முன்றில், கறுப்பு, சிவப்பு

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்

இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்!

*

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துறு உணர்த்தற்கும் உரிய என்ப!

நூல்: தொல்காப்பியம் (எழுத்ததிகாரம் & சொல்லதிகாரம்)

பாடியவர்: தொல்காப்பியர்

’முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்

அதாவது, முன் + இல் = முன்றில் (வீட்டின் முன்பகுதி)

*

கறுப்பு, சிவப்பு இரண்டும் கோபத்தைக் குறிக்கும் சொற்கள்.

இதே இரண்டு சொற்களை நிறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்.

துக்கடா

 • கம்ப ராமாயணத்தில் ‘கறுத்த மாமுனி’ என்று ஒரு வரி வருகிறது, விசுவாமித்திரரைப் பற்றி. இதன் அர்த்தம், அந்த முனிவரின் தோல் வண்ணம் கறுப்பு என்பது அல்ல, அவர் கோபமாக இருந்தார் என்பதுதான். சிவப்புக்கும் கோபம் என்கிற பொருள்தான் முதன்மையானது. இன்றைக்கு இவை இரண்டுமே நிறத்தைக் குறிக்கும் வார்த்தைகளாகிவிட்டன
 • நிறத்தைப் பொறுத்தவரை, ’கறுப்பு’ஐவிட, ’கருப்பு’தான் சிறந்தது என்பது என் நம்பிக்கை. (உதாரணம்: கருத்த முகம், கார்மேகம் என்பவை சரி, ஒருவேளை இந்த வரிகளில் கருப்புக்குப் பதில் கறுப்பைச் சேர்த்தால் கறுத்த முகம், காற்மேகம் என்றாகிவிடும், கறுத்த முகம் = கோபம் கொண்ட முகம் என்று இன்னோர் அர்த்தமாவது இருக்கிறது, காற்மேகத்துக்கு அதுவும் கிடையாது)
 • அதேபோல் ‘சிகப்பு’ஐவிட, ‘சிவப்பு’தான் சிறந்தது என்றும் நம்புகிறேன் (உதாரணம்: சிவந்த தேகம், செவ்வானம் என்பவை சரி, ஒருவேளை இந்த வரிகளில் சிவப்புக்குப் பதில் சிகப்பைச் சேர்த்தால் சிகந்த தேகம், செக்கானம் என்று வராது 🙂 )

235/365

Advertisements
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம். Bookmark the permalink.

21 Responses to முன்றில், கறுப்பு, சிவப்பு

 1. Manion Ramsamy says:

  இன்று முதல் கருப்பு, சிவப்பு தான்!

 2. amas32 says:

  நான் இத்தனை நாளாகவும் கருப்பு, சிவப்பு என்று தான் சொல் வழக்கில் பயன் படுத்தி வந்தேன். பரவாயில்லை நான் கூட சிலது சரியாக (தெரியாமலே) பயன் படுத்தியிருக்கிறேன் 🙂

  இன்றைய பா எனக்கு பாடம் எடுப்பதற்காகச் சேர்த்தது போல உள்ளது . நன்றி சொக்கரே 🙂

  amas32

 3. anonymous says:

  சிறப்பான பதிவு!
  என் கருத்தும் உங்களைப் போலத் தான் – “நம்பிக்கை”யின் பாற்பட்டது!
  க’று’ப்பு என்று எழுதத் தயங்குவேன்!
  கருப்பு, கறுப்பு = இரண்டுமே சரி! ஆனா, க’று’ப்பில் என்னமோ, அதீத கோபம் தொனிப்பது போல ஒரு பாவனை! மென்மை கருதி நான் அதைப் பயன்படுத்துவதில்லை!
  —–

  ஆனா, அதுக்காக “கறுப்பு-ன்னு எழுதினா இலக்கணப் பிழை, தமிழை முதல்ல ஒழுங்கா எழுதுங்க, அப்பாலிக்கா தமிழ் தமிழ்-ன்னு கோஷம் போடலாம்” போன்ற கருத்துக்கள் தேவையற்றவை!

