Monthly Archives: February 2012

ஆடல் மகளிர்

ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார் தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ கருங்கோட்டிச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப… நூல்: நெடுநல்வாடை (வரிகள் 67 முதல் 70வரை) பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் சூழல்: வாகைத் திணை, கூதிர்ப் பாசறை, அதாவது ஐப்பசி, கார்த்திகை … Continue reading

Posted in நாடகம், புறம், வர்ணனை | 11 Comments

யாருக்குப் பைத்தியம்?

பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு கழிப் பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடை சேப்பின் உள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை மைதபு கிளர் கொட்டை மாண்பதிப் படர்தரூஉம் கொய்குழை அகைகாஞ்சித் துறை அணி நல் ஊர! அன்பிலன், அறனிலன் எனப்படான் என ஏத்தி நின் புகழ் பல பாடும் … Continue reading

Posted in அகம், ஊடல், கலித்தொகை, கோபம், சினிமா | 12 Comments

எங்கொள்வன்?

உள்ளன மற்று உள் ஆப் புறமே சில மாயம் சொல்லி ’வள்ளல் மணிவண்ணனே’ என்று என்றே உனையும் வஞ்சிக்கும் கள்ள மனம் தவிர்ந்தே உனைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன், வெள்ளத்து அணை கிடந்தாய், இனி உன்னை விட்டு எங்கொள்வனே? நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் / ஆழ்வார் அருளிச் செயல் பாடியவர்: நம்மாழ்வார் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பெருமாளே, … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நம்மாழ்வார், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, விஷ்ணு | 9 Comments

முன்றில், கறுப்பு, சிவப்பு

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! * கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள நிறத்துறு உணர்த்தற்கும் உரிய என்ப! நூல்: தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் & சொல்லதிகாரம்) பாடியவர்: தொல்காப்பியர் ’முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும் அதாவது, முன் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம் | 21 Comments

குருநாதா!

அபகார நிந்தை பட்டு உழலாதே ….அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே ….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ! இபமாமுகன் தனக்கு இளையோனே, ….இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, ….திரு ஆவினன்குடிப் பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் முருகா, யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற … Continue reading

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன் | 5 Comments

பாட்டுப் பாடத் தெரியுமா?

கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே. முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு, முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர், யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. நூல்: புறநானூறு (#110) பாடியவர்: கபிலர் சூழல்: நொச்சித் திணை, மீதி விவரம் ‘முன்கதை’யில் காண்க முன்கதை பறம்பு … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, கபிலர், கிண்டல், புறநானூறு, புறம், வீரம் | 15 Comments

க(வி)சடதபற

துடித்துத் தடித்துத் துடுப்பு எடுத்த கோடல் தொடுத்த தொடை கடுக்கை பொன்போல் பொடித்துத் தொடை படைத்த தோள் துடித்த தோகை கூத்தாடக் கடி படைத்துக் காட்டித்துக் காடு நூல்: தனிப்பாடல் பாடியவர்: காளமேகம் காந்தள் மலர்கள் ஒளி பொருந்திய அரும்புகளை முளைக்கவிட்டன. கொன்றை மலர்கள் பொன் போல் ஒளிர்கின்ற மாலைகளைத் தொங்கவிட்டன. தோகை மயில்கள் கூத்தாடத் … Continue reading

Posted in காளமேகம், தனிப்பாடல், வர்ணனை, வார்த்தை விளையாட்டு, வெண்பா | 12 Comments