Category Archives: சினிமா

போற்றுதும்!

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர் தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று இவ் அம் கண் உலகு அளித்தலான்! * ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன் கோட்டு மேரு வலம் திரிதலான்! * மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாம நீர் வேலி உலகிற்கு அவன் … Continue reading

Posted in இளங்கோவடிகள், சினிமா, சிலப்பதிகாரம், வெண்பா | 22 Comments

வெண்ணிலவே வெண்ணிலவே

ஈர மதியே, இள நிலவே, இங்ஙனே சோர்குழலின்மீதே சொரிவது எவன், மாரன் பொரவு அளித்தான், கண்ணி உனக்குப் புலரா இரவு அளித்தான் அல்லனோ இன்று நூல்: நளவெண்பா (சுயம்வரக் காண்டம்) பாடியவர்: புகழேந்தி சூழல்: நளனை நினைத்து வாடும் தமயந்தி நிலவைப் பார்த்துப் பேசுகிறாள் குளிர்ச்சியான, இளமையான நிலவே, என்ன ஆயிற்று உனக்கு? ஏன் திடீரென்று … Continue reading

Posted in காதல், சினிமா, நளவெண்பா, வெண்பா | 12 Comments

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம் காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா, ஆட்டியவா நாடகம், ஆடகத் தாமரை ஆர் அணங்கே! நூல்: அபிராமி அந்தாதி (#80) பாடியவர்: அபிராமி பட்டர் தங்கத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் உயர்வானவளே, அபிராமி அன்னையே, இப்போதெல்லாம் என்னைச் … Continue reading

Posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், சினிமா, பக்தி | 6 Comments

இனியன்

எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரியது ஒன்று? நூல்: அற்புதத் திரு அந்தாதி (#10) பாடியவர்: காரைக்கால் அம்மையார் என் உயிருக்கு இனிமை தருபவனை, என் தலைவனை, அந்தச் சிவபெருமானை நான் நிரந்தரமாக என்னுடைய உள்ளத்தில் பதித்துவைத்திருக்கிறேன், அதனால் … Continue reading

Posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், பக்தி, பெண்மொழி, வெண்பா | 25 Comments

கூடல் வெள்ளம்

குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து ஓடி வையைதனில் சென்று எதிர்த்து நிற்பது எனச் சீபதியோர் அன்று எதிர்த்துக் கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில் ஏடு அலர் தாரான் எழுந்து அருளி… நூல்: அழகர் கிள்ளை விடு தூது பாடியவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் சூழல்: அழகர் கோடைத் திருவிழாவுக்காக மதுரையில் உள்ள வையை ஆற்றில் எழுந்தருளுகிறார் … Continue reading

Posted in சினிமா, திருமால், தூது, பக்தி, வர்ணனை, விஷ்ணு | 1 Comment

நண்டே உனக்கொரு நமஸ்காரம்

கொடுந்தாள் அலவ! குறை யாம் இரப்பேம் ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் கடந்த வழியை எம் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ நூல்: ஐந்திணை ஐம்பது (#42) பாடியவர்: மாறன் பொறையனார் சூழல்: நெய்தல் திணை. காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு காதலி. அவர்கள் சந்தித்த கடற்கரை ஓரமாக நடந்து செல்கிறாள். அப்போது … Continue reading

Posted in கடற்கரை, சினிமா, நாடகம், நெய்தல், பெண்மொழி, வெண்பா | 6 Comments

வண் திருவையாறு

கட்டுவடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு இட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் சீர் வட்டமதில் உள் திகழும் வண் திருவையாறே! நூல்: தேவாரம் பாடியவர்: திருஞானசம்பந்தர் எட்டு வடங்களைச் சேர்த்துக் கட்டிய வட்ட வடிவ முரசு. அதனை நந்தி தேவர் தன்னுடைய கரங்களால் … Continue reading

Posted in சினிமா, சிவன், திருஞானசம்பந்தர், தேவாரம், பக்தி | 1 Comment