காவல் இல்லாத ஊர்

வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த

கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதிக்

கடை முகவாயிலும் கருந்தாழ்க் காவலும்

உடையோர் காவலும் ஒரீஇயவாகிக்

கட்போர் உளர் எனில் கடுப்பத் தலை ஏற்றி

கொட்பின்…

நூல்: சிலப்பதிகாரம் (இந்திர விழா ஊர் எடுத்த காதை)

பாடியவர்: இளங்கோவடிகள்

சூழல்: காவிரிப் பூம்பட்டினத்து வர்ணனை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களுடைய பொருள்களைப் பல பொதிகளாகக் கொண்டுவந்திருந்தார்கள். அந்தப் பொதிகள் ஒவ்வொன்றிலும் அவர்களுடைய அடையாள எழுத்து பதிக்கப்பட்டிருந்தது, பல எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தப் பொதிகள் அனைத்தும் அந்த ஊர்ப் பண்டசாலையில் குவிந்திருந்தன. ஆனால் அவற்றைக் காவல் காக்கிறவர்கள் யாரும் அங்கே இல்லை. ஏனெனில், வளமான அந்த ஊரில் திருட்டு என்பதே கிடையாது.

ஒருவேளை யாரேனும் ஆசைப்பட்டு அந்தப் பொருள்களைத் திருட முயன்றால், அவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

அவர்களுடைய தலையில் நிறைய பாரத்தைச் சுமத்தி, ஊரைச் சுற்றிவரச் செய்வார்கள். அதுதான் தண்டனை.

துக்கடா

 • இந்த வர்ணனை இன்றைய Railway Station Cloak Room ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஒரே வித்தியாசம், Cloak Roomல் காவல் பலமாக இருக்கும், ஆனால் இங்கே துளி காவல் கிடையாதாம்!
 • ‘அந்த ஊரில் திருட்டு என்பதே கிடையாது’ என்று இந்த வரிகளில் நேரடியாகச் சொல்லப்படவில்லை, மறைமுகமான பொருள் அது. ஒருவேளை யாராவது அப்படித் திருடினாலும், தண்டனை அதிகம் இல்லை, தலையில் பாரத்தை வைத்து ஊர் சுற்றிவரச் செய்வார்கள், அந்த அவமானத்திலேயே பலர் திருந்திவிடுவார்கள்
 • காவிரிப் பூம்பட்டினத்தில் இருக்கும் இதே விதிமுறை, மதுரையிலும் இருந்திருந்தால், கோவலன் பிழைத்திருப்பான், சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்காது 🙂

334/365

Advertisements
This entry was posted in இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், வர்ணனை. Bookmark the permalink.

15 Responses to காவல் இல்லாத ஊர்

 1. anonymous says:

  ஒரு சினிமாக் காட்சி போல இருக்கு-ல்ல?
  மதராசப்பட்டினம்!
  இங்கே காவிரிப் பூம் பட்டினம்!

  இளங்கோ அடிகள், கற்பனையாச் சிலது எழுதினாலும், பல ஊர்களுக்கும் போய் வந்து இருக்காரு! அதான் நுட்பங்களைக் குறிச்சி வைக்கிறாரு!
  மூட்டையில் நம்பர் போட்டுக் குறிச்சி வைப்பதையெல்லாம் சொல்லுறாரு-ன்னா, கட்டாயம் பார்க்காமச் சொல்லி இருக்க மாட்டாரு!

  இன்னிக்கி, நம்பர் போட்டுக் குறிச்சி வைப்பதை Token System ன்னு சொல்லுறோம்! பாருங்க, சுமார் 1700 ஆண்டுக்கு முன்பே டோக்கன் போட்டிருக்காங்க, பண்டைத் தமிழர்!

  • anonymous says:

   வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த
   கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதி

   இன்னிக்கி, நம் விமானப் பயணங்களில் நாம செய்யறதே தான்!
   பெட்டிகளில், என்ன தான் அடையாள எண்-Bar Code ஒட்டிய Sticker ஐ அவுங்க கட்டினாலும், நாமளும், நம்ம பேரு-முகவரியும் எழுதி ஒட்டுறோம்-ல்ல?

