சொல்லின் செல்வன்

மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலைக் குரிசில் மைந்தன்

தேற்றம் உற்று இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி

’ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்

வேற்றுமை இவனோடு இல்லை, ஆம்!’ என விளம்பலுற்றான்.

*

‘இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூர

கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார் கொல் இச் சொல்லின் செல்வன்?

வில்லார்தோள் இளைய வீர, விரிஞ்சனோ விடைவல்லானோ!’

நூல்: கம்ப ராமாயணம் (கிஷ்கிந்தாக் காண்டம், மராமரப் படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: அனுமனை முதன்முதலாகப் பார்க்கும் ராமரின் சிந்தனை இப்படி ஓடுகிறது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

(முந்தைய பாடல்களில்) அனுமன் இப்படிச் சொன்னதும் திருத்தமான கட்டமைப்பைக் கொண்ட வில்லை ஏந்திய வலிமையான ராமனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. ’இவனைவிடச் சிறந்த குணங்களை உடையவர்கள் வேறு யாரும் இல்லை’ என்று தீர்மானித்துக்கொண்டான். ‘திறமை, முழுமை, கல்வி, அதனால் வரும் பணிவு, அறிவு என இவனிடம் இல்லாத குணங்களே கிடையாது’ என்று லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தான்.

*

தம்பி, இப்போது நாம் இருக்கும் இந்த உலகம் தவிர, வருங்காலத்தில் வேறு புதிய உலகங்கள் தோன்றினால் அங்கேயும் இவனுடைய புகழ் பாடப்படும், இவனுக்குத் தெரியாத கலைகள் இல்லை, இவன் படிக்காத நூல்கள் இல்லை, இவற்றில் எதையும் இவன் வலியச் சென்று கற்கவில்லை, எல்லாம் பிறவியிலேயே கிடைத்த வரம்!’

‘இவன் ஒரு ஞானக்கடல் என்பது இப்போது இங்கே இவன் பேசிய சில வார்த்தைகளில் இருந்தே நமக்குப் புரிந்துவிட்டது, யார் இந்தச் சொல்லின் செல்வன்?’

‘வில் ஏந்திய தோளைக் கொண்ட என் தம்பி, இவன் யார்? சிவபெருமானோ? அல்லது பிரம்மனோ?’

050/365

Advertisements
This entry was posted in அனுமன், ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், திருமால், பக்தி, புகழ்ச்சி, ராமன். Bookmark the permalink.

3 Responses to சொல்லின் செல்வன்

 1. “என் அன்பன்” என்று இறைவனே தன் வாயால் சொல்வது இருவரை மட்டும் தான்!
  அந்த இருவரில் ஒருவர் கூட மனிதர் இல்லை:)

  * சின்னக் குழந்தையான ஒரு ‘அசுரன்’!
  * ‘விலங்கு’ உருவான ஒரு அனுமன்!

  என்ன அழகா, இராகவன் வாய் வழியாக, கம்பர் ஒரு சித்திரம் தீட்டுறாரு!
  அனுமனைப் பற்றிய அனைத்து Profile Description-உம் ரெண்டே பாடல்களில்…

  சொல்லின் செல்வன்!
  இவன் சொல்லின்…துன்பமென்னும் அந்தக் கூற்றுவனும் செல்வன்!

 2. காதலில் தவிக்க்க்க்கும் நேரத்தில்,
  தலைவனுக்கும்-தலைவிக்குமே தேறுதலாய் வந்த அனுமனே,
  எனக்கும் அதே தேறுதல் நல்கிக் காத்தருள்!
  சிறிய திருவடிகள் திருவடிகளே தஞ்சம்!

 3. syed hoshmin says:

  arumai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s