எத்தனை யானைகள்?

புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று,

இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான

கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில்

போவது வாசல் பத்தில் புக்கு

நூல்: கணக்கதிகாரம்

பாடியவர்: காரிநாயனார்

ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன.

அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின.

சாப்பிட்டு முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்றன.

இந்த ஐந்து பாதைகளும், ஏழு குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன.

அடுத்து, ஒன்பது சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன.

நிறைவாக, அவை பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.

துக்கடா

 • பாட்டைப் படிச்சாச்சா, இப்போ புதிருக்கு விடை சொல்லுங்க, அங்கே இருந்த யானைகள் மொத்தம் எத்தனை? :>
 • யானைகள் 3 வயல்களில் சரிசமமாகப் பிரிந்து குளித்திருக்கின்றன, அதேபோல் 5 பாதைகள், 7 குளங்கள், 9 சோலைகள், 10 வாசல்களில் சரிசமமாகப் பிரிந்திருக்கின்றன.
 • ஆக, யானைகளின் எண்ணிக்கை 3, 5, 7, 9, 10 ஆகியவற்றால் மீதமின்றி வகுபடக்கூடிய ஓர் எண்ணாக இருக்கவேண்டும். இதில் 9 என்பது 3ல் வகுபடும், 10 என்பது 5ல் வகுபடும், ஆகவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு மீதமிருக்கும் எண்களைப் பெருக்கினால் போதும், 7 * 9 * 10 = 630
 • 630 யானைகள் ==> மூன்று வயல்கள் * 210 ==> 5 பாதைகள் * 126 ==> 7 குளங்கள் * 90 ==> 9 சோலைகள் * 70 ==> 10 வாசல்கள் * 63
 • உண்மையில், இதுமட்டுமே சரியான விடை அல்ல, 630ன் மடங்குகள் (1260, 1890, 2520…) எல்லாமே சரியான விடைகள்தாம் 🙂
 • பள்ளிக்கூடத்தில் இந்தக் கணக்குப் படித்தோமே, என்ன பெயர்? எனக்கு மறந்துபோச், உங்களுக்கு நினைவிருக்குமே :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • புனல்மூன்றில் மேய்ந்து வழிஐந்தில் சென்று,
 • இனமான ஏழ்குளநீர் உண்டு, கனமான
 • காவொன்ப தில்சென்று காடவர்கோன் பட்டணத்தில்
 • போவதுவா சல்பத்தில் புக்கு

350/365

Advertisements
This entry was posted in கணக்கதிகாரம், புதிர், வெண்பா. Bookmark the permalink.

11 Responses to எத்தனை யானைகள்?

 1. அருமை…
  அந்த காலத்து பாடல்களிலேயே கணிதம் இருப்பது பெருமை கொள்ள வைக்கிறது!!

 2. Sudhakar says:

  அதன் பெயர். மீ. சி. ம. – மீச்சிறு பொது மடங்கு . ம்ம்ம் Nostalgia

  • anonymous says:

   Perfecto!
   மீச்சிறு பொது மடங்கு = Lowest Common Multiple (LCM)
   மீப்பெரு பொதுக் காரணி = Greatest Common Divisor (GCD) / HCF

  • ஆனந்தன் says:

   இலங்கையில் இதனை பொ.ம.சி (பொது மடங்குகளில் சிறியது) என்று படித்தோம் (ம.பொ.சி அல்ல!)
   மீப்பெரு பொதுக் காரணியைப் பொ.சி.பெ (பொதுச் சினைகளில் பெரியது) என்று கூறுவர்.

   காரிநாயனாரின் காலம் எது?

 3. anonymous says:

  சொக்கரே
  இந்தப் பாடலை (கணக்கதிகாரம்) இயற்றிய காரிநாயனாரும், 63 நாயன்மாருள் ஒருவரான காரி நாயனாரும், ஒரே ஆட்களா?

 4. balaraman says:

  அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியவாதிகள் தொடாத இடமே இல்லை போலவே?!! அருமையான பாடல்.

  • anonymous says:

   தமிழ்க் கணிதம் மிக்க தொன்மை மிக்கது!
   கணியன் பூங்குன்றன், கணி மேதாவியார் போன்ற பெரும் கணிதவியலார் சங்க காலத்தில் உண்டு!

   சங்கத் தமிழ்க் கவிதைகளில், அவுங்க கணிதம் சம்பந்தமா ஆங்காங்கே தூவுற சேதி, வியப்பா இருக்கும்!
   Permuatation, Combination formula கூடச் சொல்லுவாங்க:)
   அது போன்ற பாடல்களைத் தேடி இடணும்!

  • anonymous says:

   சில பின்னாள் கவிதை நூல்கள், வித்தியாசமான கணக்கெல்லாம் சொல்லும்…
   * ஒரு பூசணிக் காயில் உள்ள கோடுகளை வைத்து, உள்ளே எத்தனை விதைகள்?
   * ஒரு பலாப் பழத்தில் உள்ளே எத்தனை சுளைகள்?
   ….இந்தக் கணக்கெல்லாம் சொல்லும்:))
   ————–

   கீற்று எண்ணி முத்தித்துத், கீழ் ஆறினால் மாறி,
   வேற்றை அஞ்சு தன்னில், மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
   பாதி தள்ளி மூன்றில் பகிர விதையாகும்
   பூசணிக்காய் தோறும் புகல்
   :))
   ————–

   1. No of கோடு on பூசணிக்காய் = x
   2. Multiply by 3, 6, 5 = 90x (முத்தித்துத் கீழ் ஆறினால் மாறி
   வேற்றை அஞ்சு)
   3. Subtract half = 45x (பாதி தள்ளி)
   4. Multiply three = 135x (மூன்றில் பகிர = விதையாகும்)

   So, If there are 10 kOdus on poosiNikaai, No of seeds = 135*10= 1350
   Count & See 🙂

   • anonymous says:

    அதே போல் பலாப்பழம்:)

    பலாவின் சுளையறிய வேண்டுதியேல் ஆல்கு
    சிறுமுள்ளுக் காம்பருகே எண்ணி – வருவதை
    ஆறிற் பெருக்கியே ஐந்தனுக்கு ஈந்திடவே
    வேறெண்ண வேண்டாஞ் சுளை

    1 பலாப்பழக் காம்புக்கு அருகில் உள்ள முட்களை எண்ணி
    2 ஆறால் பெருக்கி = 6x
    3 ஐந்தால் வகுத்தால் = 6x/5
    4. பலாப்பழம்:)
    = 30 முள்ளு-ன்னா = 6*30/5 = 36 பலாச்சுளை:)
    எங்கே ஓடுறீங்க? முழுப் பெலாப்பழம் வாங்கவா?:))

 5. எல்லாம் சமத்து யானைகள் போல 🙂 சரிசமமான எண்ணிக்கையில் பிரிந்து குழுக்களாகச் சென்று ஒரொரு வேலையையும் செய்கின்றன! பார்க்கக் கண் கொள்ளா காட்சியாக இருந்திருக்கும்!

  இந்த மாதிரி பாடல்கள் இப்பொழுது குழந்தைகளுக்கு ஏற்றார் போல் இக்கால சூழலுக்கு எழுதப் பட்டால் நன்றாக இருக்கும். மூளைக்கு வேலை கொடுத்தது போலவும் இருக்கும், தமிழும் கற்றுக் கொடுத் தந்தது போல் இருக்கும் 🙂

  amas32

 6. jaghamani says:

  கணக்கதிகாரம் – கணக்கான ரச்னையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s