கொடியர் அல்லர்

’மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்

கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும்

கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்

பசைஇப் பசந்தன்று, நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே

நூல்: குறுந்தொகை (#87)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை, காதலியைப் பிரிந்து சென்றான் ஒரு காதலன், அப்போது ‘கடவுள் மேல் ஆணையாக இந்தத் தேதிக்குள் திரும்பி வருவேன்’ என்று சத்தியம் செய்தான், ஆனால் அந்தத் தேதியில் வரவில்லை, இப்போது, காதலிக்கு இரண்டு பிரச்னைகள், ஒன்று, அவனைப் பிரிந்த துயரம், இன்னொன்று, சத்தியத்தை மீறிய அவனைக் கடவுள் தண்டிக்குமோ என்கிற கவலை. அவனுக்காகக் கடவுளிடம் பேசுகிறாள்

இந்த மன்றத்தின் மரங்களில் குடிகொண்டிருக்கும் முதிர்ந்த தெய்வங்களே, உங்களை வணங்குகிறேன்,

சொன்ன சொல் தவறுகிற கொடியவர்களை நீங்கள் தண்டித்துவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபற்றி உங்களிடம் பேச வந்தேன்.

என் காதலன் கொடியவன் அல்லன். என்னிடம் அவன் திரும்பி வருவதாகச் சத்தியம் செய்தது உண்மைதான். உரிய காலத்தில் திரும்பாததும் உண்மைதான்.

ஆனால், அவனால் என்னுடைய நெற்றியில் பசலை படர்ந்தது, தோளெல்லாம் நெகிழ்ந்துவிட்டது என்று ஊர் பேசுகிறது. இது உண்மை அல்ல, பொய்.

என்னுடைய மனத்தில் அவன்மீது காதல் தோன்றியது. அது பெருகிய வேகத்தால்தான் என் நெற்றிமீது பசலை படர்ந்தது, தோள்கள் நெகிழ்ந்தன, இதற்கும் அவனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, எனக்காகக் கோபப்பட்டு அவனைத் தண்டித்துவிடாதீர்கள்.

துக்கடா

 • காதலன் பிரிந்த துயரத்தால் வாடிப் புலம்பிய பெண்களைதான் இதுவரை நிறையப் பார்த்திருக்கிறோம், அந்தத் துன்பத்துக்கு நடுவிலும், அவன்மீது கொண்ட அக்கறையினால் தெய்வத்திடம் வாதாடும் இந்தக் காதலி, வித்தியாசமானவள்தான்
 • ’இனிக்கும் இலக்கியம்’ என்ற நூலில் இந்தப் பாடலைப் பற்றி விவரிக்கும் அ. வெ. சுப்பிரமணியன் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்: பாடலின் முதல் 2 வரிகளில் 3 அளபெடைகள் (மாராஅத்த, பேஎம் & தெறூஉம்) ஏன்?
 • அளபெடைகளை உச்சரிக்கும்போது குரல் நடுங்குவதுபோன்ற ஓர் உணர்வு வரும், இந்தப் பாடலில் தெய்வத்திடம் பேசும் காதலியின் குரல் பயத்தில் நடுங்குகிறது, அதைக் காண்பிப்பதற்காக அளபெடைகளை நிறையப் பயன்படுத்தியிருக்கிறார் கபிலர் என்பது அ. வெ. சுப்பிரமணியனின் பார்வை

331/365

This entry was posted in அகம், கபிலர், குறிஞ்சி, குறுந்தொகை, நாடகம், பெண்மொழி. Bookmark the permalink.

24 Responses to கொடியர் அல்லர்

 1. காதலைப் பற்றி அடியேனுக்கு எதுவும் தெரியாததால், இதிலிருந்து நான் ஜூட் விட்டுக்கிறேன்.. அதென்ன பசலை நோய்? உடம்பெல்லாம் பச்சை,பச்சையா ஆயிருமா என்ன? பசலைக் கீரைக்கும்,இதுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா என்ன?