  கறுப்பு-கருப்பு இரண்டுமே சரி தான்! நான் ஏன் கருப்பைத் தேர்ந்தெடுத்தேன்-ன்னு ஒருவர் சொல்லலாம்!
  ஆனா, கறுப்பு என்பதே இலக்கணப்படி தவறு-ன்னு சொன்னா, அது இணையத்தில் பரவிப் பரவி, மொழி இலக்கணத்தையே சந்தேகத்துக்கு உரியதாக ஆக்கி விடும்!

  கருப்பு-கறுப்பு
  வாழ்த்துகள்-வாழ்த்துக்கள்
  தாள்-தாழ்

  இன்னும் நிறைய சொற்கள் உள்ளன! இரட்டைப் பயன்பாடு!
  அதில் ஒன்றைத் “தவறு” என்று அவசரப்பட்டு நாமே “தீர்ப்பு” எழுதி விடக் கூடாது!
  என் பணிவான வேண்டுகோள் என்ன-ன்னா:
  1. மொழியில், ஒரு பயன்பாட்டை – “இலக்கணப் பிழை” -ன்னு ஓரங்கட்டி விடக் கூடாது!
  2. பிழை என்று கருதினால், ஏன் பிழை என்பதற்கான இலக்கண விதியும் சேர்த்தே சொல்லும் கடமை உணர்ச்சி வரவேண்டும்!

  ரொம்பக் க’ஷ்’டமான வேண்டுகோளா இருக்கா?:)
  முருகா…நீ ஓதிய தமிழ்..
  —-

 4. anonymous says:

  //கறுத்த முகம், காற்மேகம்//
  கார்-மேகம் தான் சரி, காற்-மேகம் ஆகாது! ஏன்-ன்னா ’மே’கம்…அதுல மொழிமுதல் “ம” மெல்லினம்! அதுல வல்லின றகர ஒற்று வராது!

  எல்லாத்துக்கும் ஒரே example வச்சி compare பண்ணிப் பார்க்கும் பழக்கம் கூடாது!
  * பலா+பழம்=பலாப்பழம்-ன்னு எழுதறோம்
  * மா+பழம்=மாப்பழம்-ன்னு எழுதலாமே! ஏன் மாம்பழம்?:)

  யானைக்கு எர்ரம்-ன்னா, குதிரைக்கு குர்ரம்-ன்னு எடுத்துக்கக் கூடாது! எல்லாத்துக்கும் எல்லா விதியும் பொருந்தாது!
  Can=Cans! Man=Mans? 🙂
  Man=Men – right?

  இது போல ஒவ்வொரு மொழிக்கும் இருக்கு! ஆங்கிலமாச்சும் no documentation! ஆனா நம் தமிழில் தனித்த விதிகள் எழுதியே வைக்கப்பட்டிருக்கு! Written Constitution! That too with a version history of 2000 years!

  மாம்பழம் என்பதே சரி! ஏன்-னா உயிர் ஈற்றுப் புணரியல்!
  (நிலைமொழி ஒற்றையாய் இருக்கும் போது, வருமொழி வல்லினத்திற்கு
  இனமான மெல்லினமாக மிகும்)
  ———

  சாதாரணப் பொதுமக்கள், உயிர் ஈற்றுப் புணரியல்-ன்னா பயந்துருவாங்க!:)
  Most of them go by common usage!
  அப்படியிருக்க, இணையத்தில் ஓரளவு கற்றறிந்த/ செல்வாக்குள்ள நீங்கள், ஒன்றைத் “தவறு” என்று சுட்டிவிட்டால்…again it goes by usage!

  அதனால் தான் என் பணிவான வேண்டுகோள்: ஒன்றைத் “தவறு”-ன்னு பொதுவில் நிராகரிக்கும் முன்னர்…குறைந்தபட்சம் தொல்காப்பியம் (அ) நன்னூலைத் தேடிப் பிடித்து, ஒரு பார்வை பாத்துட்டு, அப்பறம் சொல்லலாம்! அந்தக் குறிப்பிட்ட விதியும் மேற்கோள் காட்டலாம்!
  இப்படிச் செய்தால் இரட்டைப் பயன்பாட்டுச் சொற்கள் செத்து விடாமல், மொழியியல் நிலைக்கும்!

  வேண்டுகோள் தான்!

