நேரம் அறி!

பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு

*

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்

தாக்கற்குப் பேரும் தகைத்து

*

கொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்று அதன்

குத்தொக்க சீர்த்த இடத்து

நூல்: திருக்குறள் (பொருட்பால், அரசியல், காலம் அறிதல் அதிகாரம், #482, #486 & #490)

பாடியவர்: திருவள்ளுவர்

எதையும் செய்வதற்கு ஒரு நேரம் உண்டு. அதை உணர்ந்து செயல்பட்டால், அந்தப் புத்திசாலித்தனம்தான் உங்களை வெற்றியுடன் சேர்த்துக் கட்டுகின்ற கயிறு.

*

நம்பிக்கை உள்ள ஒருவன், செயலில் இறங்காமல் தயங்கினால், அவனுடைய திறமையின்மீது சந்தேகப்படாதீர்கள். அவன் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறான்.

சண்டையின்போது ஓர் ஆட்டுக்கடா மெதுவாகப் பின்வாங்கும், ஆனால் அது தோல்வியின் அடையாளம் அல்ல, மறுவிநாடி வேகமாகப் பாய்ந்து எதிரியை வீழ்த்திவிடும்.

*

சரியான நேரம் அமையும்வரை, கொக்குபோல் காத்திருங்கள். அந்த நேரம் வந்துவிட்டால், அதன் குத்தைப்போல் விரைவாகச் செயல்பட்டுக் கச்சிதமாக வேலையை முடியுங்கள்.

துக்கடா

 • ’நல்ல நேரம்’ என்றால், ஜோதிடம் சொல்வது அல்ல, ஒரு செயலைச் செய்வதற்குச் சரியான நேரம் எது என்று கவனித்து முடிவெடுத்துச் செயல்படுவது. 490வது குறளில் வரும் கொக்கு உதாரணம்தான்!
 • திருக்குறளின் இந்த அதிகாரம் / அத்தியாயம் முழுவதும், சரியான நேரத்துக்காகக் காத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறது. இதனைப் பல பிரபல உரைகளுடன் (ஆங்கிலம் உள்பட) இங்கே முழுமையாக வாசிக்கலாம் : http://www.thirukkural.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

332/365

Advertisements
This entry was posted in அறிவுரை, திருக்குறள், திருவள்ளுவர், வெண்பா, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to நேரம் அறி!

 1. anonymous says:

  //சண்டையின்போது ஓர் ஆட்டுக்கடா//

  Where is the “aadu” in this kuRaL? #doubt

 2. ஆனந்தன் says:

  ஒவ்வொரு இடுகைக்கும் பொருத்தமான ஒரு சினிமாப் பாடலை யாராவது படிச்சவங்க போட்டா நல்லாருக்குமே?
  “எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே” என்ற பாடல் நினைவுக்கு வந்ததால் சொன்னேன்.
  வேறெதுவும் எலக்கியமான பின்னுட்டமெல்லாம் எனக்கு வரமாட்டேங்கிறதே?

  • கொக்கு குறித்த திரைப்பாடல் ஒன்று –

   கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்
   மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்!
   🙂

   இது சைவக் கொக்கு அசைவமாகிப்போவது பற்றிய (சற்று அசைவப்) பாடல்.

   கொக்கு மீனை திங்குமா இல்லேன்னா
   மீனு கொக்கை முழுங்குமா!

   கொக்கு பற்றிய பல பாடல்கள் கெண்டைவிழி மீன்களைக் கொத்தக் காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குகள் பற்றியே. அல்லது உறுமீன் வருமென்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடிவிட வாடியிருக்கும் கொக்குகள் பற்றி.

   பின்வாங்கும் ஆட்டுக்கடா பற்றிய பாடல்கள் ஏதும் நினைவுக்கு வரவில்லை.

