Category Archives: அறிவுரை

சாப்பிடும் முறை

ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின், பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின், வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின், காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே நூல்: திருமந்திரம் (அறம் செய்வான் திறம்) பாடியவர்: திருமூலர் எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா? முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய … Continue reading

Posted in அறிவுரை, கொடை, திருமந்திரம், திருமூலர் | 17 Comments

தூய்மை

உண் பொழுது நீர் ஆடி உண்டலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை, இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில் நூல்: திரிகடுகம் (#27) பாடியவர்: நல்லாதனார் 1. பசிக்கிறதா? குளித்துவிட்டுச் சாப்பிடுங்கள் 2. கஷ்டமான நிலைமையா? அப்போதும் பொய் சொல்லாதீர்கள் 3. தோல் வற்றிச் சுருங்கிய வயதான … Continue reading

Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா | 1 Comment

தக்கோர் வாழும் ஊர்

நிலம், நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி நின்று ஐந்து புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார் போற்று ஓவார், சலம், நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலச்சங்கை நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே! நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் இறைவா, நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் ஆகிய ஐம்பூதங்களாகத் திகழ்கிறவனே, ஐந்து … Continue reading

Posted in அறிவுரை, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி | 13 Comments

மெல்லினங்கள் பேசு கண்ணே

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது, நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் நூல்: நல்வழி (#33) பாடியவர்: ஔவையார் ’இந்தக் காலத்துல மொரட்டுத்தனமா அதட்டினாதான் வேலை நடக்கும், மென்மையாப் பேசினா உங்களை ஏமாத்திப்புடுவாங்க’ என்று உங்களிடம் யாராவது சொல்கிறார்களா? நம்பாதீர்கள்! மென்மையான … Continue reading

Posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், வெண்பா | 5 Comments

வண்டின் பயணம்

தண் தாமரையின் உடன் பிறந்தும் ….தண்டே நுகரா மண்டூகம், வண்டோ கானத்து இடை இருந்து ….வந்தே கமல மது உண்ணும், பண்டே பழகி இருந்தாலும் ….அறியார் புல்லோர், நல்லோரை. கண்டே களித்து இங்கு உறவாடி ….தம்மில் கலப்பார் கற்றோரே! நூல்: விவேக சிந்தாமணி பாடியவர்: தெரியவில்லை குளத்தில் தாமரையும் இருக்கிறது, தவளையும் இருக்கிறது. ஆனால், குளிர்ச்சியான … Continue reading

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம் | 5 Comments

தைக்கக் கல்

ஈட்டிய நற்பொருள் எழுத்தே ஆகும், சுற்றம் என்பது துகள் அறு கல்வி, ஏழை என்பவர் எழுத்தறியாதவர், தைக்கக் கற்றவன் சமர்த்தன் ஆவான், நையக் கற்பினும் நொய்ய நன்கு உரை, கொற்றவன் தன்னிலும் கற்றவன் உயர்ந்தவன், தகும் எழுத்தை அறிந்தவன் தலைவன் ஆவான், காவலனே எனினும் கணக்கை ஓர்ந்து அறி! நூல்: கல்வியொழுக்கம் (வெவ்வேறு வரிகள், நூலில் … Continue reading

Posted in அறிவுரை, ஔவையார் | 5 Comments

நேரம் அறி!

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு * ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து * கொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்தொக்க சீர்த்த இடத்து நூல்: திருக்குறள் (பொருட்பால், அரசியல், காலம் அறிதல் அதிகாரம், #482, #486 & #490) பாடியவர்: திருவள்ளுவர் எதையும் செய்வதற்கு … Continue reading

Posted in அறிவுரை, திருக்குறள், திருவள்ளுவர், வெண்பா, Uncategorized | 11 Comments

இடித்துரைத்தல்

உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக் குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார்க் கொளுத்தல் மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல் நூல்: பழமொழி நானூறு பாடியவர்: முன்றுரையரையனார் அழிவில்லாத இந்த உலகத்தில் நாம் சிறந்த விஷயங்களைமட்டுமே தேடிச் செல்லவேண்டும், நல்ல அறச் செயல்களில்மட்டுமே ஈடுபடவேண்டும். யாரேனும் அப்படிச் செய்யாமல் கெட்ட வழியில் … Continue reading

Posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, வெண்பா | 11 Comments

காய்தலும் உவத்தலும் வேண்டாம்

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருள்கண் ஆய்தல் அறிவு உடையார் கண்ணதே, காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதது ஆகும், உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும்! நூல்: அறநெறிச் சாரம் பாடியவர்: முனைப்பாடியார் அறிவுள்ளவர்கள் ஒரு பொருளை ஆராய்ந்து எடை போடும்போது, மிகையாகச் சந்தோஷப்படவும் மாட்டார்கள், ரொம்பக் கோபப்படவும் மாட்டார்கள். ஏன் தெரியுமா? ஒரு படைப்பைக் கோபத்துடன் … Continue reading

Posted in அறிவுரை, வெண்பா | 49 Comments

புல் மேலே பனித்துளி

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப் புல் பனிப் பற்று விட்ட ஆங்கு நூல்: நாலடியார் (நல்லினம் சேர்தல் #171) பாடியவர்: சமண முனிவர்கள் அறியாத பருவத்தில், அடங்காதவர்களோடு சேர்ந்து சில பிழைகளைச் செய்துவிட்டீர்களா? அதனால் பாவம் சேர்ந்து … Continue reading

Posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், நாலடியார், வெண்பா | 4 Comments