 2. anonymous says:

  முருகா…
  இந்தக் காதல்-கற்பு நெஞ்சத்தையே, எனக்கு இறுதி வரை அருள்வாயாக!
  ———

  கற்பு கற்பு-ன்னு சொல்லுறோமே! அது என்ன?

  * அடுத்தவன் கை, உடம்பு மேல படாம இருப்பதா? = அப்படீன்னா பேருந்தில் பயணிக்கக் கூட முடியாது
  * அடுத்தவன் வடிவம், மனதில் ஏறாம இருப்பதா? = அப்படின்னா, உலகத்தில் ஒருத்தி கூட பத்தினி/பத்தினன் இல்ல:))

  எத்தினி சினிமா! எத்தினி Hero! எத்தினி Heroine – யாரையும் மனசு நினைச்சிப் பாக்குறது இல்லீயா என்ன?:))
  கற்பெனப் படுவது = பிறன் நெஞ்சு புகாமை ன்னு எவனோ ஒரு ஆணாதிக்கவாதிப் புலவன் எழுதி வச்சிட்டுப் போயிட்டான்!:((

  அப்போ, கற்பு-ன்னா என்னய்யா?

  அதான் சங்கத் தமிழ் காட்டுது!
  இந்தப் பாட்டில் உள்ள பெண் காட்டுறா!
  ஒரு ஆணா, என்னாலயும் இதைக் கடைப்பிடிக்க என்னவன் முருகவன் அருளணும்!

  • anonymous says:

   கற்பு = கல் + பு

   கல் = கல்லு போல இருக்கணும்!
   அம்மிக் கல்லுல ஏறி மெட்டி போடுறது – இதெல்லாம் பின்னாளைய புனைவுகள்! சடங்குகள்!

   கல்+பு
   இயல்+பு
   துணி+பு
   = இப்படிப் பு விகுதி பெற்று வரும் தமிழ்ச் சொற்கள்!

   கல் = உறுதி
   படி, பயில் எல்லாம் இதன் வேர்ச்சொல் தான்! பயிலுதல் = உள்வாங்குதல்! Internalization!
   * உள்ளுக்குள்ளேயே பயில்வது = கல்+வி = கல்வி
   * உள்ளுக்குள்ளேயே உறுதி கொள்வது = கற்+பு = கற்பு
   —————

   ஆக….., கற்பு = உடல் சம்பந்தப்பட்டது அல்ல!
   உள் சம்பந்தப்பட்டது!
   “உள்ளம்” சம்பந்தப்பட்டது!
   இந்தப் பொண்ணு, பாட்டில் அப்படித் தான் இருக்கா!

  • anonymous says:

   “உள்ளம்” சம்பந்தப்பட்டது-ன்னு பார்த்தோம்!
   உள்+அம் = உள்ளம்!
   ஆனா, உள்ளம் எங்கே இருக்கு? – யாராச்சும் காட்டுங்களேன்:)))

   உடம்பு எங்கே இருக்கு-ன்னு கேட்டா, காட்டீறலாம்!
   உள்ளம் எங்கே இருக்கு-ன்னு கேட்டா?….

   அதாங்க கற்பு!

   உள்ளம், ஊறி ஊறி,….அவனே அவனே அவனே ன்னு இருக்கு பாருங்க! அதான் கற்பு!
   அந்த உறுதி….எது-ன்னாலும் அவனே!

   இது ஒரு உள்ள அமைப்பு!
   அதைக் காட்ட முடியாது!
   ஆனா, செய்யுற செயல் ஒவ்வொன்னத்துலயும் தொனிக்கும்….அவனே!!! = கற்பு!

  • anonymous says:

   அட!
   சொக்கர், இது தான்டா “காதல்”-ன்னு தானே சொன்னாரு!?இவன் “கற்பு கற்பு”-ங்கிறானே ன்னு பாக்குறீங்களா?