 3. //சண்டையின்போது ஓர் ஆட்டுக்கடா மெதுவாகப் பின்வாங்கும், ஆனால் அது தோல்வியின் அடையாளம் அல்ல, மறுவிநாடி வேகமாகப் பாய்ந்து எதிரியை வீழ்த்திவிடும்.//
  நேற்று தான் இதை “வாகை சூட்ட வா” படத்தில் நகைச்சுவை திரைக் காட்சியாகப் பார்த்து ரசித்தேன் 🙂

  சரியான நேரத்தில் செயல்படுவதற்கு சரியான உதாரணம் பங்குச் சந்தையில் பங்குகளை சரியான தருணத்தில் வாங்கவும் விற்கவும் தெரிந்திருப்பது தான்.
  யாராவது அதில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்களா? ஒரு சிலர் உண்டு. அவர்களை உலகம் வெற்றிப் பெற்றவர்கள் என்று கொண்டாடுகிறது!

  வாய்ப்பைத் தவற விட்டவர்கள் தான் ஏராளம் பேர். Hind sight is always 20/20. அனால் புத்திசாலி அதைச் செய்வதற்கு முன்பே அறிந்து செயல்படுவான். இந்தப் பண்புக்கு பொறுமை, அறிவு, அனுபவம் எல்லாம் அவசியம் தேவை.

  amas32

 4. அனானியைப் போல கொஞ்சம் காஃபி உறிஞ்சப் பார்க்கிறேன் (கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோலப் பாவித்து ;(.), திருக்குறளைப் பலர் உறிஞ்சி, சுவைத்து, அருந்திவிட்டனர்.

  ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
  தாக்கற்குப் பேரும் தகைத்து

  இக்குறளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தேடினால், சென்னைப் பேரகரமுதலியில் பல சொற்களுக்கு இலக்கியப் பயன்பாடாக இதே குறளைத் தந்துள்ளனர்.

  ஊக்கம் – Strength, power, force; வலிமை. ஊக்கமுடையா னொடுக்கம் (குறள், 486).
  (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:5082.tamillex)

  ஒடுக்கம் – Biding one’s time; பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486).
  (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:7564.tamillex)

  தகர் – Ram; செம் மறியாட்டுக்கடா. (திவா.) பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). திவா – இப்பொருள் திவாகர நிகண்டிலிருந்து.
  http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.5:1:5790.tamillex

  பேர், பேர்தல் (வினைச்சொல்) – draw back, retreat, as a warrior; பின்வாங்குதல். பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486)

  (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.9:1:5035.tamillex)

  வலிமையுடையவன் பதுங்குவது பொருதும் செம்மறிக்கடா பின்வாங்குவது போல. (முழுவலிமையோடு ஓடிவந்து தாக்குவான்).

 5. Rex Arul says:

  “கொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்ற திருக்குறள், அக்காலத்தில், சேரன் போக்குவரத்துக் கழக கோவை சரக பேருந்து தடம் எண் 7ல் அதிகமாக பொறித்து வைத்திருப்பார்கள். அங்கு மனப்பாடம் செய்த ஞாபகம் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இதே கருத்தை, ஔவையார் தனது பாடலில் எதிரொலித்து இருப்பதை பாருங்கள்:

  “அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
  கடக்கக் கருதவும் வேண்டா — மடைத்தலையில்
  ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
  வாடி யிருக்குமாங் கொக்கு.”

 6. நானுந்தேங்.. அதேன் கேட்டனுங்..

  எளவு புடிச்ச காசுக்காக நாலூரு போய்ட்டாலும், தமிழ மறக்காம இங்க வந்து தாய் புள்ள மாதிரி பேசிக்கறம் பாருங்க,நெனச்சா ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க.

  இதுக்கு மேல இங்க நின்னு பேசிக்கிட்டிருந்தம்னா சொக்கர் சுருக்னு ‘இதென்ன, உங்க சொந்த ஊடுன்னு நெனச்சுக்கிட்டீங்களாடா?’ன்னு கேட்டுப் போடுவாருங்.

  அடிக்கடி வாங்க. பாக்கலாமுங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s