Monthly Archives: January 2012

ஆயிரம் இராமர்

கேட்டனன் கிராதர் வேந்தன், கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி, மீட்டும் மண் அதில் வீழ்ந்தான், விம்மினன், உவகை வீங்க, தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில் பூட்டிய கையன், பொய் இல் உள்ளத்தன், புகலல் உற்றான். * ’தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை, என்ற … Continue reading

Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், நாடகம், ராமன் | 9 Comments

ஆடுகிறோம், பாடுகிறோம்!

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே, ….அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே, ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே, ….உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே, பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே, ….பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே, காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே, ….காண்பார் ஆர் கண் நுதலாய் காட்டாக்காலே? நூல்: தேவாரம் பாடியவர்: திருநாவுக்கரசர் நெற்றியில் கண் கொண்ட … Continue reading

Posted in சிவன், திருநாவுக்கரசர், தேவாரம், பக்தி | 7 Comments

கேள், யோசி, செய்

நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை! இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்! களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி விருந்தின் புன்கண் நோவு உடையர்! கேட்டனை, ஆயின், நீ வேட்டது … Continue reading

Posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, சோழன், புறநானூறு, புறம் | 5 Comments

விருந்தினர் போற்றுதும்

தடமருப்பு எருமை மட நடைக் குழவி தூண் தொறும் யாத்த காண் தகு நல் இல் கொடும் குழை பெய்த செழும் செய் பேழை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப வாழை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் … Continue reading

Posted in அகம், காதல், நற்றிணை, நாடகம், மருதம் | 10 Comments

நானே!

’காண்கின்ற நிலம் எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற விசும்பு எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற இக் காற்று எல்லாம் யானே’ என்னும், ‘காண்கின்ற கடல் எல்லாம் யானே’ என்னும், காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொல்லோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்? காண்கின்ற என் காரிகை செய்கின்றனவே … Continue reading

Posted in அருளிச் செயல், ஆழ்வார்கள், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, விஷ்ணு, Uncategorized | 10 Comments

தள்ளார்

தாரினை விருப்பமாகத் ….தலைதனில் முடிக்கும்தோறும் நாரினைப் பொல்லாது என்றே ….ஞாலத்தார் தள்ளுவாரோ? சீரிய தமிழ் மாலைக்குள் ….செல்வர் குற்றாலத்து ஈசர் பேரினால் எனது சொல்லைப் ….பெரியவர் தள்ளார் தாமே! நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி பாடியவர்: திரிகூடராசப்பக் கவிராயர் சூழல்: அவை அடக்கம் மலர் மாலையில் உள்ள பூக்கள் நன்கு மணம் வீசும், அழகாகக் காட்சியளிக்கும், … Continue reading

Posted in அவை அடக்கம், சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி | 4 Comments

கரும்பை எப்படிச் சாப்பிடுவீர்கள்?

கனைகடல் தண்சேர்ப்ப! கற்று அறிந்தோர் கேண்மை நுனியின் கரும்பு தின்று அற்றே, நுனிநீக்கித் தூரின் தின்று அன்ன தகைத்தரோ பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு நூல்: நாலடியார் பாடியவர்: சமண முனிவர்கள் ஒலி செய்யும் கடலின் குளிர்ச்சியான துறையைச் சேர்ந்தவனே, நன்கு படித்து அறிந்தவர்களுடன் நீ பழகினால், ஒரு கரும்பை நுனியிலிருந்து சாப்பிடுவதுபோல அந்த … Continue reading

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், நட்பு, நாலடியார், வெண்பா | 5 Comments