சொல் ஒன்று, பொருள் பத்து!

கடி என் கிளவி

வரைவே கூர்மை காப்பே புதுமை

விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே

அச்சம் முன்தேற்றுஆ ஈரைந்தும்

மெய்ப்படத் தோன்றும் பொருட்டாகும்மே

நூல்: தொல்காப்பியம் (#866, உரியியல்)

பாடியவர்: தொல்காப்பியர்

சூழல்: ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்கக்கூடும் என்று ஓர் உதாரணத்துடன் விளக்குகிறது இந்தப் பாடல்

’கடி’ என்ற சொல்லுக்குப் பத்து பொருள்கள் உண்டு. அவை:

 • நீக்குதல்
 • கூர்மை
 • காவல்
 • புதுமை
 • வேகம்
 • விளக்கம்
 • அதிகம்
 • சிறப்பு
 • அச்சம்
 • சபதம் செய்தல் / சூள் உரைத்தல்
070/365
Advertisements
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to சொல் ஒன்று, பொருள் பத்து!

 1. ஒரு பொருள் பன் மொழி தெரியும்!
  இது என்ன பல்பொருள் ஒரு மொழியா?:)

 2. எடுத்துக் காட்டெல்லாம் ஆரு குடுக்குறதாம்? 🙂

  நீக்குதல் = கடி தாழ் (தாழ்ப்பாள்)
  கூர்மை = கடி வேல்
  காவல் = கடி நகர்
  புதுமை = கடி கருவி
  வேகம் = கடி காற்று

  விளக்கம் = கடி நூல்
  அதிகம் = கடி மழை
  சிறப்பு = கடி அரண்
  அச்சம் = கடி இருள்
  சபதம் செய்தல் / சூள் உரைத்தல் = கடி போர்

  * “பல் குணம் தழுவிய ஓர் உரிச் சொல்”-ன்னு சொல்லுவாய்ங்க!
  ஒரே உரிச்சொல்லான கடி = பல குணங்களைக் குறிக்குது!

  * அதே போல் “ஒரு குணம் தழுவிய பல் உரிச் சொல்”…
  சால, உறு, தவ, நனி, கூர், கழி
  = பல உரிச் சொற்கள்…ஒரே குணமான ‘மிகுதி’-யைக் குறிக்கிறது!

  தமிழ் மொழி ரொம்ப அழகா இருக்கு-ல்ல?

 3. எங்கோ படித்தது:
  ஆங்கிலத்தில் house என்ற வார்த்தைக்குத்தான் அதிகமான அர்த்தங்கள் உண்டாம். மொத்தம் ஐம்பது அர்த்தங்கள்.

  தமிழில் அரி என்ற ஒற்றை வார்த்தைக்கு நூற்றைம்பது அர்த்தங்கள் உண்டாம்.

  அர்த்த உதாரணங்களை கேயாரெஸ் தந்து உதவுவார் 🙂

  • me the escape-u!:)
   பொருள் காட்டுகளைச் சொக்கநாதரே காட்டுவார்! அவர் கிட்ட தான் மதுரையின் சாவிக் கொத்து இருக்கு!:)

 4. G.Ragavan says:

  நல்ல செய்யுள். இந்தச் செய்யுளைப் படிக்கையில் கடிமலர், கடிகமழ், கடிதேகி, கடிநிழல், கடிகால் போன்ற பயன்பாடுகளும் நினைவுக்கு வருகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s