   இந்தக் கற்பு, இந்தக் குறுந்தொகைப் பென்ணுக்கு இருக்கு!
   கற்பு = உறுதி!
   * அவனே என்னும் உறுதி!
   * அவன் எப்படியும் வருவான் என்னும் உறுதி!
   * தன்னிடம் இதுவரை வரலீன்னாலும், அவனுக்கு ஒன்னும் ஆயீறக் கூடாது ன்னு உறுதி!
   ————————

   எல்லாப் பொண்ணுங்களும் இவளைப் போலவே இருக்கணும் ன்னு இதை “institutionalize” பண்ண முடியாது! பண்ணக் கூடாது!

   இது, அவளா விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று!
   இது, உள்ளத்தின் உண்மையான பிரதிபலிப்பு! இதை dress code போல conduct code போட்டு வரவழைக்க முடியாது! இது = உள் + அம்

   ஆணுக்கும் இந்த உள் + அம் அமையணும்!
   கற்பு நிலை = இரு கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்!

 3. anonymous says:

  கபிலர், குறுந்தொகை பத்தியெல்லாம் முன்னமே நிறையச் சொல்லியிருக்கேன்; அதுனால பாட்டுக்கு நேரடியாப் போவோமா?
  Coffee Kudiching Technique Start……
  ———–

  மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
  கொடியோர்த் தெறூஉம்’ என்ப; யாவதும்

  * மன்ற மராஅத்த = ஊர்ப் பொது மன்றத்தில் உள்ள மரம்
  * பேஎம்முதிர் கடவுள் = அச்சம் தரும் பழைய கடவுள் (முருகன்???) 🙂
  * கொடியோர் தெறூஉம் என்ப = கொடியவங்களை வருத்தும் ன்னு சொல்லுவாங்களே!

  திணை = குறிஞ்சி; அதுனால முருகனாத் தான் இருக்கணும்!
  சில சமயம் குறிஞ்சி-ல திருமாலும், முல்லை-ல முருகனும் கலந்து வரும் பாட்டுக்கள் இருக்கு! ஆனா வேறு யாரும் வருவதில்லை!
  = இவர்களே பண்டைத் தமிழ்க் கடவுள்கள்!
  ———–

  வேந்தன் = இந்திரன் கிடையாது! அந்நாட்டு மன்னன்! அப்பறம் இந்திரன் ன்னு ஆக்கீட்டாங்க! வேந்தன் ஒரு அடையாளம் மட்டுமே!
  அதே போலத் தான் வருணனும் = இது ஒரு கடல் காற்று/ கடல் பூதம்!

  இவர்களுக்கு-ன்னு தனியா பெரும் ஆலயங்களோ, மக்கள் கூத்தோ, திணைக்குள் துறையோ, மக்கள் வாழ்வியலில் ஒன்னும் கிடையாது! வெறும் நில அடையாளங்களோடு நின்று விட்டனர்!
  அதனால் சேயோன்-மாயோன் (முருகன்-திருமால்), தமிழ்த் தொன்மத்தின் அசைக்கவியலாத் தொன்மரபு!

  * முன்னை மரபின் முதுமொழி முதல்வன் = திருமால்
  * அரும்பெயர் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்!

  • anonymous says:

   சரீ…..
   ஏதோ மரம், அச்சம் தரும் சாமீ ன்னுல்லாம் வருதே! முருகன் அப்படியா?:)
   My darling is sweetheart, but in changa tamizh pre historic times of tribes….
   முருகன் = ஒரு ஆவி:))
   ——————–

   நம்ப முடியுதா?
   ஆனா, அப்படித் தான் வழிபாடு முதிர்ச்சி அடைஞ்சுது!
   நடுகல் -> கந்து -> வேல் ன்னு இயற்கை வழிபாடு….கொஞ்சம் கொஞ்சமா பெருந்தெய்வ வழிபாடா மாற்றம் அடைஞ்சுது!
   http://murugan.org/tamil/kannabiran.vel.htm

   முருகன், பெண்களைப் பீடிக்கும் ஆவியாகவும் தொல்குடிகள் கருதினர்!
   பொண்ணு காதல் வயப்பட்டு, மனம் குன்றிப் போயிருந்தா, அதைப் புரிஞ்சிக்காது, அம்மாக்காரி, வேலன் வெறியாடல் பூசை வச்சி, முருகனுக்குப் படையல் போடுவா:)
   முருகன் வந்து சூர் (துன்பம்) மடிப்பான் ன்னு நம்பிக்கை!

