புல் மேலே பனித்துளி

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும், நெறி அறிந்த

நல் சார்வு சாரக் கெடுமே வெயில் முறுகப்

புல் பனிப் பற்று விட்ட ஆங்கு

நூல்: நாலடியார் (நல்லினம் சேர்தல் #171)

பாடியவர்: சமண முனிவர்கள்

அறியாத பருவத்தில், அடங்காதவர்களோடு சேர்ந்து சில பிழைகளைச் செய்துவிட்டீர்களா? அதனால் பாவம் சேர்ந்து இப்போது வருத்தப்படுகிறீர்களா?

கவலை வேண்டாம். இனிமேல் நீங்கள் நல்ல நெறியில் செல்கிறவர்களுடன் சேர்ந்து பழகி வாழுங்கள். அதன்மூலம் உங்களுடைய பழைய குற்றங்கள் தானாக மறைந்துவிடும்.

நம்பமுடியவில்லையா? அதிகாலையில் புல்தரையைக் கவனித்துப் பாருங்கள். ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பனித்துளி படர்ந்து அதை நனைத்திருக்கும், ஆனால் பின்னர் சூரியன் மேலே ஏறி வந்ததும், அந்தப் பனி கரைந்து நீங்கிவிடும். அதுபோல்தான் இதுவும்.

துக்கடா

 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
 • நெறியல்ல செய்தொழுகி அவ்வும், நெறியறிந்த
 • நல்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப்
 • புல்பனிப் பற்றுவிட் டாங்கு

320/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், நாலடியார், வெண்பா. Bookmark the permalink.

4 Responses to புல் மேலே பனித்துளி

 1. anonymous says:

  சொக்கரே, கவனிச்சீங்களா?
  //நெறி அல்ல செய்து ஒழுகி அவ்வும்// = அவ்வுமா? புதுசா இல்ல? அப்படீன்னா என்ன?
  ட்விட்டரில், அவ்வ்வ்வ் ன்னு போடுறாங்களே, அதுவா?:)

 2. சமண முனிவர்கள் பாடிய பாடலா இது? நல்லவர்களுடன் கூட்டுச் சேர்வதன் (சத் சங்கத்தின் ) பெருமையை கூறியிருக்கிறார்கள்! முன் செய்த பாவங்களும் தொலைந்து விடும் என்கிறார்களே! எப்படி?

  நல்லவர்களுடன் கூட்டுச் சேர்ந்தால் அவர்களின் நல் வழியை நாம் பின் பற்றுவோம் என்ற நம்பிக்கை தான்! உதவி வேண்டி நிற்பவர்கள் எத்தனையோ வகை. பணம் கொடுத்து தான் உதவ வேண்டும் என்பதில்லை. முக்கியமாக உடல் உழைப்பால் மற்றவருக்குச் செய்யும் உதவிகள் நம் பழைய பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக அமையும்.

  ஏழை எளிய குழந்தைகள் படிப்புக்கு உதவலாம். பணத்தால் முடியவில்லை என்றால் வீட்டுப் பாடம் சொல்லித் தந்து உதவலாம். புதிய முயற்சி எடுக்கத் தயக்கம் இருந்தால், இயங்கும் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றலாம். கொடிய நோய்களைப் பற்றிய சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதில் முனையலாம். இயற்கை சீற்றங்கள் தவறாமல் ஏற்படுகின்றன. அப்பொழுது உதவலாம். வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை என்றாலும் புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லவாவது செய்யலாம்.

  நல்லவர்களின் நட்பு இவையாவற்றையும் செய்யத் தூண்டும், தூண்ட வேண்டும்.
  மற்றவர்களின் துன்பத்தைக் காணும் போது நாம் மற்றவர்களுக்கு நாம் செய்த தவறுகளை உணரும் தருணம் வரும். அந்தத் தருணமே சூரியனின் கிரணங்கள் பட்டு பனி மறையும் நேரம்.

  amas32

  • anonymous says:

   அருமையான பின்னூட்டம்-ம்மா!

   //மற்றவர்களின் துன்பத்தைக் காணும் போது…
   நாம் மற்றவர்களுக்கு நாம் செய்த தவறுகளை உணரும் தருணம் வரும்
   அந்தத் தருணமே சூரியனின் கிரணங்கள் பட்டு பனி மறையும் நேரம்//

   ரொம்ப பிடிச்சி இருந்தது!
   இதான் உண்மை!

   அறிந்தோ, அறியாமலோ….ஆக மொத்தம் பாவம் தான்!!!
   பாவங்கள் எப்படித் தொலையும்?
   =பரிகாரம் பண்ணுவதாலா?
   =ஹோமம் பண்ணுவதாலா?
   =தங்கத் தேர் இழுப்பதாலா?
   =இல்லை…..”உணர்வதால்” மட்டுமே!

   நாம பாவம் செஞ்சிருக்கோம்-ன்னு “உணரணும்”!
   மற்றவர்கள் துன்பத்தைக் காணும் போது, இப்படி நாம ஏதாச்சும், யாருக்காச்சும் செஞ்சிருக்குமோ?…ன்னு “உணரும்” போது…

   தொலையும்!
   ————–

   ஆண்டாள் மாதிரியே நீங்களும் சொல்லி இருக்கீக!:)
   மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்!
   Great Women Think Alike:)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s