 5. anonymous says:

  //சிகப்பைச் சேர்த்தால், செக்கானம் என்று வராது//

  “செக்கர்” வானம் என்ற சொல் இன்றும் பயன்பாட்டில் இருக்கு! – சிவப்பான வானம் என்று பொருள்!
  செக்கரின் சொக்கர் என்ற பாடல் அழகோ அழகு!:)
  —-

  * ஆற்றுநீர் = ஆறுநீர்-ன்னு எழுதினா, அதைத் திருத்தலாம்! தப்பே இல்லை! அது இலக்கணப் பிழை தான்! = ’தன் ஒற்று இரட்டல் பண்பிற்கு இயல்பே’ என்பது விதி!
  * வாழ்த்துக்கள்-ன்னு எழுதினா, தவறு என்பதற்கு Where is the விதி?:) Nowhere!
  * அதே போல், கறுப்பு-கருப்பு!

  அவரவர் பயன்பாடு தான்! எனக்கு கருப்பு தான் பிடிச்சிருக்கு! க’று’ப்பு ன்னாலே அதி பயங்கரமா இருக்கு!
  ஆனா இதைத் தான் சொல்வேனே தவிர, க’று’ப்பு-ன்னு சொன்னா அது மொழிப் பிழை-ன்னு சொல்லவே மாட்டேன்!

  ஏன்-ன்னா தொல்காப்பியர், நன்னூல் முனிவர்-ன்னு பற்பல இலக்கண ஆசிரியர்கள் வகுத்த மொழி இலக்கணம் = Heritage!
  அதை ஒரே வீச்சில் “பிழை” என்று சொல்வதற்கு முன், we should exercise restraint and examine if it is really wrong! …and support it with தரவு! (ஆதாரம்)

 6. anonymous says:

  கருங்குயில், கருப்புக் குயில்-ன்னும் போது நல்லா இருக்கு!
  கறுப்புக் குயில்-ன்னா பயமா இருக்கு!:)
  குயில் கோவத்துல பாடினாப் பயமாத் தானே இருக்கும்!:)

  இது என் “நம்பிக்கை” மட்டுமே!
  இது மொழி விதி அல்ல!

  இந்த “நம்பிக்கை” கூட எல்லாச் சொல்லுக்கும் பொருந்தாது!
  ’அவன் ஏசிய ஏச்சைக் கேட்டு முகம் கறுத்தான்’-ன்னு வரும் போது, அப்போ என் “நம்பிக்கை” மாறி விடும்! முகம் கறுத்தான்-ன்னு நானே எழுதுவேன்!

  மொழியியலில், கறுப்பு-கருப்பு ரெண்டுமே சரி!
  என் ’நம்பிக்கை’யை விட மொழியியல் முக்கியம்!
  I will NOT banish the other usage, just because I am not comfortable with it!
  —-

 7. anonymous says:

  இவ்ளோ பேசுற நான் மட்டும் ஒழுங்கா?
  தரவுகளை உரசிப் பார்த்துத் தானே முடிவுக்கு வரணும்? கருப்பு-கறுப்பு ரெண்டுமே சரி-ன்னு தொல்காப்பியம் சொல்வது எனக்கு வெறும் ஞாபகத்தில் தான் இருக்கு!
  So just wanted to double check before confirming something! தொல்காப்பியம் – சேனாவரையர் உரையை எடுத்துப் பார்த்தேன்! Wow!

  இப்படியெல்லாம் நாம இணையத்துல கொழப்புவோம்-ன்னு தெரிஞ்சித் தானோ என்னமோ, அதுக்கும் விளக்கம் குடுத்து வச்சிருக்காரு தொல்சு:) நீங்களே படிங்க!

  கறுப்பு சிவப்பு எனத் தொழிற்படுத்துக் கூறிய சொற்கள்
  வெகுளியேயன்றி நிற வேறுபாடாகிய பண்பு உணர்த்துதற்கும் உரிய
  என்று கூறுவர் ஆசிரியர்; ஐயம் அகற்றுதற்கு.
  உ-ம் : ‘கறுத்த காயா’, ‘சிவந்த காந்தள்’

  கறுப்பு, சிவப்பு எனும் சொற்கள் கரும், செம் எனப்
  பண்பு நிலையில் இருந்தால் நிறத்தையுணர்த்தும்;
  கறுத்த, சிவந்த என்பனவாகத் தொழில்நிலையில் இருந்தால்
  வெகுளியை யுணர்த்தும் எனக் கொள்ள நேருமோ? – என ஐயங் கொண்டமையால்..
  கறுத்த கண், சிவந்த வாய் எனத் தொழில் நிலையில் இருந்தாலும்…. நிறத்தை யுணர்த்தும் என அவ் ஐயத்தைப் போக்க இச்சூத்திரம் கூறினார். நச்(சினார்க்கினியர்) உரையும் பார்க்க.

