எள்ளும் எண்ணெயும்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே,

எள் இன்று ஆகில் எண்ணெயும் இன்றே,

எள்ளினின்று எண்ணெய் எடுப்பதுபோல்,

இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம்

நூல்: பேரகத்தியத் திரட்டு

பாடியவர்: அகத்தியர்

(உரை தேவைப்படாத எளிய பாடல், ஆகவே முடிந்தவரை பாடல் வரிகளையே சற்று மாற்றி உரையாகத் தந்துள்ளேன்)

எள் இல்லாமல் எண்ணெய் கிடைக்காது, அதுபோல, இலக்கியம் இல்லாமல் இலக்கணம் இருக்கமுடியாது.

நாம் எள்ளைப் பிழிந்து எண்ணெய் எடுக்கிறோம், அதேபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் பிறக்கிறது.

துக்கடா

 • இலக்கியத்திலிருந்து இலக்கணமா? அல்லது, இலக்கண விதிகளை உணர்ந்து படைக்கப்படுவது இலக்கியமா? கொஞ்சம் குழப்பமான சங்கதிதான் 🙂
 • ’பேரகத்தியத் திரட்டு’ என்பது பழம்பெரும் முனிவராகிய அகத்தியர் இயற்றிய பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர் வாழ்ந்ததாக நம்பப்படும் காலகட்டத்தையும் இந்தப் பாடலின் மொழி நடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கு எங்கேயோ இடிக்கிறது!

342/365

Advertisements
This entry was posted in அகத்தியர், இலக்கணம், உவமை நயம். Bookmark the permalink.

17 Responses to எள்ளும் எண்ணெயும்

 1. ஆமாங்க .. படிச்சாலே புரியுதே. இது எதோ எண்ணெய் கடைக்காரர் எழுதுன மாதிரி தெரியுது 😉

 2. * கோழியில் இருந்து முட்டையா? முட்டையில் இருந்து கோழியா?
  * இலக்கணத்தில் இருந்து இலக்கியமா? இலக்கியத்தில் இருந்து இலக்கணமா?

  இது பல காலமாகப் பேசப்பட்டாலும்…
  விடையை, இலக்கணப் பேராசான், ஆதித் தமிழ்த் தந்தை = தொல்காப்பியரே சொல்லீடறாரு? என்ன-ன்னு?:)

  தொல்காப்பியர் = இலக்கண ஆசான்!
  எனவே தன் சார்பாகத் தான் பேசுவாரோ? “இலக்கணமே” ன்னு தான் சொல்லுவாரோ?:)

  • இலக்கு + இயம்
   இலக்கு + அணம்
   ———————

   அணம் = வழி/ இடம்

   * நாரணம் = நாரம் (நீர்) + அணம் (வழி)
   நீராக உள்ள இறைவன்… எதில் பிடிக்கிறோமோ, அந்த உருவத்தைக் கொள்ளும் நீர்… அதே போல் இறைவன்!
   அந்த இறைவனை அடையும் வழி = நாரணம்!

   நாரணம் = தூய தமிழ்ச் சொல்! இராம.கி ஐயாவின் பதிவையும் பார்க்கவும்!
   http://valavu.blogspot.com/2009/08/blog-post_28.html
   ———————

   இதே போல்…
   ஏரணம் (Logic) , தெக்கணம் (Deccan)

   ஏர் + அணம் = ஒழுங்கை அடையும் வழி (Logical flow)
   தெற்கு + அணம் = தெற்கில் உள்ள இடம்! (Deccan)

   அணம் -ன்னா இப்போ புரிஞ்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்!

  • * இலக்கை இயம்புவது = இலக்கு + இயம்
   * இலக்கை அடைய, வழி (அணம்) அமைப்பது = இலக்கு + அணம்
   ———————-

   எடுத்துக் காட்டு ஒன்னைப் பார்த்தா, புரிஞ்சீரும்
   நான் ஒரு இலக்கியம் எழுதணும்… என் இலக்கு + இயம் என்னா?

   1) புகழ்சால் பத்தினி உலகம் போற்றும்
   2) அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்
   3) ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

   இதான் இலக்கு!
   அதை இயம்பியாச்சு = இலக்கு + இயம்
   ———————-

   இந்த இலக்கை எப்படி அடைவது?
   இலக்கு + அணம் = இலக்குக்கு வழி காட்டும்!

   * என்ன மாதிரி காட்சி, நாடகம்?
   * ஆண்பால் – பெண்பால் கதைமாந்தர்கள்… கண்ணகி, பாண்டியன், கோவலன்..
   * உரை இடை இட்ட பாட்டுடைச் செய்யுளா?
   * எங்கெல்லாம் இசை, பண் வரணும்? – அளபெடை எங்கே?

