Category Archives: பண்டிகை

பிள்ளை முருகன்

அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ….’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும், ….அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் ….விளங்கு கண் எண்ணினன்’ என, வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும் ….விகடம் ஏன் செய்தாய்?’ என, ’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ … Continue reading

Posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன் | 12 Comments

நம் தவம்!

’நங்கை என் நோற்றாள் கொல்லோ நம்பியைத் திளைத்தற்கு’ என்பர், ’மங்கையை மணப்பான் என்னோ வள்ளலும் நோற்றான்’ என்பர், ’அம் கடி மதுரை என்னோ ஆற்றிய தவம்தான்’ என்பார் ’இங்கு இவர் வதுவை காண்பான் என்ன நாம் நோற்றோம்’ என்பார் நூல்: திருவிளையாடல் புராணம் (திருமணப் படலம்) பாடியவர்: பரஞ்சோதி முனிவர் சூழல்: மீனாட்சி திருக்கல்யாணம் ’ஆண்களில் … Continue reading

Posted in சிவன், பக்தி, பண்டிகை | 8 Comments

கோசலையின் கொழுந்து

ஒரு பகல் உலகு எலாம் ….உதரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வு ….அரும் அவனை, அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் ….காட்டும் சோதியை திரு உறப் பயந்தனள் ….திறம் கொள் கோசலை நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம் பாடியவர்: கம்பர் சூழல்: ராமன் பிறக்கும் காட்சி பிரளயத்தின்போது எல்லா … Continue reading

Posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized | 11 Comments

பவனி

இடியின் முழக்கொடு படரும் முகிலென ….யானைமேல் கனபேரி முழக்கமும் துடியின் முழக்கமும் பரந்து திசைக் கரி ….துதிக்கையால் செவி புதைக்கவே, அடியர் முழக்கிய திருப்பல்லாண்டு இசை ….அடைத்த செவிகளும் திறக்க, மூவர்கள் வடிசெய் தமிழ்த் திருமுறைகள் ஒருபுறம், ….மறைகள் ஒருபுறம் வழங்கவே, பவனிவந்தனரே, மழவிடைப் பவனி வந்தனரே! நூல்: திருக் குற்றாலக் குறவஞ்சி பாடியவர்: திரிகூடராசப்பக் … Continue reading

Posted in சிவன், திருக்குற்றாலக் குறவஞ்சி, பக்தி, பண்டிகை | 3 Comments

வாழவைப்பவன்

மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால் வைதாரையும் ஆங்கு வாழவைப்போன், வெய்ய வாரணம்போல் கைதான் இருபது உடையான் தலைப் பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன், உமையாள் பயந்த இலஞ்சியமே! நூல்: கந்தர் அலங்காரம் பாடியவர்: அருணகிரிநாதர் உமாதேவி (பார்வதி) விரும்பியபடி இலஞ்சி என்கிற குளத்தில் தோன்றிய இலஞ்சியம் முருகன், வண்டுகள் மொய்க்கின்ற மலர்களைத் தலையில் சூடிய … Continue reading

Posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், தமிழ், திருமால், பக்தி, பண்டிகை, முருகன், ராமன், விஷ்ணு | 14 Comments

உழவுக்குப் பின்னால் உலகம்

சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை * உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து * உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் * இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் நூல்: … Continue reading

Posted in திருக்குறள், பண்டிகை, வெண்பா | 2 Comments

முத்து இட்டல்

நகை செய் தன்மையின் நம்பு இழீஇத் தாய், துகள் பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற, முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும், குகை செய் இன்பு எழக் கோலம் இட்டு ஒத்ததே நூல்: தேம்பாவணி பாடியவர்: வீரமாமுனிவர் சூழல்: இயேசு பிறந்ததும் அன்னை மரியாள் அவரை அள்ளி எடுத்து முத்தமிடும் காட்சி … Continue reading

Posted in இயேசு, நண்பர் விருப்பம், பக்தி, பண்டிகை, பிள்ளைத்தமிழ், வீரமாமுனிவர் | 6 Comments

YPL ;)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் மாயோன் மேய ஓண நல் நாள் கோணம் தின்ற வடு ஆழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் மாறாது உற்ற வடுப் படு நெற்றி சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங்களிறு … Continue reading

Posted in நண்பர் விருப்பம், பண்டிகை, மதுரைக் காஞ்சி | 6 Comments