  So, now i can safely conclude that
  கறுப்பு-கருப்பு both are correct and have their own usage patterns!

  I may like கருப்பு usage!
  But, I will NOT banish the other usage, just because I am not comfortable with it!
  Why?
  Bcoz It is Tamizh “Heritage”!
  ………..and to it, I have my responsibility!

 8. anonymous says:

  எல்லாச் “சிவப்பும்” உந்தன் கோபம்
  -ன்னு வரும் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

  முருகனை (சேயோன்), இந்தப் பாட்டு பாடிக் கேலி செய்வேன்!:)
  ஆனா இப்போ, எல்லாக் “கருப்பும்” உந்தன் மச்சம்-ன்னு பாடலாம் போல இருக்கு:)

  இணையத்தில் சில/பலர், தரவுகளோடு முன் வைத்தால் கோபித்துக் கொள்கிறார்கள்!
  சும்மா எதிர்க்கிறவன் கூட ஓக்கே, ராசி ஆயீருவாங்க! ஆனா எதிர்ப்பாய் பேசாது, தரவோட மட்டும் பேசிட்டா அம்புட்டு தான்! அவனே எதிரி!:)))
  என் கருத்துக்கு எதிர்க் கருத்து-ன்னா அதுக்காக ஆதாரங்களை அடுக்கணுமா? – போன்ற புரிதற் பிழைகள்!

  கருத்து எதிரா இருந்தாலும், மனம் என்றுமே ஒன்றான குணம்!
  =தாமே பெற வேலவன் தந்தது!
  டேய் முருகா-ன்னு டேய் தான் போடுறேன்…ஆனா கோச்சிக்கவே மாட்டான்:)
  டேய் பெருமாள்-ன்னு சொல்ல மாட்டேன்! அப்பா! காதலனைத் தான் டேய் போட முடியும்:)
  —-

  In Short..
  1. We can “prefer” our own usage pattern, but never ever “banish” rightful words from “heritage”, by saying they are “wrong”
  2. Let us accept the fact that, multiple usage patterns exist for certain tamizh chol
  3. We will support with tholkaapiyam/nan-nool, if we believe that they are wrong; instead of our own coinages & assumptions!

  Dont have internet in this refugee camp & isolated country! Wireless stealing at midnight, only for email & 365paa

  Didnt want to put these comments 1st, but put it only for 365paa; because it is Tamizh “Heritage”…and to it, I have my responsibility!

 9. anonymous says:

  வேறு ஏதோ யோசிச்ச போது, இன்னோன்னு தோனிச்சி! = அறிவியல்-கறுப்பு!
  மணி பன்னிரெண்டரை…தூங்கப் போவணும்…

  Black – denotes different different things in diff diff cultures! Same with white!
  Mostly black=-ve & white=+ve
  My Chinese friends have told me, they denote white for death! Strange, but itz their heritage!

  Black, in science, is what? = Not a single color is reflected back!
  VIBGYOR – From violet to red – It absorbs all frequencies! No reflection at all!
  But white light? = it can split into colors and reflect atleast some color based on the medium!

  ஆக, கறுத்தல்/கருப்பு = ஒன்றையும் எதிரொளிக்காது! எல்லாத்தையும் விழுங்கி விடும்!
  —-

  தமிழில் பார்த்தீங்க-ன்னா, பலவும் காரணப் பெயராவே தான் இருக்கும்!
  அதுவும் தொழிற் பெயரால் விளைந்த காரணப் பெயர்கள்!

  தோய்ப்பதால் = தோசை
  உண்பதால்= உணவு
  அவிப்பதால்=அவியல்
  பொரிப்பதால்=பொரியல்
  பறப்பதால்=பறவை
  செல்வதால்=செல்வம்
  …இப்பிடி எக்கச்சக்கம்! இடுகுறிப்பெயர்கள் மிகவும் கம்மி!

