துணை நீ

விழிக்குத் துணை, திரு மென் மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை, முருகா எனும் நாமங்கள், முன்பு செய்த

பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும், பயந்த தனி

வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

நூல்: கந்தர் அலங்காரம் (#70)

பாடியவர்: அருணகிரிநாதர்

முருகா,

நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் உன்னையே காணவேண்டும். என் விழிக்கு ஏற்ற துணை, உன்னுடைய மென்மையான திரு மலர்ப் பாதங்கள்தாம்.

அடர்த்தி குறையாத என் மொழிக்கு ஏற்ற துணை, ‘முருகா’ என்று தொடங்கி உன்னைப் போற்றும் பல திருநாமங்கள்தாம்.

இதற்குமுன் நான் செய்த பழி பாவங்களுக்குத் துணை (அதாவது, பரிகாரம்), உன்னுடைய பன்னிரண்டு தோள்களில் பாமாலை சூட்டுவதுதான்.

நான் எங்கு சென்றாலும் சரி, வழித்துணையாக வருபவை, நீயும், உன் வேலும், மயிலும்தான்!

358/365

Advertisements
This entry was posted in அருணகிரிநாதர், கந்தர் அலங்காரம், பக்தி, முருகன். Bookmark the permalink.

29 Responses to துணை நீ

 1. anonymous says:

  //வழிக்குத் துணை, வடிவேலும் செங்கோடன் மயூரமுமே//

  yeah yeah, in London Airport – vazhikku thuNai – avan thaan:)
  ennamo therila, when i started reading this on mobile… few drops!

  • anonymous says:

   this is my heart-felt song;
   thanks for posting this during appropriate time… when i am on transit… vazhikku thuNai

 2. anonymous says:

  pardon me for english,
  chokkare, can i ask a small question?

  //முருகா எனும் நாமங்கள்//
  * muruga = singular naa?
  * why naamangaL = plural?
  any takers?:)

  tata…boarding call; see u in 8 hrs:)

  • வழிக்குத் துணையாக
   // முருகா எனும் நாமங்கள் //

   ஒருமை பன்மை மயக்கம்?
   ‘முருக நாமங்கள்’ என்பதன் விகாரம்?

  • ஆனந்தன் says:

   பல நாமங்கள் இருந்தாலும் முருகனை அழைக்கும் நாமங்களே மொழிக்குத் துணை.

  • anonymous says:

   ஆழ்வாரும் இப்படியே பாடுவாரு! ஒருமை-பன்மை தெரியாம:))

   “நாரணம் எனும் நாமங்கள்” நன்கு உணர்ந்து
   காரணம் தாமுடையார் தாம்!
   பழிபாவம் அகற்றிப் பலகாலும் நின்னை,
   வழிவாழ்வார் வாழ்வராம் வாழ்வு!!

 3. வடிவேலும் மயிலும் துணை
  வடிவேலும் மயிலும் துணை – சொல்
  வளமார் செந்தமிழால் சந்ததமும் கந்தனைப் பாட
  வடிவேலும் மயிலும் துணை

  திரைப்படம் – அம்பிகாபதி

  • anonymous says:

   மிக்க நன்றி கந்தசாமி ஐயா…
   இதைப் பார்த்துக்கிட்டே உறங்கச் செல்கிறேன்…
   சிந்தனை செய் மனமே….

 4. வடிவேலும் மயிலும் துணை பாடலைக் கேட்க –

 5. அருணகிரிநாதர், பாடல் தொடங்கும் பொழுதே விழிக்குத் துணை என்கிறார். விழிகள் தான் புலன்களின் வாயில் காப்போன். அலைபாயும் கண்கள் தான் வேண்டாதவற்றைப் பார்த்து புலன்களை காட்டாற்று வெள்ளம் போல் கட்டுப்பாடு இல்லாமல் போகச் செய்கிறது. அந்த வழிக்குத் துணை வேலவனின் மலர்ப் பாதங்கள் என்னும் போது காணும் இடமெங்கும் அவன் பாதங்களே காண்கில் மனம் இறை உணர்வோடு வேறு தவறான எண்ணத்தில் செல்லாது.

  தமிழ் கடவுளான முருகன் மொழிக்கும் காவலன் ஆகிறான். தமிழ் மொழியின் தோற்றம் ஏனைய மொழிகளின் பிறப்புக்கு முன்னால் என்று துணிந்து சொல்லலாம். அப்படிப்பட்ட மொழியின் வளமையை, தொன்மையை, அழகை, இலக்கண, இலக்கியத்தை முருகனின் பல்வேறு திருநாமங்களைச் சொல்வது மூலமே நாம் அறிந்து கொள்ள முடியும். அவன் திருநாமங்களே தமிழை இன்றளவும் வளர்த்துக் காக்கின்றது.

