‘உம்’மில் எட்டு வகை

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை

முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று

அப்பால் எட்டே உம்மைச் சொல்லே

நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)

பாடியவர்: தொல்காப்பியர்

’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:

1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது

உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன

2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போது

உதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்

3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது

உதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்

4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போது

உதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)

5. முற்று : முழுமையைச் சொல்லும்போது

உதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை

6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போது

உதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்

7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போது

உதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்

8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போது

உதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?

துக்கடா

 • எட்டு வகை ‘உம்’முக்கும் எனக்குத் தெரிந்த விளக்கம், உதாரணங்கள் எழுதிவிட்டேன், ஆனால் உண்மையில் #3 & #8 எனக்கு முழுத் திருப்தி இல்லை, இன்னும் தெளிவான விளக்கம் கிடைத்தால் நன்றியுடன் இங்கே Update செய்துவைப்பேன் (Updated)
 • இதேபோல் தமிழில் ஆறு வகை ‘ஓ’, ஐந்து வகை ‘ஏ’ உண்டு, தெரியுமா? முழு விவரம் வேண்டுவோர் தொல்காப்பியத்தில் தேடிப் படியுங்கள் :>

280/365

Advertisements
This entry was posted in இலக்கணம், தொல்காப்பியம், பட்டியல். Bookmark the permalink.

21 Responses to ‘உம்’மில் எட்டு வகை

 1. anonymous says:

  //#3 & #8 எனக்கு முழுத் திருப்தி இல்லை//

  உம்:)

  ஊஉம்
  உம்
  உம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  ஊஉம்…ஊஉம்
  உம்
  :)))

  • anonymous says:

   இந்தப் பதிவுக்கு வரும் எல்லாப் பின்னூட்டங்களிலும் ஒரு “உம்” ஆச்சும் இருக்கணும்! சொல்லிட்டேன்! ஆமா:)

  • என். சொக்கன் says:

   யோவ், ஒழுங்கா விளக்கம் தாய்யான்னா பாட்டுப் பாடிகிட்டிருக்கீர்? :>

   • இப்பின்னூட்டத்தை பார்க்கும் முன்னரே, எனது பின்னூட்டத்தில் பல “உம்”களை சேர்த்துவிட்டேன். அட்ரா சக்க ;-))

 2. சிறு வயது தொட்டே என் மனதை கவர்ந்தது “சிறப்பும்மைகள்”. வள்ளுவனின் “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை” என்ற குறள் எப்போதும் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.

  ஆனால், இந்தப் பாவின் பொருளை மிகத் தெளிவாகவும், அழகாகவும், அருமையாகவும், விவரமாகவும், நயம்படவும், பொருள்படவும், சொக்கர் ஒருவராலேயே கொடுக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். நன்றி.

 3. anonymous says:

  சொக்கரே,
  தப்பு தப்பாப் பொருள் சொல்லுறீகளே? நியாயமா?:)

  //எச்சம் சிறப்பே// – //மீதமிருப்பதைச் சொல்லும்போது//
  //அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன//

  பறவைகள் = மிருகங்களின் “மீதமா”? :)))
  what logic is this?:)

  • anonymous says:

   //எச்சம் சிறப்பே//

   இதுக்கு “உண்மை”யான பொருள் என்னா-ன்னா……

   எச்சம் = “உம்-மா” குடுக்கும் போது, எச்சம் வருமே!
   அந்த எச்சம் = உம்மா எச்சம்; அது சிறப்பு-ன்னு தொல்காப்பியரு சொல்றாரு! ஆமாம் தானே முருகா?:)

   சொக்கரை, இந்த விளக்கத்தை ஒழுங்கா மாத்தி எழுதச் சொல்லு! அப்பத் தான் #3 & #8 க்கு பதில் சொல்லுவேன்:))

  • anonymous says:

   //மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன//

   இது சரியே!
   நான் சும்மா விளையாண்டேன்…for எச்சம் சிறப்பே:)

   மத்தபடி இது எச்சமே = remainder!
   நீயு”ம்” கொட்டிக்க வந்துட்டியா? meaning வேற ஒருத்தன் ஏற்கனவே கொட்டிக்கிட்டு இருக்கான்! நீ தான் இன்னும் மிச்சம்! (மீதம்) :))
   பறவைகளும் தங்கியிருந்தன meaning வேற ஒன்னு ஏற்கனவே தங்கி இருக்கு! இப்போ பறவை-யும்!

 4. balaraman says:

  #3
  ஒருவேளை அவரும் கடவுளை நம்புபவராக இருக்கலாம். 😉

  #8
  தொட்டதுக்கெல்லாம் தூக்கி எரிவதால் மின்சாரமும் சம்சாரமும் ஒன்று தான்! 🙂

 5. anonymous says:

  enough of playing; lemme type before wireless goes off!
  ஆப்பிரிக்காவில் சோறு”ம்” இல்லை, நெட்-“உம்” இல்லை! = இது என்னா “உம்” ன்னு கண்டுபுடிங்க:)
  ——–

  //8. ஆக்கம் : ஒன்றை இன்னொன்றாக நாமே எண்ணிக்கொள்ளும்போது//

  அல்ல!
  ஆக்கம்-ன்னா் = “ஆவது” (அ) விளைவது (அ) ஆகும் நிலைமை

  குண்டனு”ம்” ஒல்லி ஆனான் = ஆக்கம்! 🙂
  சேற்றிலு”ம்” செந்தாமரை விளையும் = ஆக்கம்/ விளைவு!

