பந்திக்கும் முந்து, படைக்கும் முந்து

’வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்

யாம் தனக்கு உறுமுறை வளாவ விலக்கு

வாய்வாள் பற்றி நின்றனன்’ என்று

சினவல் ஓம்புமின் சிறு புல்லாளர்,

ஈண்டே போல வேண்டுவன் ஆயின்

’என்முறை வருக’ என்னான் கம்மென

எழுதரு பெரும்படை விலக்கி

ஆண்டு நிற்கும் ஆண்தகை அன்னே

நூல்: புறநானூறு (#292)

பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார்

சூழல்: வஞ்சித் திணை, பெருஞ்சோற்று நிலை, அரசன் வீரர்களுக்கு உணவு அளிக்கும் காட்சி

அட அசட்டுப் பசங்களா,

அரசனுக்காக இனிய, குளிர்ந்த மதுவைக் கொண்டுவந்தீங்க, அதையே படை வீரர்கள் எல்லாருக்கும் விநியோகிச்சீங்க, அது முறைப்படி இந்தச் சின்னப் பய கிட்டே வர்றதுக்குக் கொஞ்சம்த தாமதமாகிடுச்சு,

அதனால இவன் கோவிச்சுகிட்டான், ‘எனக்கு மதுவே தேவையில்லை’ன்னு வாளும் கையுமா எழுந்து நிக்கறான்.

அதுக்காக, நீங்க இவன்மேல கோவப்பட்டுப் பாயறீங்க, ‘மரியாதை தெரியாதவனே’ன்னு கத்தறீங்க, இதை முதல்ல நிறுத்துங்க.

‘இங்கே மது உடனே கிடைக்கலையேன்னு அவசரப்படற இந்தப் பய, போர்க்களத்துல என்ன செய்வான் தெரியுமா?

அங்கேயும் இவனுக்கு அவசரம்தான், எதிரிங்க தன் பக்கத்துல வர்றவரைக்கும் பொறுத்திருக்கமாட்டான், விறுவிறுன்னு முன்னே போய் எல்லாரையும் வெட்டி வீழ்த்தி ஜெயிச்சுடுவான், கில்லாடியான ஆளு, பெரிய வீரன் இவன்!’

அதனால, நீங்கல்லாம் ஊத்திக்கறதை விட்டுட்டு, இவனுக்கு மொதல்ல ஊத்துங்க, அவன் சந்தோஷப்பட்டா நம்ம ராஜாவுக்கு வெற்றிகள் குவியும்.

துக்கடா

 • போர் வாடை மிகுந்த புற நானூறில் இதுமாதிரி ’ரிலாக்ஸ்’ பாட்டுகள், அதுவும் ‘பார்ட்டி சூழ்நிலை’ மிக அபூர்வம், அந்த இளைஞனின் முன்கோபமும் வீரமும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது
 • ’தீம் தண் நறவம்’ … இனிமையான, குளிர்ச்சியான நறவமாம் … மதுவைக் குளிரவைத்துக் குடிக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது
 • உண்மையில், சங்க இலக்கியத்தில் மது’ என்று ஒரு தனி ஆராய்ச்சி நூலே எழுதலாம், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ தகவல்கள் இருக்கின்றன :>
 • உதாரணமாக, அந்தக் காலத்தில் அரசர்கள் அருந்தும் மதுவும் வீரர்கள் அருந்தும் மதுவும் ஒரேமாதிரி இருக்காதாம், அரசர்களுக்குத் தருவதில் ‘போதை’ குறைவாக இருக்குமாம், அதோடு வேறு சில மேட்டர்களைக் கலந்து கூடுதல் போதை ஏற்றி வீரர்களுக்கு வழங்குவார்களாம், அதனால்தான் இந்தப் பாட்டில் (ச்சே, அந்த Bottle இல்லைய்யா!) வரும் வீரனுக்கு மது சென்று சேரத் தாமதமாகிவிட்டது, அதற்குள் அவன் கோபித்துக்கொண்டு எழுந்துவிட்டான்

327/365

This entry was posted in கிண்டல், புறநானூறு, புறம், வீரம். Bookmark the permalink.

26 Responses to பந்திக்கும் முந்து, படைக்கும் முந்து

 1. anonymous says:

  //ச்சே, அந்த Bottle இல்லைய்யா!//

  பாட்டில் பிழை வந்தாலும் மன்னித்து விடலாம்!
  Bottle பிழை வந்தா மன்னிக்கவே முடியாது;)))

  Bottle ன்னு வந்துட்டா…எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை!
  அதென்ன மன்னனுக்கு மட்டும் சிறப்பு மது?
  எல்லாரும் இப் Bottle மன்னர்!
  அதான், இந்த வீரன் பொங்ங்ங்கிட்டான்:))

  • anonymous says:

   சங்க இலக்கியத்தில் மது…

   கள்,
   மது,
   நறவம், நறா,
   தேறல்,
   தோப்பி,
   பிழி,
   தேக்கள்,
   மட்டு

   ….சும்மா ஞாபகத்தில் இருந்து சொல்லுறேன்!:) சந்தேகமாப் பாக்காதீங்க:))
   Malibu Rum ன்னு இருக்கு! With Coconut flakes! அதைப் பருகிட்டு, இன்னிக்கி இரவு தேடினா, நிறைய கெடைக்கும் ன்னு நினைக்கிறேன்:))

   • ஆனந்தன் says:

    ‘365பாவில் Malibu Rum’ என்று ஒரு ஆராய்ச்சியே செய்து விடலாம் போல் இருக்கிறது! பின்னூட்டங்களில் பலமுறை எடுத்தாளப்பட்டிருகிறது!