  அதே போல் நிறங்களுக்கும் பெயர் வைத்தார்களோ?
  * பச்சை = பசிய (ஈரமான/குளுமையான)
  * சிவப்பு = சிவத்தல் (மெல்லிய கோபம்)
  * கறுப்பு = கறுத்தல் (Extreme Anger-சினம்)
  * நீலம் = நீன்மை (sky blue)

  பெருஞ்சினம் வந்தா, எதையும் விழுங்கி விடும்! எதிரே நிற்பவரின் ஓரிரண்டு நல்ல குணம் கூடத் தெரியாது!
  No reflection! Everything is absorbed! Just emit black = அதனால் கறுத்தல்/கறுப்பு!

  தொழிற்பெயரால் விளைந்த காரணப் பெயர்களோ நிறங்கள்?-ன்னு எண்ண வைக்குது! படிக்கணும்! படிச்சிப் பார்த்தாத் தெரியும்!
  Good Night

  • என். சொக்கன் says:

   அன்புள்ள _______,

   நான் எந்தப் பயன்பாட்டையும் தவறு எனச் சொல்லவில்லை. நான் தந்த பாட்டே ‘கறுப்பு’ நிறப்பெயர் என்கிறது, என் நம்பிக்கை கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்புகிறது, அவ்வளவே!

   என். சொக்கன்,
   பெங்களூரு.

   • anonymous says:

    good morning chokkare, woke up early 6:00am:)
    oops….not you, i know u! that was a vEndukOL for other ppl, who have the tendency to ‘poke’:) i have observed this during #tnfishermen, when volunteers wrote kaRuppu naaL; pat came these ‘grammar ppl’ and poked fun on their spirit – “ozhungaa tamizh padichittu vaanga, appRam tamizh gosham podalaam; kaRuppu is gramatically wrong”
    Tholkaapiyar is a best grammarian by himself; Is he grammatically wrong?:) I thought of that & wrote it – as a vEndukOL; Athaan:)
    Thanks for the clarification & Have a nice day! (lemme send before wireless goes off)

 10. PVR says:

  I liked the ‘thukkada’. 🙂
  A doubt – is @kryes the anonymous? Style is similar…

 11. Samudra says:

  ர ற, ந ன இவையெல்லாம் தமிழில் மட்டும் தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். (correct me if I’m wrong) கன்னடத்தில் இரண்டுக்கும் ‘ರ ‘ ‘ನ’ தான். எனவே எப்படி சொன்னாலும் பரவாயில்லை.படிப்பவருக்குப் புரிந்தால் போதும்.மேலும் வறுமை-வறியவன் கருமை-கரியவன் .So கருப்பு என்பதே சரி என்று தோன்றுகிறது. மேலும் google Transliteration, Karuppu என்று எழுதினால் கருப்பு
  என்றே Default -ஆகக் காட்டுகிறது.

  சிவப்பு என்பது இன்றும் கோபத்தைக் குறிக்க பயன்படுகிறது.’சினத்தால் முகம் சிவந்தான்’சில சமயம் நாணத்திற்கும். ex:’வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது’..(சிவப்பதிகாரம் படம் ஞாபகம் வருகிறது 🙂 ) கருப்பு என்பதை கோபத்தைக்
  குறிக்க இப்போது பயன்படுத்துகிறோமா தெரியவில்லை.’பயத்தில் முகம் இருண்டு விட்டது’ என்று சொல்கிறோம். எனவே இப்போது கருப்பை பயத்துடன் இணைத்து விட்டோம் 🙂 விடாது கருப்பு!

  • என். சொக்கன் says:

   தமிழின் சிறப்பே ர, ற, ல, ள, ழ, ன, ந, ண போன்ற நுணுக்கமான வேறுபாடுகள்தான், அவற்றை அப்படிப் புறக்கணித்துவிடுவது நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

   உதாரணமாக, அரம் செய்ய விரும்பு, அறம் செய்ய விரும்பு ரெண்டும் 180 டிகிரி வெவ்வேறாச்சே!

