Category Archives: வெண்பா

காவல்காரி, காதல்காரி!

திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி, தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண் புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என் மனம் காக்கவைத்தார் மருண்டு நூல்: திணை மாலை நூற்றைம்பது (#30) பாடியவர்: கணிமேதாவியார் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது சந்திரனை இரண்டு … Continue reading

Posted in அகம், ஆண்மொழி, காதல், குறிஞ்சி, திணை மாலை நூற்றைம்பது, வெண்பா | 31 Comments

போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ் அம் கண் உலகு அளித்தலான்! * ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்! * மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு அவன் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா | 22 Comments

எழுத்தெழுத்தாக…

ஏந்திய வெண்படையும், முன்னாள் எடுத்ததுவும், பூந்துகிலும், மால் உந்தி பூத்ததுவும், வாய்த்த உலைவு இல் எழுத்து அடைவே ஓர் ஒன்றாச் சேர்க்கத் தலை, மலை, பொன், தாமரை என்றாம் நூல்: தண்டியலங்கார உதாரணம் பாடியவர்: தெரியவில்லை 1. திருமால் கையில் ஏந்திய வெள்ளைச் சங்கு 2. முன்பு ஒருநாள் கண்ணனாக அவதரித்தபோது, மக்களை மழையிலிருந்து காப்பதற்காக … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், திருமால், வார்த்தை விளையாட்டு, விஷ்ணு, வெண்பா | 7 Comments

தூய்மை

உண் பொழுது நீர் ஆடி உண்டலும், என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதலும், தோல் வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை, இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில் நூல்: திரிகடுகம் (#27) பாடியவர்: நல்லாதனார் 1. பசிக்கிறதா? குளித்துவிட்டுச் சாப்பிடுங்கள் 2. கஷ்டமான நிலைமையா? அப்போதும் பொய் சொல்லாதீர்கள் 3. தோல் வற்றிச் சுருங்கிய வயதான … Continue reading

Posted in அறிவுரை, திரிகடுகம், வெண்பா | 1 Comment

வெண்ணிலவே வெண்ணிலவே

ஈர மதியே, இள நிலவே, இங்ஙனே சோர்குழலின்மீதே சொரிவது எவன், மாரன் பொரவு அளித்தான், கண்ணி உனக்குப் புலரா இரவு அளித்தான் அல்லனோ இன்று நூல்: நளவெண்பா (சுயம்வரக் காண்டம்) பாடியவர்: புகழேந்தி சூழல்: நளனை நினைத்து வாடும் தமயந்தி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள் குளிர்ச்சியான, இளமையான நிலவே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் திடீரென்று … Continue reading

Posted in காதல், சினிமா, நளவெண்பா, வெண்பா | 12 Comments

எத்தனை யானைகள்?

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று, இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில் போவது வாசல் பத்தில் புக்கு நூல்: கணக்கதிகாரம் பாடியவர்: காரிநாயனார் ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன. அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த … Continue reading

Posted in கணக்கதிகாரம், புதிர், வெண்பா | 11 Comments

மெல்லினங்கள் பேசு கண்ணே

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம், வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது, நெட்டு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் நூல்: நல்வழி (#33) பாடியவர்: ஔவையார் ’இந்தக் காலத்துல மொரட்டுத்தனமா அதட்டினாதான் வேலை நடக்கும், மென்மையாப் பேசினா உங்களை ஏமாத்திப்புடுவாங்க’ என்று உங்களிடம் யாராவது சொல்கிறார்களா? நம்பாதீர்கள்! மென்மையான … Continue reading

Posted in அறிவுரை, உவமை நயம், ஔவையார், வெண்பா | 5 Comments