  அருணகிரிநாதர் பெரும் புலவர்! பக்திமான்! அவர் முருகனுக்குப் பாமாலைச் சூட்டி முன் வினைப் கர்மங்களைத் தொலைத்து விடுகிறார். எம்மைப் போன்றோர், அவர் பாடிய பாமாலைகளைச் சொல்லிச் சொல்லியாவது பாவங்களைப் போக்கிக் கொள்ளவேண்டும்.

  வழித்துணையாக வருவது வேலும் மயிலும் தான்! எத்தனை உண்மை அந்தக் கூற்றில்! நம் இம்மை மறுமை பயங்களைப் போக்கும் சக்தி மிகுந்த ஆயுதங்கள் வேலும் மயிலும் தான். நாம் கூப்பிட்ட உடனே மயில் மேல் ஏறி ஒரு நொடியில் வந்து நிற்பான் குமரன். நம் பகைவர்களையும் நொடியில் வீழ்த்துவான் தன் அழகிய வேலால்.

  வழித் துணை என்பது நம் வாழ்க்கை என்னும் பயணத்தின் வழித் துணையும் தான். நம் வாழ்வின் சங்கடங்களை எதிர் நோக்கும் பொழுது கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அழைத்தவுடன் நம் விழியில் உருண்டோடும் கண்ணீரைத் துடைக்க மயில் மேல் ஏறி ஓடோடி வருகிறான் எம் வேலவன். மனத் துன்பங்களையும், மனதில் தோன்றும் தீய எண்ணங்களையும் இல்லாமல் போகச் செய்யும் சக்தி வேலுக்கு உண்டு. சக்தியளித்த வேலல்லவா!

  எப்பொழுதுமே தெரியாத காரணிகள் தான் மனதில் பயத்தை உண்டு பண்ணும். ஆனால் நம் பக்கம் முருகன் இருந்தால் எந்த பயமும் நம்மை அண்டாது.

  amas32

  • anonymous says:

   உங்களின் இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிச்சேன்-ம்மா

   //வழித் துணை என்பது நம் வாழ்க்கை என்னும் பயணத்தின் வழித் துணையும் தான்.//

   //நம் வாழ்வின் சங்கடங்களை எதிர் நோக்கும் பொழுது கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று அழைத்தவுடன்…
   நம் விழியில் உருண்டோடும் கண்ணீரை……..//

 6. Sathya says:

  சுகிசிவம் தன் எல்லா சொற்பொழிவின் துவக்கத்திலும் இந்த பாடலை பாடுவார். அதைக் கேட்டு மனப்பாடம் ஆனதுதான். முருகா!
  @ChPaiyan

  • Naga Rajan says:

   உண்மைதான். இப்படியொரு நல்ல பாடல் உள்ளதை அவர் சொற்பொழிவில் தான் நான் உணர முடிந்தது.

 7. anonymous says:

  New York வந்தாச்ச்ச்ச்:)
  அவனும் தான்!:) Back pack murugan!

  வழியெல்லாம் இந்தப் பாடல் ரொம்பவே படுத்தியெடுத்து விட்டது! பழைய நினைவுகளின் அலையோசை…
  = தனி வழிக்குத் துணை யாரு?
  = எங்கள் இனியது கேட்கின் வலைப்பூவில், இந்தப் பாட்டுக்கு, இராகவன் முன்பு இட்ட விளக்கம்
  http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_07.html

  • இராகவன் அவர்களின் விளக்கத்திலிருந்து –

   ==
   “மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்” என்றார் அருணகிரி. நீ என்றால் ஒருமை. நீங்கள் என்றால் மரியாதை மிகுந்த பன்மை. முருகா எனும் நாமம் என்று சொல்லாமல் நாமங்கள் என்று சொல்லி மதிப்பைக் காட்டியுள்ளார் அருணகிரி.
   ==

   அதை எண்ணாம்ல் ஒருமை பன்மை மயக்கம் என்று நினைத்தேனே? பன்மை மரியாதை குறிப்பது என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை?

   ஏன் எனக்கு மயக்கம்?
   ஏன் எனக்கு நடுக்கம்?
   ஏன் எனக்கு என்ன ஆச்சு?