   சில சமயம், காதல் வசப்பட்ட பெண்ணே, வேலன் வெறியாடுவா!
   காதலன், ஏதோ ஒரு காரணத்தால்…இன்னொருத்தி கிட்ட வசப்பட்டுட்டான்!
   இவளுக்கு அதைத் தட்டிக் கேக்கவும் பிடிக்கல! ஆனா அவன் ஒதுக்குவதைக் கண்டு, மனசு தாளாம, பித்தேறிய நிலையில் ஆடும் வேலன் வெறி!

   இப்படியான “வெறி புடிச்ச” முருகன்:)))
   அதான்….இந்தப் பாட்டுல, மன்ற மரம், அச்சம் தரும் சாமீ, அழிச்சிரும் ன்னு எல்லாம் வருது!
   but my murugan is a cool guy & a hot guy:)

  • anonymous says:

   சங்கத் தமிழில், காதலர்கள், கூடி மகிழ்வதற்கு முன்னால்…..
   இணை பிரியாமல் இருப்போம்-ன்னு…
   திருமால் மேலோ, முருகன் மேலோ…. சூள் செய்து தருவது வழக்கம் (சத்தியம் செய்தல்)

   இந்தப் பாட்டுல, முருகன் மேல சத்தியம் செஞ்சிட்டுப் போயிருக்கான், அவன்!

   கலித்தொகையில், திருமால் மேல் சத்தியம் செய்யும் காதலன்!
   “இனை வனப்பின், மாயோய்!
   மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத்
   தலையினால் தொட்டு உற்றேன், சூள்”

   இப்படிச் செய்து, இன்புறக் கூடிவிட்டு…
   பின்பு, விட்டுவிட்டுப் போனாலோ, அல்லது வருவேன் ன்னு சொல்லிட்டு வராமப் போனாலோ…
   இறை தண்டிக்கும் என்பது ஒரு நம்பிக்கை! = காதல் Commitment:))
   ————-

  • anonymous says:

   இந்தப் பாட்டில், இவன் பொருள் தேடவோ, போருக்கோ எல்லாம் போகலை!
   அப்படிப் போனா… அது இருத்தலும் இருத்தல் நிமித்தமும் = முல்லைத் திணை ஆயீரும்!
   இது குறிஞ்சித் திணை = புணர்தலும் புணர்தல் நிமித்தமும்!

   புணர்ந்த பின் சென்றவன், அப்பறமா இன்னும் வரல…..
   அதான் இவ தடுமாறி நிக்குறா! மனசுல என்னமோ அழுத்துது… முருகன் கிட்ட வந்து நிக்குறா!:((

 4. anonymous says:

  எதுக்கு வந்து நிக்குறா?

  இன்றைய சீரியல்களில் வருவது போல, காசு வெட்டிப் போடவா?:))
  காதலனுக்கு மை தடவும் வசிய பூஜை பண்ணவா?
  மிளகாய் யாகம் பண்ணி, அவனுக்கு ஏவல் வச்சி, தன்னிடம் சேர வைக்கவா?
  அவனைப் பாவீ-ன்னு சபிக்கவா?

  எதுக்கு வந்து நிக்குறா? – முருகன் கிட்ட??

  கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
  பசைஇப் பசந்தன்று, நுதலே
  ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே
  —————-

  * கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
  = முருகா….அவன் கொடியவன் அல்ல! எனக்குத் தெரியும் அவனைப் பத்தி!
  உனக்கு எப்படி குன்று இருக்கும் இடமெல்லாம்…
  அது போல் அவருக்கும் குன்று இருக்கும் இடமெல்லாம்….