   நாம ஒட்டுறது எழுத்து!
   அலுவலர்கள் ஒட்டுறது எண்ணு!
   = எழுத்துப் படுத்த எண்ணுப் பல் பொதி

   வம்ப மாக்கள் ன்னா புதிய மக்கள்!
   இது ஒரு துறைமுகக் காட்சியா இருக்கலாம்!
   பல நாடுகளில் (யவனம், கலிங்கம், கடாரம், சீனம், ஈழம் ன்னு மக்கள் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வரும் காட்சி – காமவேள் விழா ல்ல? அதான் பார்க்கவும், வணிகம் செய்யவும் இத்தனை கூட்டம்! அப்பவே Foreign Direct Investment (FDI) in Entertainment Industry :)))

   • அது சரி! இந்த “package slip” விசியம் காலா காலத்துக்கும் இருக்கும் போல.. 😉 கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தது http://www.ted.com/talks/rajesh_rao_computing_a_rosetta_stone_for_the_indus_script.html , 4000 வருசத்துக்கு முன்னாடி சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய “package slip”. நெடியது தான், இது வரைக்கும் பாக்காட்டி, சிரமம் பாக்காம ஒரு தடவை பாத்துடுங்க. தமிழருக்கும் “package slip-க்கும்” 4000 வருட தொடர்பு தெரிய வரும்.

    அப்புறம் இன்னொன்னு, ஏன் வெளியுர்காரங்களை “மாக்கள்” -ன்னு சொல்றாங்க?

   • anonymous says:

    Brilliant! Dank u Sree:) for sharing the video
    Indus Script is a great subject to watch every time
    Even Prof Parpola gets confused with முருகு & முறுக்கு:))
    ———-

    //அப்புறம் இன்னொன்னு, ஏன் வெளியுர்காரங்களை “மாக்கள்” -ன்னு சொல்றாங்க?//

    எப்பிடிய்யா இப்பிடி வெவகாரமாவே கேள்வி கேக்குறீக?:)

   • anonymous says:

    * மக்கள் = உயர்திணை
    * மாக்கள் = அஃறிணை
    ன்னு நாம ஆக்கீட்டோம்! நாலு முறை இதையே பதிவுல/ ட்விட்டர்-ல்ல சொல்லுங்க! உண்மை ஆயீரும்:))

    ஆனா, தமிழில் அப்பிடி அல்ல!
    நகர மாக்கள், தவத் துறை மாக்கள் = மக்களையே குறிக்கும்!
    மக்கள் – > மாக்கள் என்பது நீட்டல் விகாரம்!
    ———

    வள்ளுவர் ஒரு குறளில்…
    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் – “மாக்கள்”
    அவியினும் வாழினும் என்? -ன்னு திட்டிட்டாரு:))

    ஒடனே, ‘நான் அப்பிடி இல்லப்பா, அவன் தான் அப்பிடி’-ன்னு பழியை அடுத்தவன் தலையில் தூக்கிப் போட, இதைப் புதுசா உருவாக்கிட்டோம்:))
    வைப்போம்-ல்ல வள்ளுவருக்கே ஆப்பு?:))

    வள்ளுவர் சொன்ன மாக்கள் = மக்கள் தான்!
    செவிச்செல்வம் (கல்வி) சுவை உணராமல், வாய்ச் சுவையிலேயே (உணவு) இருக்கும் மக்களின் வாழ்வில் என்ன பயன்? ன்னு தான் கேக்குறாரு!
    ——–

   • anonymous says:

    ஆ, மா = விலங்கு!
    அதுக்குப் பன்மை விகுதி சேர்த்தா = ஆக்கள், மாக்கள்!

    ஆனா, மக்கள்/ மாக்கள் = மனிதர்கள்!
    அதுக்கு விகுதி சேர்க்கத் தேவை இல்ல! ம+க்கள் = மக்கள் ன்னு ஆகாது! ம-க்கு தனியா என்ன பொருளு?:))
    விகுதி சேர்க்காமலேயே, மக்கள் என்பது ஒத்தைச் சொல்லு தான்!:)

    இந்த மக்களையும், அந்த மாக்களையும்….நாம தான் நடுவால பூந்து, லந்து அடிக்கிறோம்:))
    ————-

    யப்பா…
    இந்த ‘கள்’ விகுதி ஒன்னை வச்சிக்கிட்டு தமிழ் படுற பாடு இருக்கே! சொல்லி மாளாதுடா சாமி:))

    * எழுத்துக்கள்/ வாழ்த்துக்கள் = வாழ்த்து+க்+கள் ன்னு நாமளே துண்டாடுவோம்
    * மாக்கள் = மா+க்+கள் = மாம்பழச் சாற்றில் எடுக்கும் கள்ளு ன்னு இன்னும் யாரும் கெளம்பலை! :)) முருகா!

