About

ட்விட்டரில் நிறைய ‘365’ ப்ராஜெக்ட்களைப் பார்க்கிறேன். குறிப்பாக, நண்பர் ஸ்கான்மேன் (டாக்டர் விஜய் – http://www.twitter.com/scanman)  தினம் ஒரு ஃபோட்டோ எடுத்து வலையேற்றும் ப்ராஜெக்ட் மிகச் சுவாரஸ்யமானது.

எனக்குப் புகைப்பட ஞானம் கிடையாது. ஆகவே, எனக்குத் தெரிந்த எதையாவது செய்யலாம் என்று நினைத்தேன் – இந்த வலைப்பதிவில் தினம் ஒரு பழம்பாடலைத் தேர்ந்தெடுத்து எளிய / சிறிய விளக்கத்தோடு எழுதலாம் என்று யோசனை. முடிகிறதா பார்க்கலாம்!

சில முன்னெச்சரிக்கைகள்:

 • நான் பழம்பாடல் பிரியன்மட்டுமே, மற்றபடி கவிதை விஷயத்தில் எனது அழகுணர்ச்சி ரொம்பக் குறைவு, நேரடிப் பொருளில்மட்டுமே திருப்தி அடைந்துவிடுகிறவன் – ஆகவே, இந்தப் பாடல்களில் தென்படும் நுணுக்கமான அழகியல் அம்சங்களை / இறைச்சிப் பொருள்களை / மாற்று அர்த்தங்களை என்னால் வியந்து பாராட்டமுடியாமல் போகலாம், அப்படி நான் தவறவிடும் விஷயங்களை நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்
 • இங்கே நான் எழுதுகிற விளக்கங்கள் எனக்குப் புரிந்த அளவில்மட்டுமே, தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் – சுட்டிக்காட்டினால் நிச்சயம் திருத்திக்கொள்வேன்
 • இந்த விளக்கங்கள் பண்டித மொழிநடையிலன்றி சகஜமான உரையாடல் பாணியில்தான் இருக்கும், தேவைப்பட்டால் எங்கேயாவது ஆங்கிலம்கூடக் கலந்திருக்கும், கோபப்படவேண்டாம், மொழிச் சுத்தத்தைவிட, வாசிப்பு இலகுவாக இருப்பதுதான் முக்கியம் என்பது என் கட்சி!
 • இந்தப் பாடல்களைத் தேர்ந்தெடுக்க நான் எந்தக் கண்டிப்பான வரையறைகளையும் வைத்துக்கொள்ளப்போவதில்லை – தினமும் ஒரு தமிழ்ப் பாடல் என்பதைத் தவிர. ஆகவே, இதை எப்படி விடப்போச்சு, அதை எப்படிச் சேர்க்கலாம், இந்தப் பாட்டைவிட அந்தப் பாட்டு பெட்டர் என்றெல்லாம் தயவுசெய்து கோபப்படாதீர்கள், அப்படிக் கவனித்து, எடைபோட்டுத் தொகுப்பதெல்லாம் டெய்லி ப்ராஜெக்டுக்குச் சரிப்படாது
 • வேறு முன்னெச்சரிக்கைகள் அவ்வப்போது சேர்க்கப்படும், ஜாக்கிரதை :>

பின்னெச்சரிக்கை ஒன்று:

 • ’எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை?’ என்று யோசித்தீர்களானால் உங்களுக்குத் தமிழ் இணையம் புதுசு என்று அர்த்தம் ;)

***

என். சொக்கன் …

06 07 2011

Advertisements

19 Responses to About

 1. Pingback: புது வூடு « மனம் போன போக்கில்

 2. natbas says:

  நன்றி.

  வாழ்த்துகள்.

  • என். சொக்கன் says:

   நன்றி

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 3. //வாசிப்பு இலகுவாக இருப்பதுதான் முக்கியம் என்பது என் கட்சி!//

  நானும் உங்க கட்சிதான்.

  • என். சொக்கன் says:

   நன்றி பிரபு கிருஷ்ணா

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 4. N.Rathna Vel says:

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • என். சொக்கன் says:

   நன்றி ரத்னவேல்

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 5. வாவ்… கலக்கல்! வாழ்த்துகள் சொக்கன்!

  >> இந்த விளக்கங்கள் பண்டித மொழிநடையிலன்றி சகஜமான உரையாடல் பாணியில்தான் இருக்கும், தேவைப்பட்டால் எங்கேயாவது ஆங்கிலம்கூடக் கலந்திருக்கும், கோபப்படவேண்டாம், மொழிச் சுத்தத்தைவிட, வாசிப்பு இலகுவாக இருப்பதுதான் முக்கியம் என்பது என் கட்சி<>உங்களுக்குத் தமிழ் இணையம் புதுசு என்று அர்த்தம் << – :))

  • என். சொக்கன் says:

   நன்றி ஸ்ரீதர் 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 6. Disclaimer illaamal pathivu podak koodaathu.
  blogworld’s rule.:)
  expecting yr songs.

 7. balaraman says:

  //எதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை?’ என்று யோசித்தீர்களானால் உங்களுக்குத் தமிழ் இணையம் புதுசு என்று அர்த்தம்// பின்னீட்டீங்க! 😀

  நல்ல முயற்சி! வாழ்த்துகள்! 🙂

 8. ரொம்ப நல்ல முயற்சி ! வாழ்த்துக்கள். நிறைய எழுதியிருக்கீறீர்கள், அனைத்தையும் இன்றே படிக்க ஆசை ! தங்கள் தளத்தை இணைப்பு பட்டியலில் இனைக்கிறேன்.

  ~குரு

 9. T.P.Anand says:

  இது ஒரு நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்

 10. ரொம்ப நன்றி. இதில் அ. இர. இரகுமான் பாட்டு எப்பொழுது வருமென்று காத்திருப்போம். 🙂

 11. R. NAGARAJAN says:

  இருப்பள் – ஆய கலைகள் பாடல் அம்பிகாபதி (MKT மற்றும் சிவாஜி கணேசன் நடித்தவை) படத்தினில் கூட
  இடம் பெற்று இருக்கின்றன.

 12. kettavan says:

  சகோதரர் திரு. சொக்கன் அவர்களுக்கு,

  இனிய வணக்கங்களும் எனது வாழ்த்துக்களும்!!!!

  இன்னிக்குதான் உங்க வெப்சைட்ட பார்த்தேன்.

  பாடல்கள் புரியல, காரணம் அது வேற மொழியில இருக்கு.

  நல்லவேளை விளக்கமிருந்திச்சு. தமிழும் ஆங்கிலமும் கற்றுக்கொள்ள இலகுவா இருக்கு.

  நாளைக்கு ஒரு முறையாவது, எட்டி பார்த்து மொழிகளையும், பண்புகளையும் மற்றும் நாகரீகத்தையும் கத்துகிறேன்.

  மன்னிக்கனும்

  கற்றுக்கொள்கிறேன்.

  அன்புடன்,

  கெட்டவன்.

 13. karthikeyansethuraman says:

  இந்த வலை பகுதியை படிக்கும் பொது வாழ்க்கையில் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s