  * பசைஇப் பசந்தன்று, நுதலே
  = நெற்றீல அம்புட்டுச் சீக்கிரம் பசலை வராது! பிறப்புறுப்பு, மறைவிடம் ன்னு தான் வெள்ளைப்படும்! அப்படியே கால் கை ன்னு பரவும்
  ஆனா, அவன் விட்டுச் சென்று நாளானதால், நெற்றி வரைக்கும் வந்துருச்சி போல
  இனி ஊர் கண்ணுக்கு/ அம்மா கண்ணுக்கு மறைக்க முடியாது!

  * ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே
  = என் தோள் நெகிழ்ந்து போயி, மெல்லீசா ஆயிருச்சி…எதுனால? அவர் காரணம் அல்ல! நான் அவரையே நினைப்பதால்….

  குற்றம் என் மேல முருகா!
  அவனை நல்லபடியா வச்சிக்கோ!

  • anonymous says:

   இவ லூசா? மன நல மருத்துவரைப் பாக்கணுமா?
   ஏன் இப்பிடி இருக்கா?
   திருந்தவே மாட்டாளா?

   அவன் கூட வாழணும் ன்னு நினைச்சது எதுக்கு? = உடல் பசிக்கா? உள்ளப் பசிக்கா?
   அவன் மடியில் தலை வச்சிப் படுத்து, முருகன் கதை சொல்லும் வாரியார் ஒலிப்பதிவுகளைக் கேக்கணும் ன்னு நினைச்சது எதுக்கு?

   அவன் இன்பம் முக்கியம் தான்!
   ஆனா, என் இன்பம்?
   ——————–

   என் இன்பமே = அவன் தான்!
   ஏன்-ன்னா….அவன் இன்பமாச் சிரிக்கும் போது, அவன் கண்ணைப் பாத்தாலே, எனக்கு சாப்பிட்டாப் போல நிறைஞ்சிருது….

   அவன் என்னைத் தொடுவதும், சீண்டுவதும், புணர்வதும் = எல்லாம் இன்பம் தான்! இல்லை-ன்னு சொல்லல!
   ஆனா, அப்படிப் புணரும் போது, என் மகிழ்ச்சியை விட, அவன் கண்ணில் உள்ள மகிழ்ச்சியைப் பாக்குறது இன்னும் மகிழ்ச்சி! முருகா!

   அதுனால, அவன் மகிழ்ச்சியைக் கெடுத்துறாத!
   அவன், கொடுத்த வாக்கு = “என் கிட்ட வந்துருடீ… நான் உன்னைப் பாத்துக்கறேன்”!
   இந்த வாக்குக்காக எல்லாம், அவன் மகிழ்ச்சியைக் கெடுத்துறாத, முருகா!
   ——————–

   இந்த நினைப்பு இருக்கே = “களவிலும் கற்பு”
   muruga, give me the mind, like this person in changa tamizh
   – always yours,

 5. anonymous says:

  //பாடலின் முதல் 2 வரிகளில் 3 அளபெடைகள்//

  அழகான இலக்கியப் பார்வை!
  அ. வெ. சுப்பிரமணியன்! = இவரு யாரு சொக்கரே? வேறேதேனும் நூல் எழுதி இருக்காரா? சொல்லி உதவுங்கள்!
  இது போன்றவர்களின் சங்க நூல் உரைகளைத் தான் வாசிக்கணும்!

  • என். சொக்கன் says:

   இவரைப் பற்றி விவரம் தெரியவில்லை, இவர் எழுதிய 2 புத்தகங்கள் பழைய புத்தகக்கடையில் கிடைத்தன, இரண்டும் அற்புதம், பத்தே ரூபாயில் கிடைத்த பொக்கிஷங்கள்

  • என். சொக்கன் says:

   அ. வெ. சுப்பிரமணியன் நூல்கள் : http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=1039

 6. anonymous says:

  தமிழில், அளபெடை ன்னா என்னா? ன்னு மட்டும் சுருக்கமாச் சொல்லட்டுமா?

  * அளபு = அளவு
  * எடை = கனம்
  ஒரு தராசைப் போல, கனத்தை அளந்து, அதுக்கேத்தாப் போல, பாட்டில் சொல்லை இட்டு நிறுத்துவது = அளபெடை!

