Monthly Archives: September 2011

இளைத்தேன்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் …..வாடினேன், பசியினால் இளைத்தே வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த …..வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் …..நேர் உறக் கண்டு உளம் துடித்தேன் ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு …..இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன். நூல்: திருவருட்பா (#3471) பாடியவர்: இராமலிங்க வள்ளலார் (மிகச் … Continue reading

Posted in கருணை, திருவருட்பா, நவரசங்கள், வள்ளலார் | 14 Comments

கீச்சுக் கீச்சு

காணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன் கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல் பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச்சு என்னும் கிளி. நூல்: தனிப்பாடல் பாடியவர்: ஔவையார் சூழல்: சோழன் சபை. அரைகுறை ஞானம் கொண்ட சில புலவர்கள் அலட்டலாகத் தங்களுடைய புகழைத் தாங்களே ‘பாடி’க்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த ஔவையாருக்குச் சிரிப்புதான் வந்தது. இந்தப் பாடலைப் … Continue reading

Posted in ஔவையார், கிண்டல், குறும்பு, தனிப்பாடல், நவரசங்கள், வெண்பா | 11 Comments

அஞ்சாதே

குவளை நாறும் குவை இரும் கூந்தல் ஆம்பல் நாறும் தேன் பொதி துவர் வாய் குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன துண் பல் தித்தி, மாஅயோயே நீயே, ‘அஞ்சல்’ என்ற என் சொல் அஞ்சலையே யானே, குறுங்கால் அன்னம் குவவு மணல் சேர்க்கும் கடல் சூழ் மண்டலம் பெறினும், விடல் சூழலன் யான், நின்னுடை … Continue reading

Posted in காதல், குறிஞ்சி, குறுந்தொகை, நவரசங்கள், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் | 6 Comments

அவன் உரை

அட்டு ஆனானே குட்டுவன் அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து வளிமுனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் சொரிசுரை கவரு நெய்வழிபு உராலின் பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல நல்நுதல் விறலியர் ஆடும் தொல் நகர் வரைப் பின் அவன் உரை ஆனாவே நூல்: பதிற்றுப் பத்து (#47) … Continue reading

Posted in சிவன், சேரன், பதிற்றுப்பத்து, புறம் | 1 Comment

யானும் புலவனா?

அறம் உரைத்தானும் புலவன்;முப் பாலின் திறம் உரைத்தானும் புலவன் – குறுமுனி தானும் புலவன்; தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனில்! நூல்: தனிப்பாடல் பாடியவர்: பொய்யாமொழிப் புலவர் சூழல்: இப்பாடல் குறித்து ஒரு கதை உண்டு. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பலமுறை விளக்கியுள்ள அந்தக் கதையையே இதன் சூழலாகக் கொள்ளலாம் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, தனிப்பாடல், தன்னடக்கம், தமிழ், நாடகம், வெண்பா | 3 Comments

சீர் இளமைத் திறம் வியந்து

பல்உயிரும் பல உலகும் ….படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர் எல்லைஅறு பரம்பொருள்முன் ….இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் ….கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்து எழுந்தே ….ஒன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு ….அழிந்து ஒழிந்து சிதையா உன் சீர் இளமைத் திறம்வியந்து ….செயல்மறந்து வாழ்த்துதுமே! நூல்: மனோன்மணீயம் பாடியவர்: சுந்தரம் பிள்ளை (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் … Continue reading

Posted in தமிழ், நாடகம், மனோன்மணீயம், வாழ்த்து | 6 Comments

ஞாயிறு கடல் கண்டாஅங்கு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள் செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை மறு இல் கற்பின் வாள்நுதல் கணவன் நூல்: திருமுருகாற்றுப்படை (வரிகள் 1 முதல் 6 … Continue reading

Posted in நக்கீரர், நண்பர் விருப்பம், பக்தி, முருகன் | 27 Comments