Monthly Archives: November 2011

துள்ளிக் கொள்வோமே

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி … மலை ….யாள மின்னல், ஈழ மின்னல் ….சூழ மின்னுதே! நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே … கேணி ….நீர்ப்படு சொறித் தவளை ….கூப்பிடு குதே. சேற்று நண்டு சேற்றைக் குழைத்து ஏற்று அடைக்குதே … மழை ….தேடி ஒரு கோடி வானம் ….பாடி … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், இயற்கை, நண்பர் விருப்பம், பள்ளு, வர்ணனை | 14 Comments

ஆசைப்பட்டேன்

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யாது என் தன் தலைமேல் வைத்து ’எம் பெருமான், பெருமான்’ என்று ஐயா என் தன் வாயால் அரற்றி அழல் சேர் மெழுகு ஒப்ப ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே! நூல்: திருவாசகம் (ஆசைப்பத்து #8) பாடியவர்: மாணிக்கவாசகர் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய … Continue reading

Posted in சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர் | 4 Comments

நெஞ்சு அறியாள்

கோள் தேங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என் வேட்டு அங்குச் சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறும் கூடு காவல் கொண்டாள் நூல்: முத்தொள்ளாயிரம் பாடியவர்: தெரியவில்லை (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) தென்னை மரங்களில் தேங்காய்கள் குலைகுலையாகக் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா | 6 Comments

நான்மாடக் கூடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப் புலவர் புலக்கோலால் தூக்க … உலகு அனைத்தும் தான் வாட, வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக் கூடல் நகர். நூல்: பரிபாடல் திரட்டு (#6) / புறத்திரட்டு பாடியவர்: தெரியவில்லை (இது உரை அல்ல. கதைக்கு நடுவே உரையைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்!) முன்பு ஒருநாள், புலவர்களுக்கெல்லாம் ஒரு … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உயர்வு நவிற்சி அணி, கதை கேளு கதை கேளு, பரிபாடல், வெண்பா | 6 Comments

அரும் பொருளே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த் தாள், எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே, அருளே, உமையே, இமயத்து அன்றும் பிறந்தவளே, அழியா முத்தி ஆனந்தமே! நூல்: அபிராமி அந்தாதி (#10) பாடியவர்: அபிராமி பட்டர் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் … Continue reading

Posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், பக்தி, வர்ணனை | 5 Comments

இளம்பெயர்கள்

மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே நூல்: தொல்காப்பியம் (மரபியல், பாடல் #1) பாடியவர்: தொல்காப்பியர் மரபு வழியை மாற்றுவது கடினம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, தமிழில் உள்ள இளமைப் பெயர்கள் ஒன்பது: பார்ப்பு பறழ் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல் | 12 Comments

எண்ணிப் பார்

இத்தாழ் பணையில் இரும் தான்றிக் காய் எண்ணில் பத்தாயிரம் கோடி பார் என்ன … உத்ததனில் தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சபை நடுவே தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் நூல்: நளவெண்பா பாடியவர்: புகழேந்தியார் சூழல்: ருதுபன்னன் என்ற அரசனுக்காகத் தேர் ஓட்டுகிறான் நளன். அப்படி ஒரு பயணத்தின்போது நடக்கும் காட்சி இது … Continue reading

Posted in நளவெண்பா, நாடகம், வெண்பா | 6 Comments