Monthly Archives: April 2012

செங்கோடமர்ந்தவனே

கந்தா, அரன் தன் மைந்தா, விளங்கு ….கன்று ஆ முகுந்தன் மருகோனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட ….கண்டா, அரம்பை மணவாளா, செந்தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு ….திண் தோள் நிரம்ப அணிவோனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும் ….செங்கோடு அமர்ந்த பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் கந்தா, சிவபெருமானுடைய மகனே, … Continue reading

Posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், திருமால், பக்தி, முருகன் | 5 Comments

கொம்பும் பழமும்

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! யார் அஃது அறிந்திசினோரே? சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள் உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே நூல்: குறுந்தொகை (#18) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை : காதலியை இரவில் சந்தித்துத் திரும்பினான் காதலன். அவனை வழிமறித்துத் தோழி சொன்னது மலைச்சாரல் நாட்டைச் … Continue reading

Posted in அகம், உவமை நயம், கபிலர், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி | 8 Comments

பாட்டின் இலக்கணம்

அறம் முதல் நான்கு என்றும், அகம் முதல் நான்கு என்றும் திறன் அமைந்த செம்மைப் பொருள்மேல் குறைவு இன்றி செய்யப் படுதலால் செய்யுள், செயிர் தீரப் பையத் தாம் பாவுதலால் பா நூல்: யாப்பருங்கலக் காரிகை (செய்யுளியல்) பாடியவர்: அமுதசாகரர் அறம் முதலான நான்கு உறுதிப்பொருள்களையும், அகம் முதலான நான்கு வகைத் தலைப்புகளையும் நன்றாக ஆராய்ந்து, … Continue reading

Posted in இலக்கணம், யாப்பருங்கலக் காரிகை, வெண்பா | 5 Comments

ஆயிரம் அம்புகள் உண்டு

வருகிறானோ, வாரானோ சுக்ரீவன் மனதை அறிந்துவாராய் தம்பீ! * திருகு சொன்னால் அவன் குலம் ஒன்றும் வெட்டுவேனோ சித்திரத்தினும் குரங்கை வைத்து எழுத ஒட்டுவேனோ * தருணத்தில் உதவியை மறந்தானே மதம் கொண்டு தண்ணீரும் முக்கால் பிழை பொறுக்கும் அல்லவோ கண்டு மரபுக்குச் சற்றே இன்னம் பார்க்கவேணுமே பண்டு வாலியைக் கொன்ற அம்புபோல் ஆயிரம் அம்புகள் … Continue reading

Posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, நாடகம், ராமன் | 9 Comments

மூங்கிலுக்குள் ஈரம்

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால் திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே! நூல்: திருவாசகம் (ஆனந்த பரவசம் #89) பாடியவர்: மாணிக்க வாசகர் பொய்யான மாயைகளை … Continue reading

Posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர் | 2 Comments

தங்கச் சோறு

மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு நீர் உலையுள் பொன் தந்து கொண்டு புகாவாக நல்கினாள் ஒன்று உறா முன்றிலோ இல் நூல்: பழமொழி நானூறு (#381) பாடியவர்: முன்றுரையரையனார் வள்ளல் பாரியின் நாட்டில் பெரும் பஞ்சம். மழையே இல்லை. வயல்களெல்லாம் வறண்டு காணப்பட்டன. அப்போது, பாரியுடைய அரண்மனைக்குச் சில … Continue reading

Posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, பழமொழி நானூறு, வள்ளல், வெண்பா | 6 Comments

காட்டுவழி போற பையா, கவலைப்படாதே!

கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி இரும் பிணத் தடக் கை நீட்டி, நீர் நொண்டு பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் நெடுநிலை யாஅம் ஏறும் தொழில பிறர்க்கு … Continue reading

Posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், காதல், நற்றிணை, பாலை, பிரிவு, பெண்மொழி | 6 Comments