   • அவன் சரியான மாக்கான் அப்படின்னு ஒரு சொல் வழக்கு இருக்கு இல்லையா? 😉 அப்படி என்றால் என்ன?
    amas32

   • anonymous says:

    போச்சுறா….இன்னிக்கி எனக்கு Question Raggingஆ?
    சொக்கரே, எங்கிருந்தாலும், கருடன் மேல் பறந்து வரவும்:) ஆதிமூலமே!:))

   • ரொம்ப நன்றி! வழக்கம் போல அருமையா சொன்னீங்க 🙂

    // * மாக்கள் = மா+க்+கள் = மாம்பழச் சாற்றில் எடுக்கும் கள்ளு ன்னு இன்னும் யாரும் கெளம்பலை! ) முருகா! //

    யாராவது தயாரிச்சா, நல்லாத்தான் இருக்கும்னு நினைகிறேன். 😉

  • anonymous says:

   //கடை முகவாயிலும் கருந்தாழ்க் காவலும்
   உடையோர் காவலும் ஒரீஇயவாகி//

   மொத்தம் ரெண்டு வகைக் காவல்
   * கருந் தாழ்க் காவல் = unmanned
   * உடையோர் காவல் = manned

   உணவுப்பண்டம், நெல் = இதுக்கெல்லாம் தாழ்க் காவல்
   அணிகலன், நகை, பொன், கற்கள் = உடையோர் காவல்

   என்ன தான் நாட்டு மக்களும், அரசனும் நல்லவர்களா இருந்தாலும், பழிக்கு அஞ்சினாலும்….
   ஒரு சமுதாயம் ன்னு வந்துட்டா, எல்லாமும் கலந்து தான் இருக்கும்! அப்பர் சாமிகளும் இருப்பாரு, ஆடு வெட்டறவனும் இருப்பான்! அதனால் அருள்-மருள் ன்னு எல்லாமே கொண்டு தான் ஒரு அரச முறை = System இருக்கணும்!

   சோழ மண்ணில், புகார் நகரி்ல், System ன்னு ஒன்னு இருக்கு! அதுக்கு இளங்கோவின் இந்த வரிகளே அத்தாட்சி!

 2. anonymous says:

  //காவிரிப் பூம்பட்டினத்தில் இருக்கும் இதே விதிமுறை, மதுரையிலும் இருந்திருந்தால், கோவலன் பிழைத்திருப்பான்//

  மதுரையிலும் இருக்கு!
  மதுரையில் நடந்தது System Failure அல்ல! அது உயர் மட்ட அரசியலில் இருக்கும் தனி மனிதப் பேராசை! பொற்கொல்லன் ஒருவனின் தனிப்பட்ட சூழ்ச்சி!

  ஆனா, அரசன் என்பவன், சபையில் விசாரித்து விட்டு, பின்னரே தண்டனை வழங்கி இருக்கணும்!
  முதலில், குற்றம் சுமத்தப்பட்டவனைப் “பார்க்கணும்”!

  ஆனா காமம் கண்ணை மறைச்சுது! எங்கே பார்க்க?
  அவளைத் திருப்திப்படுத்தும் அவசரம்…
  பார்க்காமலேயே, நொறுக்கி விட்டான்….மொத்த வாழ்க்கையும்! காமக்கடும்புனல்!!

 3. விழவு/விழா?

 4. ஸ்ரீ குருபரன் கொடுத்த லிங்க் அருமை, நன்றி 🙂

  பல சமயங்களில் பண்டைய நாகரீகத்தைப் பற்றிப் படிக்கும் பொழுது அவர்களின் ஏற்றமான வாழ்வைப் பார்த்து அசந்து போயிருக்கிறேன். நாமே இன்னும் சரியான வளர்ச்சியில்லாமல் பின்னோக்கிப் போய்விட்டோமோ என்று கூடத் தோன்றும்.

  இராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் இலங்கையின் சிறப்புகளைப் படிக்கும் பொழுது அப்பொழுதே இவ்வளவு கலாச்சார ஏற்றத்துடனும், விஞ்ஞான வளர்ச்சியுடனும் இருந்த நாடா இலங்கை என்று தோன்றும்!

  அப்படியிருக்கும் பொழுது சோழநாட்டின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ!நுண்ணிய அறிவிலும், நுண்ணிய அரசியலிலும் பெயர் பெற்றவர்கள் ஆயிற்றே தமிழர்கள். இந்த குறியீட்டு மூலம் பண்டங்களை அடையாளப் படுத்துதல் போன்றவை அவர்களுக்கு ஜுஜுபி மேட்டராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் 🙂

  ஆனால் இளங்கோவடிகள் இதைப் பற்றித் தனியாகக் குறிப்பிட்டிருப்பது பெருமைக்குரியது. மேலும் எவ்வளவு வளமான நாடாக இருந்திருந்தால் திருட்டு பயம் இல்லாமல் இருந்திருக்கும்!

  amas32

  • நன்றிங்க! உண்மையில், நீங்க சொக்கருக்குதான் நன்றி சொல்லன்னும். ஏறத்தாழ ஒரு வருட காலத்தில் 365பாவால் நிறைய அறிய முடிந்தது. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s