   * ஆசிரியப்பா-வா? கலிப்பாவா? வஞ்சிப்பாவா?
   * சீற்றத்தை எப்படி வல்லின ஓசையில் காட்டுவது?
   * காதலை எப்படி மெல்லின ஓசையில் காட்டுவது?

   எதை எதையெல்லாம் இப்படிச் சேர்த்துக் கட்டினா, இலக்கை அடைய வழி கிடைக்கும்?
   = இதுவே, இலக்கு + அணம் = இலக்கணம்!
   ————

   இலக்கு + இயம்
   இலக்கு + அணம்
   = இப்போ புரியுதா?:)

 3. ஆனந்தன் says:

  //இலக்கியத்திலிருந்து இலக்கணமா? அல்லது, இலக்கணத்திலிருந்து இலக்கியமா?//
  “இலக்கணம் மாறுதோ..
  இலக்கியம் ஆனதோ?”
  என்றுதான் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்!! அதனால்…

 4. Balaji says:

  மிக நன்று!!!

 5. இந்தப் பாட்டு வரும் நூலைப் பத்தி ஒன்னுமே சொல்லாம, இலக்கணம் பற்றி மட்டுமே பேசிட்டுப் போயீறணும் ன்னு நினைச்சேன்!
  ஆனா, சொக்கரு ட்விட்டரில், கேள்வி கேட்டு, என்னைய இழுத்து வுட்டுட்டாரு!:)
  ————–

  இந்த நூல் = பேரகத்தியத் திரட்டு, ஒரு 1950s publication
  சதாநந்தா ன்னு ஒருத்தரு (Not நித்யானந்தா), சில பல பாடல்களைத் திரட்டி, இதெல்லாம் “அகத்தியம்” ன்னு பதிப்பிச்சாரு! என்னா பதிப்பகமோ, அறியேன்:)

  இதே போல, ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ன்னு ஒரு கீர்த்தனை இருக்கு; தமிழும் – சம்ஸ்கிருதமும் கலந்த கீர்த்தனை…
  இதை எழுதியவரும் அகத்தியர் ன்னு தான் சொல்லுறாங்க:)
  So, now connect the dots:))

  • அகத்தியம் என்னும் இலக்கண நூல், தொல்காப்பியத்துக்கு முந்தையது!
   அகத்தியம் = முதற் சங்க காலம்
   தொல்காப்பியம் = இடைச் சங்க காலம்

   முதற் சங்க நூல்களான முதுநாரை, முதுகுருகு, அகத்தியம், களரியாவிரை…எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!
   கிடைத்தவற்றுள் தொன்மையானது = தொல்காப்பியம்

   அதுவே சற்று கடின தொல் தமிழ் நடையில் தான் இருக்கும்!
   அப்படி இருக்க, மேலே கண்ட “அகத்தியம்” எப்படி இருக்கு-ன்னு பார்த்தீங்க-ல்ல?:)
   ஸ்ரீகுருபரன் சொன்னாப்புல, “எண்ணெய் கடைக்காரர் எழுதுன மாதிரி தெரியுது” :)))
   ———————–

   இப்படி இடைச்செருகல்கள், கலப்புக்கள்…, தமிழில் தான் மிகவும் அதிகம்:( பாவம் தமிழ்!:(
   தொல்காப்பியர் எப்படிய்யா ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி எழுதுவாரு?:))) பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணாமா?

   ஒன்னை எழுதுனா, பரவாயில்லை எழுதுங்க! உங்க நூலா எழுதுங்க!
   கம்பன்-வள்ளுவர்-ஒளவை அண்ணன்-தங்கை ன்னு கூட எழுதி வச்சிருக்காங்க:)
   ஆனா, அதை “நைசா” மூல நூலில் கலப்பது, மட்டமான அயோக்கியத்தனம்!

   சங்கப் பாடல்களுக்கு, கடவுள் வாழ்த்து-ன்னு, சிவபெருமான் மேல எழுதப்பட்ட பின்னாள் பாட்டுக்களைக் கோர்த்து விடுவது..
   குறுந்தொகைக்கு எதுக்குய்யா கடவுள் வாழ்த்து???
   இத்தனைக்கும் தொல்காப்பியத்தில் சிவபெருமானே வரமாட்டாரு!

   தேவையா இது?:((

  • தனி நூல்கள், நாம் ஆயிரம் எழுதிக் கொள்ளலாம்!
   ஆனால் மூல நூலைக் கைவைக்காமல், அப்படியே விட்டு விட வேண்டும்!

