Category Archives: புகழ்ச்சி

நெடுமொழி

ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி வாளொடு வைகுவோன் யான் ஆக, நாளும் கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப் பிழி மகிழ் உண்பார் பிறர் நூல்: புறப்பொருள் வெண்பா மாலை (கரந்தைப் படலம் #32) பாடியவர்: ஐயனாரிதனார் சூழல்: கரந்தைத் திணை : நெடுமொழி கூறல் துறை : கூடுதல் விளக்கம் … Continue reading

Posted in இலக்கணம், புகழ்ச்சி, புறம், வீரம், வெண்பா | 2 Comments

தேரில் வந்த இரவலர்கள்

ஆன்றோள் கணவ, சான்றோர் புரவல, நின் நயந்து வந்தனன் அடுபோர்க் கொற்றவ, இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் கமழும் தாழைக் கானலம் பெருந்துறை தண்கடல் படப்பை நல் நாட்டுப் பொருந, … வாரார் ஆயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம் நல்கும் நகைசால்வாய் மொழி … Continue reading

Posted in உயர்வு நவிற்சி அணி, கொடை, பதிற்றுப்பத்து, புகழ்ச்சி, புறம், வள்ளல் | 2 Comments

உடைத்து

வேழம் உடைத்து மலைநாடு; மே தக்க சோழ வளநாடு சோறு உடைத்து – பூழியர்கோன் தென்னாடு முத்து உடைத்து; தெள்நீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து. நூல்: தனிப்பாடல் பாடியவர்: ஔவையார் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) மலைகள் அதிகம் உள்ள சேரனின் நாட்டில் சிறந்த … Continue reading

Posted in ஔவையார், சேரன், சோழன், தனிப்பாடல், பாண்டியன், புகழ்ச்சி, வெண்பா | 6 Comments

சொல்லின் செல்வன்

மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலைக் குரிசில் மைந்தன் தேற்றம் உற்று இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி ’ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்!’ என விளம்பலுற்றான். * ‘இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூர கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி … Continue reading

Posted in அனுமன், ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, புகழ்ச்சி, ராமன் | 3 Comments