   • GiRa ஜிரா says:

    இன்னைக்கு அறம் செய விரும்புறதே கழுத்துல அரம் செய விரும்புற மாதிரிதானே இருக்கு. 🙂

    ர, ற, ல, ள, ழ, ந, ன, ண வேறுபாடுகள் நிச்சயமாக பராமரிக்கப் படவேண்டியவை.

    கன்னட எடுத்துக்காட்டே சொல்றேன்.

    கன்னடத்துல ழ இல்லாம இருக்கலாம். ஆனா லவும் ளவும் உண்டு. மலே என்றால் மலை. மளே என்றால் மழை. இந்த வேறுபாட்டை கன்னடர்கள் முறையாகப் பலுக்குகிறார்கள்.

    இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். இதில் சிறிது தவறினாலும் அது தவறான பொருளைக் கொடுத்துவிடும்.
    ஹேளு என்றால் கன்னடத்தில் சொல்லு என்று பொருள்.
    ஹேலு என்றால் மலம் கழிப்பது.
    இதில் உச்சரிப்பு மாறினால் என்னவாகும்!

    ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அவைகளைப் பராமரிப்பது சரியே.

  • anonymous says:

   //மேலும் google Transliteration, Karuppu என்று எழுதினால் கருப்பு
   என்றே Default -ஆகக் காட்டுகிறது//
   Google Transliteration also shows கறுப்பு, if u press spacebar. It automatically lists alternate versions:)

   //எனவே இப்போது கருப்பை பயத்துடன் இணைத்து விட்டோம் விடாது கருப்பு..//
   நீங்க சொல்வது சரியே! கோபம் போய் பயம் வந்துருச்சி, பயம் போய் கள்ளங் கபடு வந்துருச்சி – கருப்புப் பணம்:)

   //ர ற, ந ன//
   இதுக்குச் சொக்கரும், ராகவனும் அருமையான பதிலைச் சொல்லி விட்டார்கள்; அந்த ஓசையும், எழுத்தும் தமிழுக்கு ஏன் தேவை-ன்னு!

   ர = நாக்கின் நுனி, மேல்நோக்கி எழுந்து, அண்ணத்தை வருடிக் கொண்டே வரும் ஓசை = பர்கர்(Burger)
   ற = நாக்கின் நுனி மேல்நோக்கி எழுந்து, அண்ணத்தை அழுத்தமாத் தொட்டு நிற்கும் ஓசை = பற்று
   தனியா வீட்டுல செஞ்சிப் பாருங்க! = பர்கர், பற்று :))

   இப்படி, எப்படி ஒலிக்கணும்-ன்னு அழகாச் சொல்லிக் குடுப்பாரு தொல்காப்பியர்!
   அதே போலத் தான் மொழிமுதல் வரும் ச=Cha! Chokkar, Chuntharar, Chol
   மொழி இடையில் வரும் ச=sa! Isai, pasumai

   My thozhan used to pronounce like this; I corrected my mistake and picked up from him
   Though he didnt give me tholkaapiyam reference, he told itz “thekkathi tamizh”
   I accepted him, bcoz his point is very valid

  • anonymous says:

   //ற ர//
   சும்மா ஒரு விளையாட்டுக்கு இப்படி எண்ணிப் பாருங்கள்…
   அறத்தான் வருவதே இன்பம்! – குறள் (தருமத்தால் வருவது இன்பம்)
   அரத்தான் வருவதே இன்பம்! – (கழுத்தை அறுத்தா வருவது இன்பம்)

   இதாச்சும் பரவாயில்லை!
   பள்ளியில் ஒரு தோழி…ஏதோ அவசரத்தில் “ற” வையே விட்டுட்டா!
   * அத்தான் வருவதே இன்பம்:))
   ஆசிரியர் படிச்சிக் காட்ட, வகுப்பே கொல் என்று சிரித்து விட்டது!:)

 12. GiRa ஜிரா says:

  ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர்.

  இதன் பொருள் என்ன? பொருள் இல்லாத சொல்லே கிடையாது.

  சட்டுன்னு அதிர்ச்சியா இருக்குல்ல. என்ன ஒரு ஸ்டேட்மெண்ட்டு! தொல்காப்பியரின் பஞ்ச் டயலாக்குன்னு சொல்லலாம்.

