Category Archives: முத்தொள்ளாயிரம்

கோபம் தணிக்கும் மருந்து

தொழில் தேற்றாப் பாலகனை முன்நிறீஇப் பின் நின்று அழல் இலைவேல் காய்த்தினர் பெண்டிர் கழல் அடைந்து மண் இரத்தல் என்ப வயங்குதார் மா மாறன் கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து நூல்: முத்தொள்ளாயிரம் (#73) பாடியவர்: தெரியவில்லை முன்கதை போர் என்று வந்துவிட்டால், பாண்டியனின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது. ஆவேசத்துடன் களம் புகுந்து எதிரியின் படையைத் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், நாடகம், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வீரம், வெண்பா | 15 Comments

பூமி வில்

மாலை விலை பகர்வார் கிள்ளிக் களைந்த பூ சால மிகுவதோர் தன்மைத்தாய்க் காலையே வில் பயில் வானகம் போலுமே வேல்வளவன் பொற்பு ஆர் உறந்தை அகம் நூல்: முத்தொள்ளாயிரம் (#25) பாடியவர்: தெரியவில்லை வேல்வளவனாகிய சோழனின் நாடு, அழகு நிறைந்த உறந்தை நகரம். அங்கே பூக்கடைகள் ஏராளம். அந்தக் கடைகளில் உள்ள வியாபாரிகள் பலவிதமான மலர்களைத் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சோழன், முத்தொள்ளாயிரம், வர்ணனை, வெண்பா | 2 Comments

ஒரு வித்தியாசமான தூது

என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல், அன்னையும் இன்னள் என உரையல், பின்னையும் தண் படா யானைத் தமிழ்நர் பெருமாற்கு என் கண் படா ஆறே உரை நூல்: முத்தொள்ளாயிரம் (#82) பாடியவர்: தெரியவில்லை சூழல்: பாண்டிய மன்னனைக் காதலிக்கிறாள் ஒருத்தி, அவனிடம் தன்னுடைய காதலைச் சொல்வதற்காகத் தோழியைத் தூது அனுப்புகிறாள் (வார்த்தைக்கு … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், குறும்பு, தூது, பெண்மொழி, முத்தொள்ளாயிரம், வெண்பா | 6 Comments

நெஞ்சு அறியாள்

கோள் தேங்கு சூழ் கூடல் கோமானைக் கூட என் வேட்டு அங்குச் சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை வெறும் கூடு காவல் கொண்டாள் நூல்: முத்தொள்ளாயிரம் பாடியவர்: தெரியவில்லை (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) தென்னை மரங்களில் தேங்காய்கள் குலைகுலையாகக் … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா | 6 Comments

ஊடல் அதிகமானால்…

ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம் கூடல் இழந்தேன் கொடிஅன்னாய், நீள்தெங்கின் பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக் காளையைக் கண்படையுள் பெற்று. நூல்: முத்தொள்ளாயிரம் பாடியவர்: தெரியவில்லை பாடப்பட்டவர்: சோழன் சூழல்: காதல் கனவு கண்டு எழுந்த ஒரு பெண் வருத்தத்தோடு பேசுகிறாள் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், சோழன், தோழி, முத்தொள்ளாயிரம், வெண்பா | 6 Comments

நின்ற தவம்

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும் நீர்நிலை நின்ற தவம்கொலோ – கூர்நுனைவேல் வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால் கொண்டிருக்கப் பெற்ற குணம். நூல்: முத்தொள்ளாயிரம் (#75) பாடியவர்: தெரியவில்லை பாடப்பட்டவர்: பாண்டியன் (அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை) கார் காலம். நல்ல மணம் கொண்ட … Continue reading

Posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், சினிமா, பாண்டியன், முத்தொள்ளாயிரம், வெண்பா | 3 Comments

நண்பர் படைப்பு – 1

இந்தப் பதிவை எழுதியவர், நண்பர் சங்கர்: அவரது வலைப்பதிவு –> http://psankar.blogspot.com/ ட்விட்டர் பக்கம் –> http://www.twitter.com/psankar நீங்களும் உங்களது விருப்பப் பாடல்களை விளக்கத்துடன் எழுதி அனுப்பலாம் 🙂 இப்பாடல் முத்தொள்ளாயிரத்திலிருந்து. முத்தொள்ளாயிரம் என்பது தமிழகத்தின் முவேந்தர்களைப் பற்றியும் அவர்களது நாடுகளின் பெருமைகளைப் பற்றியும் பாடுகிற பாடல்களின் தொகுப்பு . இங்கே இடம் பெற்றுள்ள பாடல் சேர நாட்டின் சிறப்பைப் … Continue reading

Posted in சேரன், நண்பர் படைப்பு, நண்பர் விருப்பம், முத்தொள்ளாயிரம், வர்ணனை, வெண்பா, Uncategorized | 6 Comments