Monthly Archives: July 2011

நட்பைக்கூட நெருப்பைப்போல எண்ணுவேன்

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம் இல்லத்தில் ஆக்குத லால் நூல்: நாலடியார் (#225) பாடியவர்: சமண முனிவர்கள் ’சுருக்’ விளக்கம்: சிநேகிதர்கள் பிழை செய்தால் கோபப்படாதீர்கள், ‘நண்பேன்டா’ என்று அட்ஜஸ்ட் செய்து போங்கள் முழு விளக்கம்: (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் … Continue reading

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சமணம், நட்பு, நாலடியார் | 3 Comments

மாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் சூழல் / சிறப்பு: இந்தப் பாடல் ‘மாலை மாற்று’ என்ற வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் Palindrome என்று சொல்வார்கள் – ஒரு மாலையில் மணிகளைக் கோர்த்தபின்னர் எந்தப் பக்கத்திலிருந்து (கடிகார, எதிர்க் கடிகாரச் சுழற்சியில்) பார்த்தாலும் அந்த மாலை … Continue reading

Posted in சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், நண்பர் விருப்பம், பக்தி, வார்த்தை விளையாட்டு | 12 Comments

மாலை என் வேதனை கூட்டுதடி

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாயாகப் பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர நிலவுக் காண்பது போல அணி மதி ஏர் தர கண் பாயல் போல் கணைக் கால மலர் கூம்ப தம் புகழ் கேட்டார் போல் தலை … Continue reading

Posted in அகம், கலித்தொகை, தோழி, நெய்தல், பிரிவு, பெண்மொழி, மாலை | Leave a comment

கவிகள்

வால் எங்கே? நீண்ட வயிறு எங்கே? முன் இரண்டு கால் எங்கே? உள்குழிந்த கண் எங்கே? சாலப் புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர் கவிராயர் என்று இருந்தக்கால் நூல்: தனிப்பாடல் பாடியவர்: காளமேகம் சூழல்: சில புலவர்கள் தங்களைக் ‘கவிராயர்கள்’ என்று திமிருடன் சொல்லிக்கொண்டார்கள். குறும்புக்காரரான காளமேகம் அவர்களைப் பார்த்துப் பாடுகிறார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் … Continue reading

Posted in அவமதிப்பு, கதை கேளு கதை கேளு, காளமேகம், கிண்டல், குறும்பு, சிலேடை, தனிப்பாடல் | 3 Comments

தரிசனம் கிடைக்காதா

பேணும் கொழுநர் பிழைகள் எலாம் ……….பிரிந்தபொழுது நினைத்து அவரைக் காணும்பொழுது மறந்திருப்பீர்! ……….கன பொன் கபாடம் திறமினோ! * ’வருவார் கொழுநர்’ எனத் திறந்தும் ……….’வாரார் கொழுநர்’ என அடைத்தும் திருகும் குடுமி விடியளவும் ……….தேயும் கபாடம் திறமினோ! * செக்கச் சிவந்த கழுநீரும் ……….செகத்தில் இளைஞர் ஆர்உயிரும் ஒக்கச் சொருகும் குழல் மடவீர்! ……….உம் … Continue reading

Posted in அகம், ஆண்மொழி, ஊடல், கலிங்கத்துப் பரணி, பரணி | 14 Comments

கண்டேன் சீதையை

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன் மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய தையலை நோக்கிய தலையன், கை கொடு வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான். * திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் ’வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று’ எனக் கொண்டனன், குறிப்பினால் உணரும் … Continue reading

Posted in அனுமன், கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், ராமன் | 5 Comments

நோய் செய்தவன்

அறியாமையின் ‘வெறி’ என மயங்கி அன்னையும் அரும்துயர் உழந்தனள்; அதனால் எய்யாது விடுதலோ கொடிதே – நிரைஇதழ் ஆய்மலர் உண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே! நூல்: ஐங்குறுநூறு (#242) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை – ஒரு பெண் காதல்வயப்பட்டாள், அதனால் அவள் உடம்பில், பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்ட தாய் … Continue reading

Posted in அகம், ஐங்குறுநூறு, கபிலர், காதல், குறிஞ்சி, தோழி, பெண்மொழி | 1 Comment