   நான் அவன் இல்லை ;). அதனால்தான். மன்னிக்கவும். நான் அவர் இல்லை. நல்ல விளக்கம் தர நான் இராகவன் இல்லை, நான் அனானியும் இல்லை 🙂

   • பிழையின்றிக் கூறவேண்டுமெனில் —

    நான் அவன் அல்லன். நான் இராகவன் அல்லன். நான் அனானி அல்லன்.

 8. anonymous says:

  மாடு = மேய்ந்தன
  மாடுகள் = மேய்ந்தது
  ன்னு யாராச்சும் சொல்லுவோமா?

  கே: #365paa நடத்துபவர் பேர் என்ன?
  ப: #365paa நடத்துவது சொக்கன் எனும் பேர்கள்
  – இப்படிச் சொல்லுவோமா?

  கே: உனக்கு வாழ்க்கைத் துணை யாரு?
  ப: எனக்குத் துணை, சங்கரி எனும் “பேர்கள்”
  ன்னு சொன்னா, பாத்திரம் உருளும்-ல்ல? பூரிக்கட்டை பறக்கும்-ல்ல?

  அருணகிரிக்கு இது கூடவா தெரியாது?
  எனக்குத் துணை “முருகா எனும் நாமங்கள்”-ன்னு சொல்றாரே?:)
  Singular-Plural; ஒருமை-பன்மை மயக்கமா அருணகிரிக்கு?
  முருகா எனும் பல நாமங்கள்-ன்னு பாடி இருக்கலாம்! படி எடுக்கும் போது தப்பா எடுத்துட்டாங்களா?:))

  • anonymous says:

   பசேல்-ன்னு கரும் பச்சையாப், பலாப்பழம் முழுசா வாங்குறோம்!
   என்ன சொல்வோம்? = பலாப் பழம்

   கையில எண்ணெய் தடவிக்கிட்டு, அதை அரிஞ்சி, ஒவ்வொன்னா அடுக்குறோம்!
   என்ன சொல்வோம்? = பலாப் பழங்கள்!

   நியாயமா, பலாச் சுளைகள் ன்னு சொல்லணும்! ஆனா உள்ளே இருப்பதையும் பலாப்பழம் ன்னே சொல்லிப் பழகிவிட்டது!
   ஆக…
   * வெளியிலும் = பலாப் பழம்
   * உள்ளேயும் = பலாப் பழங்கள்

   அது போலத் தான் = “முருகா”
   முருகா என்னும் ஒத்தைப் பெரிய சொல்லுக்குள்ள, பல சொற்கள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு!
   அதான், முருகா = எனும் நாமங்-கள்!

  • anonymous says:

   த-மி-ழ்
   த = வல்லினம்
   மி = மெல்லினம்
   ழ் = இடையினம்
   இப்படி எழுத்தினம் மூனுமே பேரிலேயே அமைந்து இருக்கும் மொழி = தமிழ்!

   மு-ரு-கு
   மு = மெல்லினம்
   ரு = இடையினம்
   கு = வல்லினம்
   இப்படி, தமிழ் எழுத்தினம் மூனுமே பேரிலேயே அமைந்து இருப்பவன் = முருகன்!

   முருகா என்னும் நாமம்
   அதற்குள் இப்படி மூன்று நாமங்கள்
   அதனால் முருகா எனும் “நாமங்கள்!”! பன்மை!

  • anonymous says:

   அரும் பெறல் மரபின் “பெரும் பெயர்” முருக!

   முருக என்பது “வெறும் பெயர்” அல்ல! “பெரும் பெயர்”!
   உள்ளுக்குள் பல பெயர்கள் இருப்பதனால்,
   பல இன எழுத்துக்கள் இருப்பதனால்,
   பல்லூழிக் காலத் தமிழ் மரபு இருப்பதனால்.. = பெரும் பெயர்
   —————-

   வடமொழியில் மகா வாக்கியம் என்ற ஒன்று வரும், வேதங்களில்! (யஜூர் வேத, தைத்ரீய உபநிடதம்)

   சத்யம்-ஞானம்-அனந்தம் = பிரம்மம்!
   ஒரே வாக்கியத்தில், உள்ளே பல வாக்கியங்கள்/ தத்துவங்கள்! அதுக்கு மகா வாக்கியம் ன்னு பேரு!

   அதை ஒப்பிட்டுப் பாருங்க
   மகா வாக்யம் = பெரும் பெயர்!

   இப்போ தெரிகிறது அல்லவா, எப்படி அங்கு வேதமோ, அதே போல் இங்கு தமிழ் மரபுக்கு = பெரும் பெயர் முருகன்!
   அரும் பெறல் மரபின் “பெரும் பெயர்” முருக!

