சகலகலாவல்லியே

மண் கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவில் பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்

விண் கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்

கண் கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

நூல்: சகலகலாவல்லி மாலை (#10)

பாடியவர்: குமர குருபரர்

சூழல்: ‘துக்கடா’வில் காண்க

இந்தப் பூமிமேல் வெண்கொற்றக் குடை ஏந்திய மன்னர்கள் பலர் உண்டு. அவர்களெல்லாம்கூட, என்னுடைய பாடலைக் கேட்டவுடன் பணிந்து வணங்குவார்கள், அப்படி ஒரு கௌரவத்தை எனக்குத் தந்தவள் நீ!

எல்லாரையும் படைக்கும் பிரமனில் தொடங்கி வானுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு, ஆனாலும் உன்னைப்போல் கண் கண்ட ஒரு தெய்வம் இல்லை, சகலகலாவல்லியே, சரஸ்வதியே, உன்னை வணங்குகிறேன்!

துக்கடா

 • கல்விக் கடவுளான சரஸ்வதியைப் பற்றிக் குமர குருபரர் இயற்றிய பத்து பாடல்களின் தொகுப்புதான் ‘சகலகலாவல்லி மாலை’ எனும் இந்தச் சிறு நூல்
 • இந்த நூலை முழுமையாக வாசிக்க : http://www.tamilkalanjiyam.com/literatures/kumarakurubarar/sakalakalavalli%20maalai.html
 • இசை வடிவில் கேட்க : http://www.youtube.com/watch?v=oVaIDyhH34A (5:49முதல் இன்றைய #365paa )
 • குமர குருபரர் இந்தப் பாடலை எந்தச் சூழ்நிலையில் எழுதினார் என்பதுபற்றி ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது : காசியில் ஒரு மடம் கட்டுவதற்காக அப்போதைய டெல்லி அரசரின் மகனைச் சந்தித்து உதவி கேட்கச் சென்றாராம் குமர குருபரர், ஆனால் அவருக்குத் தமிழ் தெரியாது, இவருக்கு ஹிந்தி தெரியாது, அப்போது கலைமகளை நோக்கி இந்தப் பாடலைப் பாடிய குமர குருபரர் பல மொழிகளில் பேசும் திறமையைப் பெற்றார் என்று நம்பப்படுகிறது

335/365

This entry was posted in கதை கேளு கதை கேளு, சரஸ்வதி, பக்தி. Bookmark the permalink.

8 Responses to சகலகலாவல்லியே

 1. anonymous says:

  புருசனைப் பக்கத்துல வச்சிக்கிட்டு, அவரு பொண்டாட்டி கிட்ட சொல்லிப் பாருங்க
  – “ஒங்க புருசன் நல்லவரு, வல்லவரு; ஆனா நீ இருக்குறதால தான் மா இந்தக் குடும்பமே தாங்குது”
  – அப்படியே சிரிப்பு பூக்கும் அம்மிணி முகத்துல:)
  – அப்படியே ஓரக் கண்ணால் அவரை லுக்கு வுடுவாங்க – கண்ணு பேசும் – தெரிஞ்சிக்குங்க என் அருமையை:)))

  அதைத் தான் இங்கிட்டு குமரகுருபரர் பண்ணுறாரு!
  நான்முகனைப் பக்கத்துல வச்சிக்கிட்டு, கலைமகளை ஏத்தி வுடும் காட்சி:))

  படைப்போன் முதலாம் விண் கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,
  உன்போல் கண் கண்ட தெய்வம் உளதோ?
  பிரமனில் தொடங்கி பல கோடி தெய்வங்கள் உண்டு, ஆனாலும் உன்னைப்போல் ஒரு தெய்வம் இல்லை, சரஸ்வதியே

  எப்புடி?:))

  • anonymous says:

   lemme watch @amas32 amma’s reply for this:)
   will enjoy her “thooNdum” words:))

  • ஆனந்தன் says:

   சகலகலாவல்லி மாலையை ஒவ்வொரு நவராத்திரிப் பூசை நாட்களிலும் படிப்பது எமது குடும்ப வழக்கம். அப்படி இந்தப் பாடலைப் பலமுறை படித்திருந்தாலும் இந்த நுணுக்கம் கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படவில்லை! எடுத்துக் காட்டியமைக்கு நன்றி!

   • anonymous says:

    நல்ல பழக்கம் ஆனந்தன்!
    கேட்க மகிழ்ச்சியா இருக்கு! வீட்டுப் பூசையின் போது தமிழ்ப் பாடலைச் சொல்லி வணங்குவது!