  • balaraman says:

   முருகா! நீ தான் anonymous-ஆ விளையாடுறியா?! 🙂

  • anonymous says:

   இப்படி ஆகும்/ விளையும் உம்-மைகளை நிறையவே சொல்லலாம்!
   இந்த, “ஆகும்”, “விளையும்” ல்லயே ஆக்க-உம்மை இருக்கு பாருங்க:))

   விளையு”ம்” விளைவு
   ஆகு”ம்” ஆக்கம்
   உண்ணு”ம்” உணவு
   பாடு”ம்” பாட்டு

   அதாச்சும் ஒரு வினையாலோ (அ) ஒருவனாலோ = விளைவது/ ஆவது = ஆக்க-உம்மை!
   * பாடுதல் என்ற வினையால் ஆன விளைவு = பாட்டு! => பாடு”ம்” பாட்டு
   * குண்டன் என்ற ஒருவனால் ஆன விளைவு = ஒல்லி => குண்டனு”ம்” ஒல்லி ஆனான்!
   —————-

   இதைக் கண்டுபுடிக்க ஒரு எளிய வழியும் இருக்கு!
   (பெரும்பாலும்) வினைத் தொகையா இல்லாது. வினை விரியா வந்தா = ஆக்க-உம்மை!

   சுடு சோறு = வினைத் தொகை
   சுடும் சோறு = சுடுவதால் வந்த ஆக்கம் = ஆக்க-உம்மை!

   செய் செயல் = வினைத் தொகை
   செய்யும் செயல் = ஆக்க-உம்மை! (செய்வதால் ஆன செயல்)

 6. சுப. இராமனாதன் says:

  #8:
  அங்கே போகவும்
  இங்கே வரவும்
  நல்லது நடக்கட்டும்
  நாத்திகம் வளரட்டும்
  தீயவை ஒழியட்டும்

  தொல்காப்பியர் சொல்லாமல் விட்டதை இராமனாதன் சொல்கிறார்:
  #9 உறுதி
  பட்ட காலிலே படும்
  மனதில் உறுதி வேண்டும்

  #10 உறுதியின்மை
  அது தப்பு போலும்

  #11 சாபம்
  செத்து சுண்ணாம்பு ஆகட்டும்
  நொந்து நூடுல்ஸ் ஆகட்டும்
  உருப்படாமல் போகட்டும்

  #12: கல்யாண மேளம் (அல்லது) சோதிகா-மாதவன் திரைக்கும்மாளம்
  டும் டும் டும்
  🙂

  (இதுமாதிரி குறைந்தபட்சம் 50 உம் எழுதமுடியும்-ன்னு நினைக்கிறேன். No offence to சொக்கன்.)

  • anonymous says:

   அண்ணாச்சி….
   தொல்காப்பியர் ஆவி ஒங்கள மன்னிக்கவே மன்னிக்காது:)))

   அங்கே போகவும்,
   நாத்திகம் வளரட்டும் = இதெல்லாம் வினை முற்று!

   தொல்காப்பியர், இங்கே சொல்வது இந்த “உம்” ஐ இல்ல!
   இடைச் சொல், conjunction ஐச் சொல்லுறாரு!
   அங்கே போகவும் = is not applicable here!
   but, போகவும் வரவும் சரியா இருக்கு! = is applicable:)

   டும் டும் டும் is always applicable:))
   இந்த ஒன்றுக்காக உம்மை மன்னிச்சி விடுறேன்:))))

 7. anonymous says:

  coming to #3…..ஐயம் குறித்த சொக்கரின் விளக்கம் மிகவும் சரியே

  எ.காட்டு வேணும்-ன்னா…..
  #365paa வில் பின்னூட்டுவது அவனு”ம்” அல்லன், இவனு”ம்” அல்லன்….
  அப்படீன்னா யாரு? -ங்கிற ஐயம் எழுதுல்ல? அந்த உம்மை!:)
  ஐயம் குறித்து எழும் பல உம்மை-கள் = ஐய-உம்மை!
  ———————-

  chokkar has given many apt examples! If u want for #3 & #8…..
  ஐயம்
  = திருடியது அவனு”ம்” அல்ல, இவனு”ம்” அல்ல! (அப்போ யாரு?)
  = பரிசு அவளுக்கு”ம்” இல்ல! இவளுக்கு”ம்” இல்ல! (அப்போ யாருக்கு?)

  ஆக்கம்
  = நீ பாடு”ம்” பாட்டு நல்லா இருக்கு!
  = ராஜா போடு”ம்” ம்யூசிக் டாப் கிளாஸ்!

 8. anonymous says:

  //எட்டு வகை ‘உம்’முக்கும் எனக்குத் தெரிந்த விளக்கம், உதாரணங்கள் எழுதிவிட்டேன்//

  என்ன ஆணவம் இந்தச் சொக்கருக்கு?:)
  //எட்டு வகை ‘உம்’முக்கும்// – பெண்கள் சொல்லும் “உம்” க்கும் மட்டும் பொருள் எழுதுங்க பார்ப்போம், நீங்க பெரிய ஆளு-ன்னு ஒத்துக்கறேன்:)))
  tata………….

 9. திரு சொக்கன் அவர்களே, புரியும்படி தெள்ளத் தெளிவாகப் பாடம் எடுத்துள்ளீர்கள், நன்றி 🙂

  பின்னூட்டம் இட்டவர்களும் அருமையாக உதாரணங்களுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி 🙂

  amas32

 10. anonymous says:

  பெங்களூரு, சென்னையில் – Indonesia நிலநடுக்க அதிர்வுகள் தெரிஞ்சுதா என்ன?
  இப்பத் தான் hearing on radio…..யாவரும் நலம் தானே?

 11. ஆனந்தன் says:

  உம்..உம்.. நடக்கட்டும், நடக்கட்டும்..
  இது எந்த வகை?!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s