  • anonymous says:

   இனி, வாரியார் சொல்வதைப் பகிர்ந்து கொள்கிறேன்;
   இது தமிழ் அல்ல! சற்றே வடமொழி கலந்த கருத்து!:)

   மு = முகுந்தன்
   ரு = ருத்திரன்
   க = கமலன் (பிரம்மன்)

   இப்படி மும்மூர்த்திகளும், “முருக” என்ற நாமத்தில் அடக்கம்!
   அதனால் தான் “முருகா எனும் நாமங்-கள்” என்ற பன்மை!

   அயன் எனவாகி, அரி எனவாகி, அரன் எனவாகி, அவர் மேலாய்
   என்று அருணகிரியும் இதை உறுதி செய்வார்!
   அகரமும் ஆகி, அதிபனும் ஆகி, அதிகமும் ஆகி… அகமாகி என்னும் கதிர்காமத் திருப்புகழில்….

   இப்படி, “முருகா” என்ற ஒத்தைப் பெயரில், பல பெயர்களும் உள்ளே விரிவதால்… முருகா என்னும் நாமங்-கள்!

 9. anonymous says:

  இன்னும் பாட்டுக்கே நான் வரலீயா? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, ஒடைஞ்சது ஒக்கனேக்கல்:))
  ————————-

  //விழிக்குத் துணை = திரு மென் மலர்ப் பாதங்கள்//

  கண் போன போக்கிலே கால் போகலாமா?ன்னு கேட்பது வழக்கம்!
  ஆனா, கால் போன போக்கிலே கண் போகலாம்!

  நம் முன்னே, நமக்கு வழிகாட்டிக் கொண்டே, முருகன் போறான்; அவன் கால் போன போக்கிலே, நம் கண் போகலாம்!
  அப்படி அவன் வழியில் போனா = இலக்கை அடைவோம்!
  அதான் விழிக்குத் துணை = திரு மென் மலர்ப் பாதங்கள்!
  ————————

  //மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை = முருகா எனும் நாமங்கள்//

  அது என்ன மெய்ம்மை குன்றா மொழி? அப்போ பொய்ம்மை குன்றும் மொழின்னு இருக்கா என்ன? இருக்கு!

  • anonymous says:

   மொத்தம் மூனு “மை”கள், ஐயன் வள்ளுவன் சொல்லுறாரு!
   * வாய்மை
   * மெய்மை
   * உண்மை

   மூனும் வேற வேறா?
   ———————

   * வாய்மை
   வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும்
   தீமை இலாத சொலல்

   * மெய்மை
   எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் – அப்பொருள்
   “மெய்”ப் பொருள் காண்பது அறிவு

   * உண்மை
   நுண்ணிய நூல்பல கற்பினும் – மற்றும்தன்
   உண்மை அறிவே மிகும்!
   ———————

   என்ன வேறுபாடு?
   * வாய்மை = வாயால் சொல்வது
   * மெய்மை = மெய்/ உடம்பால் நடந்து காட்டுவது
   * உண்மை = உள்ளத்தால் உண்மையாக இருப்பது
   முதல் இரண்டும் = புறக் கற்பு; பின்னது = அகக் கற்பு!

   பொய்ம்மையும்= ’வாய்’மை இடத்த ஆகலாம்,சில சமயங்களில்! வாய்-மை; “வாய்” அளவில் மட்டும் தான்!
   பொய்ம்மையும் = “உண்மை” இடத்த ன்னு சொல்லல பாருங்க! உள்ளத்தில் பொய்ம்மை கிடையாது…..
   ———————

   எவ்ளோ தனிப்பட்ட துன்பம், மரண அவதி, உடல் சீர்கேடு…
   அதைப் பார்த்த பின்பும் அவமானம்… பிறன் பொருள் மறைத்து துயருறச் செய்வது…
   பழைய அன்பை மறந்து, எத்தித் தள்ளுவது….
   ஆனால், எது வந்தாலும் = உள்ளத்தால் உண்மையாக இருப்பது = உண்மை!

   வெளியே பொய் போலத் தோன்றலாம், வாய்-மெய் இரண்டினால் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தலாம்….
   ஆனால் உள்-மை = உள்ளத்துக்கு மாசில்லாமல் அவனே என்று இருப்பது = முருகா என்று இருப்பது = உண்மை!

   அதான் தன் “நெஞ்சு” அறிவது பொய்யற்க!-ன்னு சொன்னாரு
   வாய்-மை; மெய்-மை; உள்-மை!

  • anonymous says:

   //மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை = முருகா எனும் நாமங்கள்//

   “உண்மை” குன்றா மொழி-ன்னு சொல்லல பாருங்க!
   “மெய்”ம்மை குன்றா ன்னு தான் சொல்லுறாரு!

