இடித்துரைத்தல்

உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்

குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார்க் கொளுத்தல்

மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்

அலைத்துப் பால் பெய்துவிடல்

நூல்: பழமொழி நானூறு

பாடியவர்: முன்றுரையரையனார்

அழிவில்லாத இந்த உலகத்தில் நாம் சிறந்த விஷயங்களைமட்டுமே தேடிச் செல்லவேண்டும், நல்ல அறச் செயல்களில்மட்டுமே ஈடுபடவேண்டும்.

யாரேனும் அப்படிச் செய்யாமல் கெட்ட வழியில் சென்றால், அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, அறிவுரை சொல்லவோ தயங்காதீர்கள். ‘அவங்க தனிப்பட்ட விஷயத்துல தலையிடலாமா? என்ன நினைப்பாங்களோ’ என்றெல்லாம் யோசிக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லி அவர்களை நல்ல பக்கம் திருப்புங்கள்.

ஒரு குழந்தை பால் குடிக்கமாட்டேன் என்று அடம் பிடித்து அழுதால், தாய் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கிறார்? இழுத்துப் பிடித்து வருத்திப் பாலை ஊட்டிவிடுகிறார் அல்லவா? அதுமாதிரிதான் இதுவும்.

துக்கடா

 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • உலப்பி லுலகத் துறுதியே நோக்கிக்
 • குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
 • மலைத்தழுது உண்ணாக் குழவியைத் தாயர்
 • அலைத்துப்பால் பெய்து விடல்

330/365

Advertisements
This entry was posted in அறிவுரை, உவமை நயம், பழமொழி நானூறு, வெண்பா. Bookmark the permalink.

11 Responses to இடித்துரைத்தல்

 1. anonymous says:

  முன்றுரையரையனாரே – நாங்கெல்லாம் ஏதோ நல்லா இருக்குறது ஒமக்குப் பிடிக்கலையா?:))
  நீங்க சொன்னதையெல்லாம் இந்தச் சோசியல் நெட்வொர்க்கிங் காலத்துல பண்ணீனோம்ன்னு வைங்க…
  //அலைத்துப் பால் பெய்துவிடல்// எங்களுக்குப் பாலூத்திருவாக:)))

 2. anonymous says:

  சொக்கரே, ஒரு உதவி
  //முன்று”ரை”யரையனார்// – முன்று”றை”யரையனார்
  சரி பார்த்துச் சொல்ல இயலுமா?
  —————–

  I guess itz வல்லின ற; Not sure!

  முன்றுறையரையனார் = முன் + துறை + அரையனார்
  துறை = ஆற்றுத் துறை/ துறை முகம்,
  இப்பிடி நீர்நிலைப் பட்டினம் ன்னு நினைக்கிறேன்!

 3. TVU தளம்: இந்நூலாசிரியர் பெயர் முன்றுறையர் என்பது. இவர் வரலாற்றைப்
  பற்றி ஒன்றும் தெரியவில்லை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே மூன்று நூல்கள் சிறந்தனவென்று
  கருதப்படுகின்றன. அவை முப்பால், நாலடி, பழமொழி என்பன.

  http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=182&pno=125

 4. ஆனந்தன் says:

  //அழிவில்லாத இந்த உலகத்தில்//
  ஏன் இப்படிக் கூறுகிறார்? உலகம் அழியக் கூடியதல்லவோ?

  • anonymous says:

   அல்ல!

  • ஆனந்தன் says:

   அப்படியா? எதோ, நீங்க சொன்னா சரிதான்!:-)

   • anonymous says:

    No, No, Nooooooo
    Dont take it bcoz I am saying. Take it bcoz you understand it:)

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    அல்ல-ன்னு வேணும்-ன்னே ஒத்த வரியில சொன்னேன்…
    ஆனால் அதற்கான விளக்கம் இருக்கு!
    Seek & Thou Shall Get:)

  • Murali says:

   “உலப்பில்” என்பது “அளவில்லா” என்றும் பொருள் படும், அதாவது “பெரிய/நெடிய” என்று பொருள் கொள்ளலாம்.. நெடிய இவ்வுலகில் நாம் சிறந்த விஷயங்களை மட்டுமே தேடிச் செல்லவேண்டும்!

   • நன்றி – மிகப் பொருத்தமாக இருக்கிறது. “உலப்பிலா ஆனந்தமாய”, “உலப்பிலா ஒன்றே” என்றெல்லாம் திருமுறைகளிலும் வருகிறதுதான்.

 5. இந்தப் பாடலுக்கு ஒரே மறுமொழிதான்..

  சிவாஜியும்,பத்மினியும் நடித்த தங்கப்பதுமை படத்தில் வரும் சி.எஸ் ஜெயராமன் பாடிய ஓர் அற்புதமான பாடல்…. பாடல் வரிகளுக்கு நடுவில் பத்மினியின் கதறல் வசனங்களோடும்.. சிவாஜி அவர்களின் பார்வை பறிக்கப்பட்ட நிலையில், சிவாஜி அவர்கள் தான் செய்த குற்றங்களையெல்லாம் உணர்ந்து பாடுவார்…அந்தப் பாடல் “ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே”…அதில் வரும் அற்புதமான வரிகள்..என் அப்பா அடிக்கடி இதைப் பாடிக் காட்டுவார்…

  “அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன் அஞ்சி நடப்பானா ஞானப்பெண்ணே??
  துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன், சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே??
  தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டு தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே
  பதறி,பதறி நின்று,கதறி,கதறிப் புலம்பினாலும் பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே..”

  அதுபோலத்தான், என்னதான் அறிவுரை,ஆலோசனை கூறினாலும், அதைக் கேட்டு நடப்பதாக இருந்தால்தான் உலகமே சுபிட்சமடைந்து விடாதா?? அறிவுரை,ஆலோசனை மிக,மிக,நெருக்கமானவர்களிடம்,அதுவும் அவர்கள் நம்மிடம் கேட்டால் மட்டுமே கொடுப்பதே உத்தமம்… கேட்காமலே கிடைக்கும் எந்தப் பொருளுக்கும் இந்த உலகில் மதிப்பு இருப்பதில்லை..அறிவுரையும் அதுபோலத்தான்…

 6. பெற்ற பிள்ளைகளுக்கே அறிவுரை சொல்லத் தயங்க வேண்டியிருக்கு! ஆனால் நான் சொல்லிவிடுவேன் 🙂 கேட்பதும் கேட்காததும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம். தவறை சுட்டிக் காட்டி திருத்தாமல் விடுவது என்னைப் பொறுத்த வரை அந்த தவறுக்கு துணை போவது போல் தான். ஆனால் சில சமயம் நல்லது சொன்னாலும் அது சில சூழ்நிலைகளால் கேட்பவருக்குத் தவறாகத் தோன்ற வாய்ப்பு இருக்கிறது. Ego தான் இங்கே குற்றவாளி.

  பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது போல யார் நம் ஆலோசனைக்கு செவி சாய்ப்பர்களோ அவர்களுக்குச் சொன்னால் தான் ஏற்புடையதாக இருக்கும்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s