அர்ச்சுனரே, அர்ச்சுனரே!

குற்றம் இல் கிருட்டிணன், பற்

….குனன், தனஞ்சயன், காண்டீவன்,

வெற்றி சேர் சவ்வியசாசி

….வீபற்சு, விசயன், பார்த்தன்,

சொற்ற கேசவர்க்குத் தோழன்,

….சுவேத வாகனன், கிரீடி,

அற்றமில் அர்ச்சுனற்கே

….அமைந்த பேர் பன்னொன்றாமே!

நூல்: சூடாமணி நிகண்டு

பாடியவர்: வீரமண்டல புருடர்

குறை இல்லாத அர்ச்சுனனுக்கு (அந்தப் பெயரைத் தவிரப்) பதினொன்று சிறப்புப் பெயர்கள் உண்டு. அவை:

 1. கிருட்டிணன் (கிருஷ்ணன் : கரிய நிறம் கொண்டவன்)
 2. பற்குனன் (உத்திர நாளில் பிறந்தவன்)
 3. தனஞ்ச(செ)யன் (வெற்றியைச் சொத்தாகக் கொண்டவன், தனம் = செல்வம், ஜெயம் = வெற்றி)
 4. காண்டீவ(ப)ன் (அவன் வில்லின் பெயர் : காண்டீபம்)
 5. சவ்வியசாரி (இடது கையிலும் வில் எய்பவன்)
 6. வீபற்சு (வெற்றி பெறும் எண்ணம் நிறைந்தவன்)
 7. விசயன் (வெற்றியாளன்)
 8. பார்த்தன் (பிருதையின் மகன்)
 9. கேசவர்(கண்ணன்)க்குத் தோழன்
 10. சுவேதவாகனன் (வெள்ளைக் குதிரையைக் கொண்டவன்)
 11. கிரீடி (கிரீடம் அணிந்தவன்)

துக்கடா

 • இந்தப் பெயர்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள ‘சூடாமணி நிகண்டு’ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்நூலின் பதிப்பாசிரியர் : கோவை இளஞ்சேரனார்
 • ‘சூடாமணி நிகண்டு’ நூல் முழுவதையும் விளக்க உரையுடன் இணையத்தில் படிக்க : http://noolaham.net/project/48/4782/4782.pdf

343/365

Advertisements
This entry was posted in சூடாமணி நிகண்டு, பட்டியல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

5 Responses to அர்ச்சுனரே, அர்ச்சுனரே!

 1. சூடாமணி நிகண்டு is a dictionary/encyclopedia, but written in poetic form:)
  17th CE ன்னு நினைக்கிறேன்
  வீரமண்டல புருடரால் எழுதப்பட்டது
  —————-

  அருச்சுனனுக்கு கிருட்டிணன் என்ற பேரும் இருக்கா என்ன?
  I thought he was fair in color
  Only Kannan & Draupadi were dark and hence called கிருஷ்ணன் & கிருஷ்ணை

  • சவ்வியசாசி = இடங்கை வீரன்:)
   ————-

   பார்த்தன் = பிருதையின் மகன் (குந்தி)
   குந்திக்கு, பிருதை என்ற பேரும் உண்டு! அவள், குந்திபோஜனுக்கு வளர்ப்பு மகள் மட்டுமே!
   உண்மையான தந்தை = சூரசேனன் (யாதவ குல மன்னன்)
   இந்த சூரசேனனுக்குப் பிறந்தவர்களே குந்தியும், வசுதேவரும்! அதனால் குந்தி = கண்ணனின் அத்தை:)
   ————

   11.கிரீடி = Greedy?:)))
   Arjun is too bad:)

 2. சுப இராமனாதன் says:

  இந்தப் பெயரையெல்லாம் நம்பலாமா கூடாதா என்று சந்தேகமாக இருக்கிறது, பாடியவர் பெயரைப் பார்த்த பிறகு. 🙂

  • ha ha ha
   பேரைப் பாத்து எல்லாம் முடிவு கட்டீறக் கூடாது:)
   சரவண பவன் ன்னு பேரு வச்சிட்டு முருகா ன்னு சொல்லிக்கிட்டே காமாந்தகாரனாவும் இருப்பார்கள்:))

   வீரமண்டல புருடர் = சமணர்; புரு’ஷ’ர் ன்னு கிரந்தம் எழுத இலக்கியத்தில் அனுமதி இல்லை! அதான்:)

 3. குழந்தைகளாக இருக்கும் போது “அர்ச்சுனா அர்ச்சுனா” என்று இடி இடிக்கும் போது சொல்லச் சொல்லிக் கொடுத்தார்களே, இவ்வளவு பெயர்கள் அவனுக்கு இருக்கும் போது வேறு பெயர்களாலும் அவனை துணைக்கு அழைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது! 🙂

  வெற்றிக்கு விஜயன் என்பது அனைவரும் சொல்லும் ஒரு உதாரணம். இந்தப் பாடலில் வெற்றி வீரனாக தனஞ்செயன், வீபற்சு ஆகிய பெயர்கள் வந்துள்ளன.கண்ணனின் தோழன் ஆனதால் கேசவர், குந்தி புத்திரனாக பார்த்தன். வெள்ளைக் குதிரை உடையவனாக சுவேதவாகனன், கிரீடம் அணிந்தவனாக கிரீடி. வில்லை உடையவன் ஆதலால் காண்டீவன், அதுவும் இடது கையால் வில்லை விடும் திறன் உடையதால் சவ்வியசாரி என்று காரணப் பெயர்களையும் கொண்டுள்ளான்.

  கீதோபதேசம் பெற்றவன் என்பதால் ஏதாவது பெயர் உள்ளதா? மேலும் இறைவனின் விஸ்வரூபத்தையும் பார்தவனாயிற்றே! அதற்காகவும் இன்னுமொரு பெயர் இருக்கலாம்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s