும் ஒரு உவமை! வண்டு கூட்டம், என்பது இங்கே கரு வண்டு கூட்டம், அதுவும் இயல்பான ஒரு உவமை. கூந்தலை பின்னி விட்டால் அதற்கு ஒரு உவமை, பிரித்து விட்ட கூந்தலுக்கு இன்னுமொரு உவமை என்று அசத்தியிருக்கார் பெரும் முருக பக்தரான புலவர் தவத்திரு தண்டபாணி சுவாமிகள். திரு சொக்கன், நன்றி இப்பாடாலை பதிவு செய்து விளக்கமும் கொடுத்ததற்கு.
  amas32

 6. பொன்னோங்கற் கோவும் பொதியைப்
  பிரானும் புகழ்முருகோன்
  நல்நோன்பு நோற்கும் பயனே
  புலமைநலம் எனத் தேர்ந்து
  எல்நோக்கித் தெண்டன் இடுவாருக்கு
  ஆம்இவ் விலக்கணநூல்
  முன்னோர் மொழியைப் பெருக்கிக்
  குறுக்கி மொழிவதன்றே.

  என்ன அழகா அறுவகை இலக்கணத்துக்குத் தண்டபாணி சுவாமிகள் காப்பு பாடியுள்ளார்…. தொல்காப்பியத்தின் ஐவகை இலக்கணத்தில் மறைபடு பொருளாக நின்றியம்பியவற்றைப் பாடுவதே அறுவகை இலக்கணம் என்ற சிறப்பை உணர வைத்ததற்குச் சங்கத் தலைவர் சொக்கருக்கு நன்றி..

 7. பொண்ணு கூந்தல்!
  பின்னி விட்டா = கொன்றை= http://goo.gl/Azic9
  பின்னாம விட்டா = அகத்தி= http://goo.gl/FbJ6Z
  தமிழில் உவமை நயம்!

  • amas32 says:

   KRS,Thanks for the visual effect. Very nice 🙂
   amas32

   • :)))
    I always show lotsa pictures in my presentations and then a few words!
    Rest – Listeners will extend on their own!:)

    சங்கத் தமிழ்க் கவிதைகளில் இந்தச் சொல் அடர்த்தி ரொம்பவே உண்டு!
    வர்ணனை – பாதி தான் பாட்டுல இருக்கும்!
    மீதி வாசிப்பவர் மனங்களில்! 🙂

   • ஒரு கருத்தை விளக்கலாம்!
    ஆனா காட்சியை ரொம்ப விளக்கவே கூடாது!

    பதவுரையா? இதவுரையா?-ன்னா, நான் இதவுரைக் கட்சி!:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s