கோசலையின் கொழுந்து

ஒரு பகல் உலகு எலாம்

….உதரத்துள் பொதிந்து

அருமறைக்கு உணர்வு

….அரும் அவனை, அஞ்சனக்

கருமுகில் கொழுந்து எழில்

….காட்டும் சோதியை

திரு உறப் பயந்தனள்

….திறம் கொள் கோசலை

நூல்: கம்ப ராமாயணம் / பால காண்டம் / திரு அவதாரப் படலம்

பாடியவர்: கம்பர்

சூழல்: ராமன் பிறக்கும் காட்சி

பிரளயத்தின்போது எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கியவன். அரிதான வேதங்களாலும் முழுமையாக உணர்ந்துகொள்ளமுடியாத அதிசயன், கண் மை போல, மழை மேகத்தைப்போலக் கருவண்ண எழில் காட்டும் ஒளிவடிவானவன், அத்தகைய நாராயணனின் அவதாரமான ராமனை, அனைவரும் நலன் பெறுவதற்காகப் பெற்றாள் தகுதி வாய்ந்த கோசலை.

துக்கடா

 • அனைவருக்கும் இனிய ஸ்ரீராமநவமி வாழ்த்துகள் 🙂

269/365

Advertisements
This entry was posted in கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, பண்டிகை, ராமன், விஷ்ணு, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to கோசலையின் கொழுந்து

 1. Happy Birthday to dear Rama!

  ராம நவமிக்கு அவரின் அவதாரப் பாடலை அளித்தமைக்கு நன்றி 🙂 கோசலை தான் எவ்வளவு பெரிய பாக்கியவதி! இறைவனை தன் மணி வயிற்றில் சுமந்துள்ளாள். நாம் அவளுக்கு எப்பேர்பட்ட நன்றியை தெரிவிக்கவேண்டும்,ஸ்ரீ ராமனை நமக்கு ஈன்றத் தாய் ஆயிற்றே அவள்! என்ன தவம் செய்தனளோ, குறை ஒன்றும் இல்லாத இறைவனை நமக்கு அளிக்க.

  மழை மேகத்தைப் போல வள்ளல் இராமபிரான். அனால் மழை மேகத்தைப் போல கருமை நிறத்தையும் உடையவன். அப்படிப்பட்ட கண் மையை ஒத்த நிறத்தை உடையவன் ஒளி படைத்தவன் ஆகவும் இருப்பது விந்தையிலும் விந்தை இல்லையா! சூரிய குலத்தில் தோன்றியவன், அதனால் ஒளி வடிவானவனா? திருமாலிடம் இருந்து தானே சூரியனே ஒளியைப் பெறுகிறது, அவனின் அவதாரம், உலகில் ஒளியேற்றவந்தவன், அவன் ஒளிவடிவானவனே!

  பிறர் சொல்லிக் கேட்பதை விட நாமே பார்த்து அனுபவித்தால் அது இன்னும் நன்றாக மனதில் பதியும். நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குப் புரியவைக்க உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டவே ஸ்ரீ ராமனாக அவதாரம் எடுத்தார் ஸ்ரீமன் நாராயணன்.

  ராமனின் பெருமைக்கு அளவேயில்லை. குணக்கொழுந்தாம் கோசலையின் மைந்தனுக்கு அவன் பிறந்த நன்னாளில் பல்லாண்டு பாடுகிறேன்.

  amas32

 2. ஆனந்தன் says:

  எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க யசோதை மட்டுமல்ல, கோசலையும் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும்?

 3. ஆனந்தன் says:

  இந்தப் பின்னூட்டத்திற்கு இராமனே வந்தாலும் அனானிமஸ் வரார் என்று நினைக்கிறேன்!

  • anonymous says:

   :)))))))))))))))

   புகுந்த வீடு முருகனே ஆயினும்….
   பிறந்த வீடு அதை மறப்பவன் அல்லேன்!
   ————

   அவதாரம் என்பது நல்லன மட்டுமே செய்யாது;
   தவறும் செய்து,
   அதை எதிர்கொள்வது எப்படி? என்றும் சொல்லித் தரும்!
   (வாலி வதம் உட்பட – அதிலிருந்து….. தான் இறை எனத் தப்பிக்காது, வினைக்குத் தன்னையும் உட்படுத்திக் கொள்ளும்)

   அவனே என்று நம்பி வந்த அவளின் துயர் மட்டும் தான் மனவருத்தம்!

