உவமைகள் பதினான்கு

நாட்டும் கதலி, நடுக் கரும்பு, மா, வருக்கை,

காட்டுக் குயில், கிள்ளை, கற்கண்டு, வேட்ட அருந்தும்

சீனி, சருக்கரை, செந்தேன், அமுதம், பால், குழல், யாழ்

ஆன பதினான்கு மொழிக்காம்

நூல்: தனிப்பாடல்?

பாடியவர்: (எனக்குத்) தெரியவில்லை

இனிமையான பேச்சை உடைய ஒருவரை வர்ணிப்பதற்கு உவமையாக, பதினான்கு விஷயங்கள் உண்டு. அவை:

 1. வாழைப்பழம்
 2. நடுக் கரும்பு
 3. மாம்பழம்
 4. வருக்கைப் பலா
 5. குயில்
 6. கிளி
 7. கற்கண்டு
 8. சர்க்கரை
 9. வெல்லம்
 10. தேன்
 11. அமுதம்
 12. பால்
 13. புல்லாங்குழல்
 14. யாழ்

துக்கடா

 • சுவாரஸ்யமான இந்தப் பாடல் ஓர் உரை நூலின் நடுவே கிடைத்தது. இதனை எழுதியவர் யார், எந்த நூலில் இடம் பெற்றுள்ளது என்பதுபோன்ற தகவல்கள் காணோம், உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்
 • அதேபோல் சீனி, சருக்கரை என்ற வார்த்தைகளில் லேசாகக் குழப்பம். நான் தேடியவரை சீனி = Sugar, சருக்கரை = வெல்லம் என்ற பொருளில் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது
 • அப்புறம், ‘வருக்கைப் பலா’ என்பது என்ன?
 • இனிய சொல்லுக்கு வெறும் கரும்பு அல்ல, ‘நடுக் கரும்பு’தான் உவமையாம், அதுதானே சுவை அதிகமானது? :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • நாட்டுங் கதலி நடுக்கரும்பு மாவருக்கை
 • காட்டுங் குயில்கிள்ளை கற்கண்டு வேட்டருந்தும்
 • சீனி சருக்கரைசெந் தேனமுதம் பால்குழல்யாழ்
 • ஆனபதி னான்குமொழிக் காம்

336/365

This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், தனிப்பாடல், பட்டியல், வெண்பா. Bookmark the permalink.

9 Responses to உவமைகள் பதினான்கு

 1. பலாக்காயில் இரண்டு வகை உண்டு . கூழை , வருக்கை . எழுத்தாளர் ஜெயமோகன் இதைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதி இருக்கிறார்.

  http://www.jeyamohan.in/?p=516

  நன்றி ,

  மா.சட்டநாதன்

  • anonymous says:

   நன்றி சட்டநாதன்!
   தக்க தருணத்தில், தக்க சுட்டி!

   வருக்கையே சுவை அதிகம்!:)

   காய்மாண்ட தெங்கின் பழம்வீழக், கமுகின் நெற்றிப்
   பூமாண்ட தீந்தேன் தொடைகீறி, “வருக்கை” போழ்ந்து,
   தேமாங் கனி சிதறி, வாழைப் பழங்கள் சிந்தும்,
   ஏமாங் கதம் என்று இசையாற்று இசை போய துண்டே!!
   :))

 2. ஆனந்தன் says:

  இலங்கைத் தமிழர்கள் SUGAR ஐ “சீனி” என்றே சொல்வார்கள். JAGGARY (தமிழ்நாட்டில் – வெல்லம்) ஐ, சர்க்கரை என்று சொல்வார்கள். சீனி என்ற சொல் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

  நடுக்கரும்புதான் சுவை என்று தெரியாது. “அடிக்கரும்பென்றால் அடிக்கடி இனிக்கும்” என்றுதான் நினைத்திருந்தேன்!

 3. வேறு எதுவும் செய்ய முடியாவிட்டாலும் நம் தினசரி வாழ்வில் இனிய வார்த்தைகளைக் கையாளலாம்.

  இனிமையான பேச்சை உடைய ஒருவரை புகழ்வதற்கு எவ்வளவு அழகான உவமைகளை கொடுத்திருக்கிறார் இந்த கவிஞர்! முதலில் முக்கனிகளின் இனிமையான சுவையைப் போல இருப்பர் இனியவை கூறுகிறவர்கள் என்கிறார்.
  அடுத்து கரும்பு, கற்கண்டு, சர்க்கரை, வெல்லம், தேன், அமுதம், பால் ஆகிய நாம் எப்பொழுதும் விரும்பி சுவைக்கும் பொருட்களோடு ஒப்புவமை செய்கிறார். இப்படி செய்தால் தான் நம்மால் இனிமையாகப் பேசுபவரின் பெருமையை உணர முடியும். இவர் மேற்கூறிய அனைத்தும் நாம் தினமும் சுவைத்து மகிழும் உணவுப் பண்டங்கள் ஆயிற்றே!

  குயிலும் கிளியும் நாம் இன்றும் பார்த்தும்,கேட்டும் மகிழும் பறவை இனங்கள்.

  யாழும் புல்லாங்குழலும் கேட்பதற்கு இனிமையோ இனிமை! நிசப்தமான இனிய இரவு நேரத்தில் புல்லாங்குழல் இசை கேட்டு மயங்காத உள்ளமும் உண்டோ?

  ஒரு குணத்துக்கு எத்தனை உவமைகள். அதுவே அந்த குணத்தின் பெருமையை பறைசாற்றுகின்றது.

  amas32

 4. ஆனந்தன் says:

  இன்றைய பாடல் இன்னும் வராததால் நேற்றைய பாடல் பற்றி இன்னும் கொஞ்சம்…

  இந்தப் பாடல் குறிப்பிடும் சில உவமைகள் இனிய சொற்களுக்கும் சில உவமைகள் இனிய குரலுக்கும் பொருந்துகிறது. டெலிபோன் மணிபோல் சிரிப்பவளையும் டிஜிட்டலில் செதுக்கிய குரலையும் இன்னும் பலவற்றையும் இக்காலத்தில் சேர்க்கலாம்!

  நினைவுக்கு வரும் பாடல்கள்: “முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே?”
  “முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையும் தருக”
  “சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
  தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி”
  இன்னும் பல!

  • Anandan, //“சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
   தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி”// is a very lovely number and very apt to compliment the song given by Mr.Chokkan 🙂

   amas32

  • anonymous says:

   தினமும், இந்தக் கெட்-அப்பை maintain பண்ணுறீங்க, சொல்லிட்டேன்:)
   Nice Cine songs in this context! பாராட்டுக்கள்

   சிங்காரக் கண்ணே உன் “தேனூறும் சொல்லாலே” is very apt
   டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா = is my personal choice:))
   Can Chokkar add “RingTone” as Item #15? :))

 5. நாட்டுச்சக்கரை = வெல்லம் என்றொரு வழக்குண்டு.

  • Velayuthan says:

   பலாப்பழம்த்தைக் கூழை ,வருக்கை எனப்பிரிப்பர் இவற்றில் வருக்கை எனபது உயர் ரகப்பலாப்பழம.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s