   * இன்று இன்றாக இருக்கட்டும்
   * தொன்மம் தொன்மமாக இருக்கட்டும்
   -என்ற புரிதல் பலருக்கு வாய்ப்பதில்லை;

   அதனால் வந்த வினை தான் தமிழுக்கு இது போன்ற இடைச்செருகல்கள்…
   இன்று தனக்கு ஒன்று பிடித்திருக்கிறது என்பதற்காக, அதை வலிந்து கொண்டு போய் தொன்மத்திலும் ஏற்றுவது:(
   —————-

   மற்றபடி ஒளவை-வள்ளுவர் அண்ணன் தங்கச்சி கதைகளைச் சும்மா சுவைக்காக வாசிக்கலாம்:) அதைத் திருக்குறளில் கலக்காத வரை…

 6. but…even though this is a latter add-on
  //இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே// is very true!

  1. முதலில் சில படைப்புக்கள் தோன்றும்!
  2. அதை வைத்து இலக்கணம் வகுப்பார்கள் – ஒரு பொதுமைக்காக (Standards)!
  3. இந்தப் பொதுமையை ஒட்டி, பலப்பல இலக்கியங்கள் பிறக்கும்!
  4. ஆனால் கால மாற்றத்தில், புதிதாகச் சில உத்திகள், அணிகள், யாப்பு பிறக்கலாம்
  5. இதை இலக்கணத்தில் சேர்ப்பார்கள்
  6. மீண்டும் பலப்பல இலக்கியங்கள்….
  = இதுவே சுழற்சி!

  ஆனால் அடிப்படைத் தமிழ் எழுத்துக்கள் – எழுத்திலக்கணம் மாறாது!
  = தொல்காப்பியம்!
  அதுவே, அனைத்து இலக்கியங்களுக்கும், இலக்கணங்களுக்கும் ஆதார அடிப்படை!

 7. அப்போ சாஹித்யம் முதலா ராகம் முதலா? இதுக்கும் அதுக்கும் சரியான ஒப்பீடு இல்லையோ?

  இலக்கியத்தைப் புரிந்து கொள்ளும் போது இலக்கணம் தானே புரியும் என்கிறாரா? இலக்கியம் எழுதவே முதலில் இலக்கண அறிவு தேவை இல்லையா? KRS கூறியிருக்கும் விளக்கம் படிக்கும் போது புரிந்தது, படித்து, பின் யோசிக்கும்போது திரும்பவும் சந்தேகம் வருகிறதே?

  Root word, conjugation, tense, இதெல்லாம் தெரிந்தால் தானே ஒழுங்காக எழுத முடியும்? எனக்கு சரியான இலக்கணம் தெரியாததால் எங்கு க்,ச், வைக்க வேண்டும் என்ற சாதாரண விஷயத்துக்கே தடுமாற்றமே உள்ளதே!

  amas32

  • //KRS கூறியிருக்கும் விளக்கம் படிக்கும் போது புரிந்தது, படித்து, பின் யோசிக்கும்போது திரும்பவும் சந்தேகம் வருகிறதே//

   நீங்களே பதில் சொல்லீட்டீங்களே-ம்மா:) – //சாஹித்யம் முதலா ராகம் முதலா?//

   ஓசை தான் முதலில்!
   ஓசையைக் குறிக்க அப்பறமா எழுத்து எழுந்தது!
   மனுசன், முதலில் சைகை/ ஓசை ன்னு பேசியதை அல்லவோ, எழுத்தாக்கினான்?

   எழுத்தாக்கிய பின், அதை இன்னும் அழகாப் பாடுவதற்கு = ராக இலக்கணம் எல்லாம்…
   ஆனால் அடிப்படை = ஓசையும்/எழுத்தும் தான்!
   ———

   அதே போல,
   1) முதலில் = சிறு அளவிலான எழுத்து/ வெளிப்பாடு = “இலக்கியம் போல”-ன்னு வச்சிக்குங்களேன்
   2) அதை அடிப்படையா வச்சி, இலக்கணம் Ver 1.0 = Root word, conjugation, tense etc…
   3) Group of people assemble & standardize and call this = “இலக்கணம்”

   இப்போ இந்த Standard வச்சிக்கிட்டு…
   4) மேலும் அழகான இலக்கியங்கள்
   5) இலக்கியங்களில் இன்னும் பல நயங்கள், அணிகள் ஏற்பட…தற்குறிப்பேற்ற அணி etc,….
   6) Again, assemble & standardize = இலக்கணம் Ver 1.1

   இதுவே இலக்கிய-இலக்கண சுழற்சி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s