  • anonymous says:

   அச்சோ மறந்துட்டேனே….
   “மகிழ்” ன்னே ஒரு வகை மது! சங்க இலக்கியத்தில்!:)
   பேரே எம்புட்டு மகிழ்ச்சியா இருக்கு-ல்ல?

 2. பிரமாதமான பாட்டு.
  கேஆரெஸ் வந்து விரிவா அர்த்தம் சொல்றதுக்குள்ள ஒரு மேலோட்டமான plug போட்டுட்டு போயிடறேன் http://dagalti.blogspot.com/2010/05/appraisal.html

  Warriors line for the rationed beer
  Some men raise concern:
  “He breaks the queue, ‘should be made clear.
  Discipline he should learn”
  “Blades of grass you are, I fear
  Tame your belly burn
  When the battle call rings loud and clear
  He waits not for his turn”

  • anonymous says:

   Bravo! Perfect translation @dagalti
   நீங்க சிறந்த சங்கக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் மொழியாக்கலாமே! – Atleast திணைக்கு ஒன்றாக, ஒவ்வொரு பாட்டு!

   //Blades of grass you are, I fear
   Tame your belly burn//

   ha ha ha! enjoyed this line very much!
   muruga…ennamo therila, after a long time, vaai vittu chirikkiren:) – //Blades of grass you are// :))

  • ஆனந்தன் says:

   Excellent translation! Thanks.

  • அருமை! அருமை 🙂
   Unbelievably amazing translation! 🙂
   amas32

 3. anonymous says:

  இந்தப் பாட்டில் உள்ள முக்கியமான சொற்களை மட்டும் கோடி காட்டிட்டுப் போயிடறேன்!
  Someone volunteered for that coffee kudiching technique – two two lines at a time! Pl participate in the group, not just reading alone, drinking makes the difference :))

  சங்க இலக்கியத்தில்…….வரிகளை, நேரடியாப் படிப்பது = கொள்ளை இன்பம்!
  அதுக்கேத்தாப் போல, சொக்கர் பதம் பிரிச்சித் தான் பாட்டைப் போடறாரு! So pl enjoy this tamizh opportunity
  ————–

  • anonymous says:

   * வளாவ = இன்னிக்கி சுடு தண்ணிய விளாவு ன்ன்னு சொல்லுறோமோ?
   இங்கே பாருங்க, வளாவ இருக்கு! வளாவ = கலத்தல்
   So cocktails க்கு தமிழ்ச் சொல் = வளாவல் :)))

   * சினவல் = சினக்காதே! அல் = எதிர்மறை விகுதி
   —————

   * கம்மென = இன்னிக்கு கம் ன்னு போ ன்னு சொல்லுறோம்! அமைதியாப் போ ன்னு பொருள்! ஆனா இந்தக் கம்மென பாருங்கள்!
   கம்மென = முன்னெழுதல் = Proactive!

   Hez a Proactive Guy! Doesnt wait until it happens, but initiates the happening!
   Some Managers “discuss” the happening; Good Managers “make” the happening!
   ’என்முறை வருக’ என்னான்
   கம்மென எழுதரு…..பெரும்படை விலக்கி
   I wud like to promote this “kudikaara guy” from soldier to manager post:)
   —————

  • anonymous says:

   * ஆண்டகை
   சொக்கர் ஆண் + தகை ன்னு பிரிச்சி எழுதி இருக்காரு!
   ஆண்டகை, ஆண்டை ன்னு இன்னிக்கும் வழக்கில் உள்ள சொல்லு தான்! பண்ணையாரை கூட = ஆண்டை ம்பாங்க!

   ஆனா, ஆண்டகை = Hez so manly, Hunk ன்னு சொல்லுறோமே! அது!
   Hunk க்கு தமிழ்ச் சொல் = ஆண்டகையா?:)))

   ஆண்டகை முருகன் தீண்டிய தானை -ம்பாரு! அருணகிரியா? கச்சியப்பரா? ன்னு மறந்து போச்சி!
   But whatever….My Murugan is a hunk:)) Six Pack Hunk Muruga!

 4. anonymous says:

  சில, பின்புலத் தகவல் மட்டும் சொல்லிடறேன்….

