Category Archives: முருகன்

துணை நீ

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே! நூல்: கந்தர் அலங்காரம் (#70) பாடியவர்: அருணகிரிநாதர் முருகா, நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் உன்னையே காணவேண்டும். … Continue reading

Posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், பக்தி, முருகன் | 29 Comments

பிள்ளை முருகன்

அரன் அவன் இடத்தில் ஐங்கரன் வந்துதான் ….’ஐய, என் செவியை மிகவும் அறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும், ….அத்தன் வேலவனை நோக்கி விரைவுடன் வினவவே, ‘அண்ணன் என் சென்னியில் ….விளங்கு கண் எண்ணினன்’ என, வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும் ….விகடம் ஏன் செய்தாய்?’ என, ’மருவும் என் கை நீளம் முழம் அளந்தான்’ … Continue reading

Posted in இலக்கணம், குறும்பு, சிவன், பக்தி, பண்டிகை, பிள்ளையார், முருகன் | 12 Comments

நீ நடந்தால் நடை அழகு!

தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சலங்கைகள் கொஞ்சிட, மணித் தண்டைகள் கலின் கலின் கலின் எனத் திருவான சங்கரி மனம் குழைந்து உருக – முத்தம் தர வரும் செழுந்தளர் நடைச் சந்ததி சகம் தொழும் சரவணப் பெருமாளே! செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுறக் கந்தனை அறிந்து அறிந்தி அறிவினில் சென்று செருகும் தடம் தெளிதரத் … Continue reading

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், நண்பர் விருப்பம், பக்தி, முருகன் | 11 Comments

செங்கோடமர்ந்தவனே

கந்தா, அரன் தன் மைந்தா, விளங்கு ….கன்று ஆ முகுந்தன் மருகோனே, கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட ….கண்டா, அரம்பை மணவாளா, செந்தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு ….திண் தோள் நிரம்ப அணிவோனே, திண் கோடரங்கள் எண்கோடு உறங்கும் ….செங்கோடு அமர்ந்த பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் கந்தா, சிவபெருமானுடைய மகனே, … Continue reading

Posted in அருணகிரிநாதர், சிவன், திருப்புகழ், திருமால், பக்தி, முருகன் | 5 Comments

ஆறு முகங்கள்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே, ….ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே, கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே, ….குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே, மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே, ….வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே, ஆறு முகம் ஆன பொருள் நீ, … Continue reading

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன் | 30 Comments

தாரகன் செய்த தவம்

முழுமதி அன்ன ஆறு முகங்களும், முந்நான்கு ஆகும் விழிகளின் அருளும் வேலும் வேறு உள படையின் சீரும் அழகிய கரம் ஈராறும் அணிமணித் தண்டை ஆர்க்கும் செழுமலர் அடியும் கண்டான் அவன் தவம் செப்பல்பாற்றோ நூல்: கந்தபுராணம் பாடியவர்: கச்சியப்ப சிவாச்சாரியார் சூழல்: தாரகனுடன் யுத்தம். முருகன் போர்க்களத்துக்கு வரும் காட்சி முழு நிலவைப் போன்ற … Continue reading

Posted in கந்த புராணம், பக்தி, முருகன், வர்ணனை | 22 Comments

குருநாதா!

அபகார நிந்தை பட்டு உழலாதே ….அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே ….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ! இபமாமுகன் தனக்கு இளையோனே, ….இமவான் மடந்தை உத்தமி பாலா, ஜெபமாலை தந்த சற்குருநாதா, ….திரு ஆவினன்குடிப் பெருமாளே! நூல்: திருப்புகழ் பாடியவர்: அருணகிரிநாதர் முருகா, யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற … Continue reading

Posted in அருணகிரிநாதர், திருப்புகழ், பக்தி, முருகன் | 5 Comments