செருக்கு

பிறர் தன்னைப் பேணும்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறில் பொறையும், அறவினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்

ஊர் ஆண்மை என்னும் செருக்கு

நூல்: திரிகடுகம் (#7)

பாடியவர்: நல்லாதனார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

1. மற்றவர்கள் தங்களை அளவுக்கு மீறிப் புகழும்போது, அதை நினைத்துக் கூச்சப்படுவது

2. எதிரிகள் தங்களை அளவுக்கு மீறி இழிவுபடுத்தும்போது (திறமையைக் குறைத்துச் சொல்லும்போது) கோபப்படாமல் பொறுமையாக இருப்பது

3. மழை பொழியும் மேகத்தைப்போல, எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்வது

இந்த மூன்று குணங்களும் உயர்வான செல்வங்கள்!

துக்கடா

  • இதில் #2, #3கூட ஓகே, அந்த #1தான் பலருக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது 😉
  • கார் ஆண்மை, ஊர் ஆண்மைபோல, ‘நாட்டு ஆண்மை’கூட உண்டு, தெரியுமா? அதுதான் இப்போது ‘நாட்டாம (தீர்ப்ப மாத்திச் சொல்லு)’ என்று திரிந்துவிட்டது :>
  • இன்றைய பாடலின் வெண்பா வடிவம்:
  • பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
  • திறன்வேறு கூறில் பொறையும், அறவினையைக்
  • காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்
  • ஊராண்மை என்னும் செருக்கு

174/365

Advertisements
This entry was posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா. Bookmark the permalink.

3 Responses to செருக்கு

  1. nvaanathi says:

    பாட்டு ஞாபகத்தில் இருக்கோ இல்லையோ, திரிகடுகம் என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது, சுக்கு., மிளகு, திப்பிலி இவை மூன்றும் தான். #வாழ்க தமிழ்வழிக் கல்வி. (நிஜமாவே) :)))

  2. Samudra says:

    உங்கள் சேவை தொடரட்டும்

  3. amas32 says:

    புகழுக்கு மயங்காதார் யார்:-) ஒரு வார்த்தை நம்மை பற்றி நல்லதா சொல்லிட்டா அப்படியொரு இன்பம்! பின்னாடியே இதை கொஞ்சம் முடிச்சு கொடுக்கறீங்களா என்று கேட்பர், அதற்கு தான் அந்த முகஸ்துதி என்று கூட புரியாத அளவு நமக்கு ஒரு மயக்கம் வரும். இதில் வெகு சிலரே புகழ்ச்சியை உண்மையிலேயே விரும்பாதவர்.
    கோபப்படாமல் இருப்பதும் வெகுக் கடினம். அதுவும் பிறர் நம்மை இழிவாகப் பேசினாலோ நடத்தினாலோ கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். பொறுத்தார் பூமியாள்வார் என்பதெல்லாம் பிறருக்கு அறிவுரை சொல்வதற்கு மட்டுமே பயன்படும். எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் நன்மை மட்டுமே எளிதானது. ஆனால் முதல் இரண்டு குணங்களையும் நிச்சயமாகப் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு நல்லது, பிறரிடம் ஏமாற மாட்டோம், BPஏறாது!
    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s