   ஏன்னா உள்+மை = உள்ளத்துல முருகன் இருக்கான்! = அகக் கற்பு! அதுக்குப் பேரு தேவையில்ல!
   ஆனா புறக் கற்பு = வாய்-மெய் ம்மை!
   அது சில சூழலால் குன்றிப் போகலாம்! ஆனா அதுவும் குன்றாம இருக்கறத்துக்கு = முருகா என்னும் நாமங்கள் உதவி செய்யும்!

   உள்ளத்துக்கு = பேரு தேவையில்லை! ரவி, ராகவன்-ன்னு உடம்புக்குத் தான் பேரு!
   உள்ளத்துக்கு = உணர்ச்சியே அடையாளம்!
   மெய்-க்குத் தான் = பேர் அடையாளம்!

   முருகா முருகா ன்னு பேரைச் சொல்லும் போது, அழும் போது…
   ஐயோ, முருகா-ன்னு சொல்லுறானே, நாம இப்பிடியெல்லாம் செய்யலாமா? ன்னு வாயும் மெய்யும் அஞ்சும்!

   அதான் மெய்-ம்மை
   “மெய்”ம்மை குன்றா மொழிக்குத் துணை = முருகா எனும் நாமங்கள்

 10. anonymous says:

  //முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோளும்//

  குழந்தையா இருக்கும் போது, பயம் வந்தா என்ன பண்ணுவோம்?
  அம்மா தோளை இறுக்கக் கட்டிக்குவோம்!
  அம்மாவுக்கு எத்தனை தோளு = ரெண்டே ரெண்டு தான்! அதுவே ரொம்ப பாதுகாப்பா உணர்கிறோம்!

  ஆனா, நாம செய்யும் பழிகள் தான் எத்தனை எத்தனை?
  பயம் வந்தா, எந்தத் தோளைக் கட்டிக் கொள்வது? = கந்தத் தோளைத் தான்!
  ரெண்டு தோள் இல்ல! பன்னி-ரெண்டு தோள்!
  அத்தனை பாதுகாப்பு, அவனிடத்தில்! இறுக்கக் கட்டிக்கறேன் என் முருகா!

 11. anonymous says:

  //பயந்த தனி வழிக்குத் துணை = வடிவேலும் செங்கோடன் மயூரமுமே//

  முருகன் துணை -ன்னு சொல்லலாமே?
  எதுக்கு இங்க மட்டும், “வேலும் மயிலும் துணை”-ன்னு சொல்லுறாரு??

  மத்த வரியில் எல்லாம் பாருங்க!
  பாதங்கள், முருக நாமங்கள், பன்னிரு தோள் -ன்னு எல்லாம் முருகனாவே இருக்கு!
  ஆனா இங்க மட்டும் மயிலு; ஏன்?

  அசுரனாய் எதிர்த்தவனையும் அழிக்கலை! ஒரேயடியா போட்டு மிதிக்கலை! பக்கத்திலேயே என்றும் மயிலாய் வைத்துக் கொண்டான்!
  அப்படி, அசுரனையே அழிக்காதவன், நம்மளையா அழித்து விடுவான்? உணர்ந்தாப் போதும், பக்கத்துலயே வச்சிப்பான்
  = இந்த நம்பிக்கையூட்டினா… பயந்த தனி வழிக்கு அது கை குடுக்கும்!
  = அதான், பயத்துக்கு மட்டும், “வேலும் மயிலும்” காட்சியாகிறது!

  பயந்த தனி வழிக்குத் துணை = வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!

 12. anonymous says:

  இந்தப் பாட்டு, இன்னிக்கி….. விமானத்தில் எத்தனை முறை மனசுல ஓடியிருக்கும் ன்னு சொல்ல முடியாது!
  என் மனத்துக்கு மிகவும் நெருக்கமான பாடல்!

  முன்பு ரவீஈஈஈஈஈஈ ன்னு மொழி
  இன்று பயந்த தனீஈஈஈஈஈஈ வழி……
  உள்ளத்தின் வலிகளுக்கிடையே, இன்னும் உயிரோட இருக்குறேன்-ன்னா
  = முருகா எனும் நாமங்கள் ங்கிற இந்தப் பாட்டு தான் காரணம்!

  பயந்த தனி வழிக்குத் துணை = முருகா எனும் நாமங்கள்!
  என் உயிரான ஐயா,,,உன்னையே நம்பி வந்துவிட்ட முருகா எனும் நாமங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s