  பாட்டில், இசைக்காக/ ஓசைக்காக, சில அளவுகள், நீண்டு ஒலிக்கும் = அளபெடை
  நெடில் மட்டும் தான் அளபெடுக்கும்! குறில் எடுக்காது!
  உயிரளபெடை, ஒற்றளபெடை ன்னு ரெண்டுமே உண்டு!

  இந்தப் பாட்டில் மொத்தம் நான்கு அளபெடைகள் இருக்கு பாருங்க!
  மாராஅத்த = மரத்த
  பேஎம் = பேம் (பேய்)
  தெறூஉம் = தெறூம்
  பசைஇ = பசை
  —————-

  1. சாதாரணமா அளபெடுத்தா = இயற்கை அளபெடை; eg: மகடூஉ (மகளிர்)
  2. பெயர்ச்சொல்லை, வினைச்சொல்லா மாத்தினா = சொல்லிசை அளபெடை
  eg: தொகைஇ (தொகை, தொகுத்து ன்னு ஆவுது)
  3. ஓசை குறையலீன்னாலும், ஒரு Styleக்கு வந்தா = இன்னிசை அளபெடை
  eg: எடுப்பதூஉம் எல்லாம் மழை
  (எடுப்பதும் ன்னு சொன்னாலே போதும், ஆனா ஊஉம் ன்னு சேக்குறாரு ஐயன்)

  இப்போ, பாட்டில் உள்ள, அந்த நாலு அளபெடையும் என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்:))

  • anonymous says:

   பாட்டு ஐஞ்சே வரி
   அதுல நாலு அளபெடை, கபிலர் போடுறாரு-ன்னா….

   மராஅத்த முருகா ன்னு, அவ தழுதழுக்கறது…கண்ணு முன்னாடித் தெரியுது: முருகா, இவளுக்கு ஏதாச்சும் பண்ணுடா!

   ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
   அறியாயோ முருகா, உன் கர்ணை இல்லீயோ?

   • anonymous says:

    முருகன் மேல கொஞ்சம் கோவம்….
    அதான் ’கர்ணை’ ன்னு குத்திக் காட்டிட்டேன்; எபி அல்ல! இன்னும் நடுவால ஆவி, பாவி ன்னுல்லாம் வேற பேசிட்டேன்…
    sorry da! happy bday tomorrow!
    en mela kovam aa? ey…chollu!

 7. ஆனந்தன் says:

  ஒரு பாட்டை வைத்து ஒரு சீஇரியலே எடுத்துவிடலாம் போலிருக்கிறதே!
  கற்புக்கு விளக்கம் சிறப்பு!

  • anonymous says:

   இவரைப் பாரேன்…பின்னூட்டத்தில் அளபெடுக்கறாரு >சீஇரியல்< :))

 8. இங்கே வந்து படித்தால் ஒரு முனைவர் பட்டம் பெரும் தகுதி வந்துவிடும், நிச்சயமாக. நன்றி சொக்கரே, கேஆர்எஸ் 🙂

  குழந்தையை தாய் அடித்தாலோ கடிந்து கொண்டாலோ, குழந்தை தாயிடமே ஓடிவந்து கட்டிக் கொண்டு அழும். அதை தேற்றுவதும் தாயின் வேலையாகிவிடும். அது போல காதலன் சொன்ன சொல் தவறி வராமல் போனாலும் அவனுக்கு அதனால் எந்தத் தீங்கும் வராமல் பாதுகாக்க இறைவனை இறைஞ்சுகிறாள் இந்தப் பெண்.

  பெண்ணின் மறு பெயர் தியாகம். அது பயின்று வருவதில்லை DNA விலேயே பதிந்துள்ளது.

  amas32

  • anonymous says:

   //பெண்ணின் மறு பெயர் தியாகம்//

   தோடா…இதான் பெண்ணாதிக்கம்:)
   even guyz are also good only! i am the egg-jample; therinjikonga:)))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s