Category Archives: தொல்காப்பியம்

‘உம்’மில் எட்டு வகை

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்) பாடியவர்: தொல்காப்பியர் ’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது: 1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன 2. சிறப்பு : ஒரு … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல் | 21 Comments

முன்றில், கறுப்பு, சிவப்பு

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! * கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள நிறத்துறு உணர்த்தற்கும் உரிய என்ப! நூல்: தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் & சொல்லதிகாரம்) பாடியவர்: தொல்காப்பியர் ’முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும் அதாவது, முன் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம் | 21 Comments

இளம்பெயர்கள்

மாற்ற அரும் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே நூல்: தொல்காப்பியம் (மரபியல், பாடல் #1) பாடியவர்: தொல்காப்பியர் மரபு வழியை மாற்றுவது கடினம். அந்த அடிப்படையில் பார்க்கும்போது, தமிழில் உள்ள இளமைப் பெயர்கள் ஒன்பது: பார்ப்பு பறழ் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல் | 12 Comments

சொல் ஒன்று, பொருள் பத்து!

கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்றுஆ ஈரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே நூல்: தொல்காப்பியம் (#866, உரியியல்) பாடியவர்: தொல்காப்பியர் சூழல்: ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கக்கூடும் என்று ஓர் உதாரணத்துடன் விளக்குகிறது இந்தப் பாடல் ’கடி’ என்ற சொல்லுக்குப் பத்து பொருள்கள் … Continue reading

Posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல், வார்த்தை விளையாட்டு | 5 Comments

அறிவுகள்

ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. நூல்: தொல்காப்பியம் (பொருளதிகாரம், மரபியல் #571) பாடியவர்: தொல்காப்பியர் … Continue reading

Posted in அறிவியல், தொல்காப்பியம், Uncategorized | 2 Comments