Category Archives: அகம்

காவல்காரி, காதல்காரி!

திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி, தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண் புனம் காக்கவைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என் மனம் காக்கவைத்தார் மருண்டு நூல்: திணை மாலை நூற்றைம்பது (#30) பாடியவர்: கணிமேதாவியார் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பார்த்துவிட்டு வருகிறான் காதலன். அவன் தன்னுடைய நண்பனாகிய பாங்கனிடம் சொல்வது சந்திரனை இரண்டு … Continue reading

Posted in அகம், ஆண்மொழி, காதல், குறிஞ்சி, திணை மாலை நூற்றைம்பது, வெண்பா | 31 Comments

வீரத்துக்கு மரியாதை

நகை நீ கேளாய் தோழி! அல்கல் வய நாய் எறிந்து, வன்பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால்முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து அரும்புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடைசெலல் முன்பின் தன் படைசெலச் செல்லாது ‘அருவழி விலக்கும் எம் … Continue reading

Posted in அகநானூறு, அகம், கபிலர், குறிஞ்சி, நாடகம் | 15 Comments

காதல்மலி நெஞ்சம்

செல விரைவு உற்ற அரவம் போற்றி மலர் ஏர் உண் கண் பனி வர, ஆய் இழை யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், வேண்டாமையின் மென்மெல வந்து, வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, வெறிகமழ் துறு முடி தயங்க, நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, ஆகம் அடைதந்தோளே, அது … Continue reading

Posted in அகம், ஆண்மொழி, காதல், நற்றிணை, பாலை | 24 Comments

கதவைத் திறந்தால் காதல் வரும்

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவுக் களிறுபோல் வந்து இரவுக் கதவும் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனெம் பெரும! ஓரி முருங்கப் பீலி சாய நல் மயில் வலைப் பட்டாங்கு யாம் உயங்குதொறும் முயங்கும் அறன் இல் யாயே நூல்: குறுந்தொகை (#244) பாடியவர்: கண்ணனார் சூழல்: குறிஞ்சித் திணை, காதலன் தன் காதலியைச் சந்திக்க … Continue reading

Posted in அகம், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, பெண்மொழி | 17 Comments

கொடியர் அல்லர்

’மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் பசைஇப் பசந்தன்று, நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே நூல்: குறுந்தொகை (#87) பாடியவர்: கபிலர் சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது ‘கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் … Continue reading

Posted in அகம், கபிலர், குறிஞ்சி, குறுந்தொகை, நாடகம், பெண்மொழி | 24 Comments

ஓவியம் தவிர்

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான் தேவியை யான் அழைத்திட, ‘ஆண் சித்திரமேல் நான் பாரேன், பாவையர்தம் உருவம் எனில் பார்க்க மனம் பொறேன்’ என்றாள், காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால் நூல்: நீதி நூல் உரை பாடியவர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை முன்கதை மதுரையில் திருமலை நாயக்கர் ஓர் … Continue reading

Posted in அகம், ஊடல், காதல், தனிப்பாடல், நாடகம் | 18 Comments

மனைகெழு பெண்டு ஆவேன்

’உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும் யாய் அறிந்து உணர்க’ என்னார், தீ வாய் அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் ’இன்னள் இனையள், நின் மகள்’ எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் ‘நாணுவள் இவள்’ என, நனி கரந்து உறையும் யான் இவ் வறுமனை ஒழிய, தானே ‘அன்னை … Continue reading

Posted in அகநானூறு, அகம், கபிலர், காதல், நண்பர் விருப்பம், பாலை, பெண்மொழி | 23 Comments