  என்னென்னவோ தரவு காட்டி என்னென்னவோ சொல்வாங்க. ஆனா தொல்காப்பியர் சொன்னதுலயே இந்தப் பேச்சுதான் ரொம்பப் பெரியது.
  எல்லாக் காலத்துக்கும் எல்லா மொழிக்கும் பொருத்தமான பேச்சு.

  நாமள்ளாம் என்னென்னவோ பேசுறோம். அப்படிப் பேசுற எல்லாச் சொற்களும் பொருள் உள்ள சொற்களாம். அது காலகாலமாகத் தமிழிலேயே வரும் சொற்களாக இருக்கலாம். புதுச் சொற்களாக இருக்கலாம். இல்லை ஏதோ உளறல் சொல்லாக இருக்கலாம். எப்படியிருந்தாலும் அது சொல்லப்படும் போது ஒரு பொருளைக் குறிக்கிறது.

  லபக்கினான்-னு நாம சொல்றோம். லபக் என்பது தமிழ்ச் சொல்லா? இல்ல. வேற ஏதாச்சும் மொழியில் இருந்து வந்த சொல்லா? இல்ல.

  ஆனா அந்த லபக்-குக்குப் பொருள் இருக்குதுல்ல. அது என்ன பொருள்னு விளக்க வேண்டிய தேவையே இல்ல. எல்லாருக்கும் தெரியும்.

  படுவது பாடு
  கெடுவது கேடு
  கடியது காடு
  சுடுவது சூடு
  இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

  அதே போல ஒவ்வொரு சொல்லுக்கும் இயல்பு உண்டு. அதென்ன இயல்பு? “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும்”
  புரியலையா?

  கை என்னும் சொல்லை எடுத்துக்கலாம். கை என்பது ஒரு பெயர் சொல். அதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் கை என்றால் உடம்பில் ஒரு உறுப்பு.
  ஒவ்வொரு சொல்லில் இருந்தும் சொல்லின் தன்மையையும் பொருளின் தன்மையையும் பார்க்கலாம்.

  இந்த ரெண்டு விதிகள்தான் சொற்களுக்கான அடிப்படை விதிகள். இதுக்கு மேல சொல்லப்பட்டவைதான் மற்ற விதிகள்.

  சரி. எதற்கு இதைச் சொன்னேன்?

  உழுந்து-உளுந்து
  கறுப்பு-கருப்பு
  பவழம்-பவளம்
  இப்படி நிறைய சொற்கள் இருக்கு. வேறுபாட்டோடு பயன்படுத்தப்படும் சொற்கள். எப்படியானாலும் எல்லாச் சொற்களும் பயன்குறித்தனவே. இரண்டையுமே பயன்படுத்துவதில் தவறில்லை.

  ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” சொல்றதும் “பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்”னு சொல்றதுக்கும் எதுவும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 🙂

 13. GiRa ஜிரா says:

  கறுப்பு சிவப்பு ஆகிய இரண்டு சொற்களுக்கு நிறம் மற்றும் வெகுளிப் பொருள் இருப்பதைத் தொல்காப்பியர் சொல்லியிருப்பது யோசிக்க வைக்கிறது.

  ஏன் கறுப்பையும் சிவப்பையும் சினத்திற்குச் சொல்ல வேண்டும்? சிவப்பு கூடப் புரிகின்றது. கறுப்பை ஏன்?

  எந்த ஒரு நிறமாக இருந்தாலும் அதன் அடர்த்தியைக் கூட்டிக் கொண்டே போனால் மிஞ்சுவது கறுப்புதான்.

  சரிய்யா… அதுக்கும் சினத்துக்கும் என்ன தொடர்பு?

  கோவத்துல இருக்குறவங்க கிட்ட ஏதாச்சும் சொல்லுங்க. காதுல ஏறுமா அது? சுத்தி என்ன இருக்குன்னு தெரியவிடாம சினம் மறைச்சிரும். இருட்டு என்னும் கறுப்பு தன்னில் இருப்பதையெல்லாம் மறைச்சிரும்.

  அதான் அங்க ஒத்துமை.

 14. amas32 says:

  Thank you Chokkan, GiRa, anonymous, for the detailed explanations. By coming here I am benefitting by every visit .
  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s