    //இந்தப் பாடலைப் பலமுறை படித்திருந்தாலும் இந்த நுணுக்கம் கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படவில்லை!//

    ha ha ha
    என் தமிழாசிரியர் டேனியல் ஐயா சொல்றாப் போலவே சொல்றீங்களே!:) – “எப்படிடா நீ மட்டும் இப்பிடி மாத்தி யோசிக்கற?”:))

 2. வேளுக்குடி அவர்கள் தன் தந்தையார் அவருக்குக் கூறிய அறிவுரை ஒன்றை ஒரு சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டார். வெளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் தந்தையார் மகா பெரிய சமஸ்க்ரித பண்டிதர். அதே அளவு தமிழிலும் பாண்டித்யம் உண்டு. பெரிய உபன்யாசகர். தன் மகனும் தான் செய்யும் சேவையை தொடர வேண்டும் என்பது அவர் விருப்பம். ஆனால் தன் எண்ணத்தை அவர் மேல் திணிக்க வில்லை. அப்பொழுது வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தார். அவர் தந்தையார் அவரிடம் நான் செய்யும் சேவையை நீயும் தொடர்ந்தால் நீ வேலை பார்க்கும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரும் உன்னை வணகுவார். இப்பொழுதோ நீ அவரை வணங்கி வாழ்கிறாய். அது மட்டும் அல்லாமல் பெரிய மனிதர்களும் அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களும் கூட உன்னைத் தேடி வந்து வணங்குவர் என்று கூறியுள்ளார். அது எவ்வளவு உண்மை என்று இன்று நாம் பார்க்கிறோம்.

  வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து ஒருவன் நிற்கலாம், ஆனால் கற்ற படிப்பை ஞானத்தை அவனிடம் இருந்து பிரிக்கவே முடியாது. அப்பேற்பட்ட செல்வம் அது.

  கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பக்தி யோகம் மற்றும் கர்ம யோகத்தின் பெருமைகளை எடுத்துரைத்தாலும் அவை ஞான யோகத்தின் கலவை இல்லாமல் முழுமை பெறாது. கீதாச்சாரத்தின் ஆதாரமே ஞானம் தான்.

  அந்த ஞயானத்துக்கே அதிபதியான கலைவாணியின் அருமையைத் தெரிந்து கொள்வதற்கும், போற்றுவதற்கும் கூட அவள் அருளைத் தான் நாட வேண்டியுள்ளது. சொற் கடவுள் அவள். சொற்களை கொண்டு அவள் மேல் பாமாலை பாடுவதற்கும் அவள் அருள் தேவை.

  ஞானத்துக்கே அதிபதியாக ஒரு தெய்வம் பெண்ணாக உருவகப் படுத்தியிருப்பது தற்செயலான ஒரு விஷயமா? நிச்சயமாக இருக்க முடியாது 🙂

  அவள் பிரகிருதி. பெண்களை யாசித்தால் கேட்டது உடனே கிடைக்கும். இரக்கம் அதிகம். அதே சமயம் சூக்ஷ்ம அறிவும் அதிகம். A woman’s intuition என்று சொல்வார்கள். அதனால் தான் பார்த்த உடனேயே ஒருவர் தகுதியானவரா இல்லையா என்று அவர்களால் எடை போட முடியும்.

  KRS, உங்களுக்கு ஒரு கேள்வி 🙂 ஞானத்துக்கு அதிபதி விநாயகர் தானே, சரஸ்வதி வாக் தேவி தானே ? சிறு குறிப்பு வரைக. (10 மதிப்பெண்கள்) அதிலும் பெண்களா?

  குமர குருபரருக்கு என் வணக்கங்கள்.

  amas32

  • anonymous says:

   //KRS, உங்களுக்கு ஒரு கேள்வி//

   போச்சுறா….பதிவை இட்டது நம்ம சொக்கரு! எல்லாக் கேள்வியும் சொக்கருக்கே!:))

   ஐயா, சொக்கரே, ஆண்களின் மானத்தைக் காப்பாத்துங்க! விநாயகரே ன்னு சொல்லுங்க! எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்:))

 3. ஆனந்தன் says:

  குமரகுருபரர் சரஸ்வதியின் அருள் பெற்ற சம்பவத்தை எண்ணும்போது இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது! இப்படித்தான் அவரும் இருந்திருப்பார் போலும்!

  • anonymous says:

   குமரகுருபரர், பேச்சு வராம இருந்த குழந்தை!

   திருச்செந்தூர் முருகன் சந்நிதியில்…அம்மா அப்பா கொண்டு விட்டு முறையிட, குழந்தை பேசத் துவங்கியது!
   “பூமேவு செங்கமலப் புத்தேளும்” -ன்னு பாடத் துவங்கிய வெண்பா – அதான் குமர குருபரர் முதல் பாட்டு!

   முருகனருள் என்றாலும்….
   அவன் குடுத்த தமிழ், ஒவ்வொரு வகையில் ஒவ்வொருக்கும் பயன் அளிக்குது!
   குமரகுருபரருக்கு = மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! பிள்ளைத்தமிழ் நூல்களிலேயே அதிகம் கொண்டாடப்படுவது!
   ————–

   குமரகுருவின் கதை
   = குவா குவா! குகா குகா!
   = http://muruganarul.blogspot.com/2010/08/kumaraguruparar.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s