நெடுமொழி

ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி

வாளொடு வைகுவோன் யான் ஆக, நாளும்

கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்

பிழி மகிழ் உண்பார் பிறர்

நூல்: புறப்பொருள் வெண்பா மாலை (கரந்தைப் படலம் #32)

பாடியவர்: ஐயனாரிதனார்

சூழல்: கரந்தைத் திணை : நெடுமொழி கூறல் துறை : கூடுதல் விளக்கம் ‘துக்கடா’வில்

ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி பொங்கும்படி ஆட்சி நடத்துகிற என் அரசனே, வெற்றிகளைக் குவிக்கிறவனே, வீரக் கழல் அணிந்தவனே,

எதிரிகளின் படை வெள்ளம்போல் பொங்கி வந்தாலும் பரவாயில்லை, உன் சார்பாக நான்மட்டும் வாள் ஏந்திச் செல்வேன், தன்னந்தனியாக அவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவேன்!

அதுவரை, நீயும் மற்ற படை வீரர்களும் இங்கேயே பாசறையில் தங்கியிருங்கள், எல்லாரும் நீ தருகிற கள்ளை உண்டு மகிழ்ந்திருக்கட்டும், நான் இதோ வந்துவிடுகிறேன்!

துக்கடா

 • ’நெடுமொழி’ என்றால், ஒரு வீரன் தன்னுடைய பெருமையைத் தானே உரக்கச் சொல்லிக்கொள்வது (Self Praise), பெருமை அடித்துக்கொள்வது
 • சாதாரணமாகப் பார்த்தால் இது தவறுதான், ஆனால் போர் நடக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீரனும் இப்படி வீரமாகப் பேசினால் ‘இவர்கள் இருக்கும்வரை நாம் ஜெயிப்பது உறுதி’ என்று அரசனுக்கும் மற்ற வீரர்களுக்கும் தோன்றும், அனைவருக்கும் தன்னம்பிக்கை பெருகும் என்பதால் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது
 • இன்றைய பாடலுடைய அர்த்தம் ‘நான் சண்டை போடச் செல்கிறேன், நீங்களெல்லாம் சாராயம் குடித்துக்கொண்டு உட்கார்ந்திருங்கள்’ என்று அடுத்தவர்களைக் கால் வாருவது அல்ல, ‘இந்தப் பயல்களுடன் சண்டையிடப் பெரிய படையெல்லாம் வேண்டாம், நம் பக்கத்திலிருந்து ஒரே ஒருவர் சென்றால் போதும்’ என்று வேண்டுமென்றே எதிரியின் வலிமையைக் குறைத்துச் சொல்லி நம் படையினரை ஊக்கப்படுத்துவது!
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி
 • வாளொடு வைகுவோன் யானாக, நாளும்
 • கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப்
 • பிழிமகிழ் உண்பார் பிறர்

289/365

Advertisements
This entry was posted in இலக்கணம், புகழ்ச்சி, புறம், வீரம், வெண்பா. Bookmark the permalink.

2 Responses to நெடுமொழி

 1. இம்சை அரசன் 23ஆம் புலகேசி, மிகவும் மகிழ்ந்திருப்பான் போலும். 🙂

 2. வீர தீர பிரதாபங்கள் என்று சரித்திரக் கதைகளில் வரும். ஒரு அரசனோ அவன் தளபதியோ பல போர்களில் வெற்றி பெற்றிருந்தால் அவன் கீழிருக்கும் படை மிகுந்த தைரியத்துடன் செயல் படும். ஆனால் அதை தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அருகில் இருப்பவருக்குக் கூட தெரியாது.

  ஆனால் இந்தப் பாடலில் உள்நோக்கம் சிறிது மாறுபட்டு இருக்கிறது. பீமன் போல், கடோத்கஜன் போல் ஒருவனே போதும் எதிரியை வீழ்த்த, மற்ற அனைவரும் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற பொருளில் வருகிறது. ஒரு படைக்கு இப்படி ஒரு வீரர் அகப்பட்டால் அரசனுக்கு மகிழ்ச்சி தான்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s