   மற்றபடி நல்லது-கெட்டது என உதாரண வாழ்க்கை வாழ்ந்து காட்ட வந்த ஒருமகன், திருமகன் = இராமன்!
   அவன் கோசலை புகல வந்த நாள், பிறந்த நாள்….வாழ்த்துக்கள்:)

  • anonymous says:

   இராமனுக்கு மட்டுமல்லாது…..

   ஆயிரம் இராமன்களும் ஈடொப்பாப் பரத நம்பிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

   இளையோன் இலக்குவனுக்கும், சத்ருக்கனனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
   ———–

   * இராமன் = புனர்பூசம்
   * பரதன் = பூசம்
   * இலக்குவன் / சத்ருக்கனன் = ஆயில்யம்
   என் நெருங்கிய தோழனும் = ஆயில்யம் தான்:)

   • ஆனந்தன் says:

    அதானே பார்த்தேன்! எனக்கு முன்னமே தெரியும், அனானிமஸ் வராமல் விடமாட்டார்ன்னு. நான் சும்மா சீண்டி விட்டேன்!
    ஒரு சிறு கேள்வி – இராமன், பரதன், இலக்குவன், சத்ருக்னன் – இவர்களுக்கு அடுத்தடுத்த நட்சத்திரங்கள் அமைந்திருப்பதால் அவர்கள் ஒரேநாளில் பிறந்திருக்க முடியாதல்லவா? (வெவ்வேறு வருடங்களாயிருந்தாலன்றி)

   • anonymous says:

    ஆமாம்! அடுத்தடுத்த நாட்களில் பிறந்ததாகவே மூல காவியம் சொல்லும்; கம்பனும் சொல்லுவான்! (நட்சத்திரங்களையும் குறிப்பான்)

 4. anonymous says:

  மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
  என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!!

  ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ!
  இளையவர்க்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ!!

  இராகவனே தாலேலோ! போகவனே தாலேலோ!
  ஆகவனே தாலேலோ! என்னகனே தாலேலோ!!

  • anonymous says:

   எந்தை வருக ரகு நாயக வருக
   மைந்த வருக மகனே இனிவருக
   என்கண் வருக எனது ஆருயிர் வருக – அபிராம

   இங்கு வருக அரசே வருக முலை
   உண்க வருக மலர் சூடிட வருக
   என்று பரிவினொடு கோசலை புகல – வரும் மாயன்

   சிந்தை மகிழும் முருகா, செந்தில் நகர் மேவும் பெருமாளே!
   —————

   இப்படி “கோசலை மதலையாக” முன்னிறுத்தி,
   சேரப் பெருமகன் குலேசேகராழ்வாரும், ஓசை முனி அருணகிரியும் அழகுறப் பாடியுள்ளார்கள்!
   (ஆழ்வார் பாசுரத்தின் கடைசி இரு வரிகள் மட்டுமே என்னுடையது)

   அன்பர்களுக்கு இராமன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 5. anonymous says:

  இராகவனை வடிக்கும் வரிகள் இவை:

  தொளை கட்டிய கிளை முட்டிய
  சுருதிச் சுவை அமுதின்
  கிளை கட்டிய கருவிக் கிளர்
  இசையின் பசை நறவின்
  விளை கட்டியின் மதுரித்து எழு
  கிளவிக் கிளி விழி போல்
  களை கட்டவர் தளை விட்டு எறி
  குவளைத் தொகை கண்டான்

  மா கந்தமும் “மகரந்தமும்”
  அளகம் தரும் மதியின்
  பாகம் தரும் நுதலாளொடு
  பவளம் தரும் இதழான்
  மேகம் தனி வருகின்றது
  மின்னோடு என மிளிர் பூண்
  நாகம் தனி வருகின்றது
  பிடியோடு என நடவா.

  வெய்யோன் ஒளி தன் மேனியின்
  விரி சோதியின் மறையப்
  பொய்யோ எனும் இடையாளொடும்
  இளையானொடும் போனான்;
  மையோ! மரகதமோ! மறிகடலோ!
  மழை முகிலோ!
  ஐயோ! இவன் வடிவு என்பது ஒர்
  அழியா அழகு உடையான்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s