Category Archives: குறிஞ்சி

காவல்காரி, காதல்காரி!

திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி, தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண் புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என் மனம் காக்கவைத்தார் மருண்டு நூல்: திணை மாலை நூற்றைம்பது (#30) பாடியவர்: கணிமேதாவியார் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது சந்திரனை இரண்டு … Continue reading

Posted in அகம், ஆண்மொழி, காதல், குறிஞ்சி, திணை மாலை நூற்றைம்பது, வெண்பா | 31 Comments

வீரத்துக்கு மரியாதை

நகை நீ கேளாய் தோழி! அல்கல் வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது ‘அருவழி விலக்கும் எம் … Continue reading

Posted in அகநானூறு, அகம், கபிலர், குறிஞ்சி, நாடகம் | 15 Comments

கதவைத் திறந்தால் காதல் வரும்

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும! ஓரி முருங்கப் பீலி சாய நல் மயில் வலைப் பட்டாங்கு யாம் உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே நூல்: குறுந்தொகை (#244) பாடியவர்: கண்ணனார் சூழல்: குறிஞ்சித் திணை, காதலன் தன் காதலியைச் சந்திக்க … Continue reading

Posted in அகம், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி | 17 Comments

கொடியர் அல்லர்

’மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் பசைஇப் பசந்தன்று, நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே நூல்: குறுந்தொகை (#87) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது ‘கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் … Continue reading

Posted in அகம், கபிலர், குறிஞ்சி, குறுந்தொகை, நாடகம், பெண்மொழி | 24 Comments

கொம்பும் பழமும்

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! யார் அஃது அறிந்திசினோரே? சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்குஇவள் உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே நூல்: குறுந்தொகை (#18) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை : காதலியை இரவில் சந்தித்துத் திரும்பினான் காதலன். அவனை வழிமறித்துத் தோழி சொன்னது மலைச்சாரல் நாட்டைச் … Continue reading

Posted in அகம், உவமை நயம், கபிலர், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி | 8 Comments

நெடுவெண்ணிலவே

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல் இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டு இடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை நெடுவெண்ணிலவே நூல்: குறுந்தொகை (#47) பாடியவர்: நெடுவெண்ணிலவினார் சூழல்: குறிஞ்சித் திணை : காதலியைச் சந்திப்பதற்காக இரவில் வருகிறான் காதலன். அப்போது நிலாவிடம் பேசுவதுபோல் அவனுக்கு ஒரு சேதி சொல்கிறாள் தோழி நீண்ட … Continue reading

Posted in அகம், ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, Uncategorized | 2 Comments

தடுக்கும் தூது

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால் யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப்பவர் நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் அரிதே, காதலர்ப் பிரிதல்! இன்று செல் இளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு … Continue reading

Posted in அகம், காதல், குறிஞ்சி, தோழி, நற்றிணை, பெண்மொழி, வர்ணனை | 1 Comment