  ’காபி உறிஞ்சும் கலை’ப்படி, வரிப் பொருளை நான் சொல்லப் போவதில்லை! Only volunteers:)
  ———————

  //போர் வாடை மிகுந்த புற நானூறில் இதுமாதிரி ’ரிலாக்ஸ்’ பாட்டுகள், அதுவும் ‘பார்ட்டி சூழ்நிலை’ மிக அபூர்வம்//

  ஆமாம் சொக்கரே! பெருஞ்சோற்றுத் துறைப் பாடல்கள் மிகவும் சொற்பமே!
  ஆனால், அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்களின் படையெடுப்பு, பல வியப்பான சேதிகளைத் தரும்!

  * வீரர்கள், பொதிமாடு மாதிரி ஆயுதம் ஏந்தாமல், குறைந்த ஆயுதங்களை ஏந்தி, நெடுந்தொலைவு நடந்து செல்வது! போர்க்களத்தில் தான் ஆயுத வழங்கல்!
  * படைவீடு = Battle Camp இல் வீரர்கள் எப்படி?
  * வீரர்கள் மட்டுமல்ல! சமையற் காரர்கள், மருத்துவர்கள், ஓலை எழுதுவோர், Emergency தச்சர்/கொல்லர், வண்ணான்(ர்), ….

  அத்தனை பேரும் சாப்பிடும் முறை,
  சில சமயம், வீரர்களை உற்சாகப்படுத்த, மன்னரும் அவங்களோட உட்கார்ந்து சாப்பிடுவது = சமபந்திச் சோறு:))
  அப்பிடிச் சாப்பிடும் போது, மன்னரைப் போலவே, இன்னொருவனுக்கும் வேடம் இட்டு உட்கார வைப்பது (பாதுகாப்பு கருதி)

  அப்படியான ஒரு சாப்பாட்டு/ குடிக்கும் சூழல் தான், இன்றைய பாட்டு = பெருஞ்சோற்றுத் துறை

  • balaraman says:

   //’காபி உறிஞ்சும் கலை’ப்படி, வரிப் பொருளை நான் சொல்லப் போவதில்லை!// இது என்ன புதுவகையான பொருள்கோளா இருக்கே?! :)))

   ஆண்டகை, வளாவல் விளக்கங்கள் அருமை. தொடரட்டும் உன் தமிழ்த்தொண்டு! :)))

 5. anonymous says:

  //மதுவைக் குளிரவைத்துக் குடிக்கும் பழக்கம் அப்போதே இருந்திருக்கிறது//

  :)))
  Chilled Beer!
  Red Wine is not cold! White Wine is served cold

  இன்னும் நிறைய இருக்கு, வகைக்கேத்தாப் போல, எதைச் சில்லு ன்னு குடிக்கணும், எதைச் சில்லாமக் குடிக்கணும்-ன்னு:))
  ஆனா, நான் சொல்ல மாட்டேன்! எனக்கு ஒன்னுமே தெரியாது! Me & Murugan are good boys!:)
  ——————–

  சங்க இலக்கியத்தில், நிறையவே மது வகைகள்!
  சில பெயர்களை மட்டும் மேலே குடுத்திருந்தேன்!

  சில = உயர் குடி மது வகைகள்
  சில = லோக்கல்:)
  சில = விலங்குகளுக்குக் குடுக்க, காய்ச்சும் வகைகள்! (யானை க்கு குடுத்து, போரில் நடத்தும் வழக்கம்)

  சில = இல்-அடு-கள்; அதாச்சும், வீட்டிலேயே காய்ச்சலாம்:))
  அரிசிக் கள், பூந் தேன் = இதெல்லாம் பெப்சி, சர்பத் வகைகள் போல! போதை வராதாம்!
  ———————

  * அப்பிடியே குடிச்சா = அடு கள், தெளிவு
  * ஊற வச்சிக் குடிச்சா = தேறல்
  (பனை மரம் பின்னூட்டத்தில் தெளுவு ன்னு சொன்னேனே, அதான் இந்த = தெளிவு)

  * பாளையில் இருந்து எறக்கினா = கள்
  * பழ வகைகளில் ஊற வச்சா = பிழி

  * Low Alcohol = மட்டு (கம்மியா இருப்பதை மட்டு-ன்னு சொல்றோம்-ல்ல? மட்டு மரியாதை இல்ல??:))
  * High Content = மகிழ்:)
  * Flavored Wine கூட இருக்காம்! பேரு மறந்து போச்சி! தேடிச் சொல்லுறேன்!

  • anonymous says:

   சங்க காலத்தில், பெண்கள் மது அருந்துவதும், “ஈனச்” செயலாகப் பார்க்கப்படவில்லை!

   அதியமான், சிறிய கள் எமக்கு ஈயும், பெரிய கள், எமக்கீந்து தாம் குடிக்கும்-ன்னு பாடுறா ஒளைவைப் பாட்டி! (Note the word: பாட்டி):)
   dei muruga! u shd have asked சுட்ட பீர் வேண்டுமா? சுடாத பீர் வேண்டுமா?:)))
   ——————-

   ஆண்கள் – பெண்கள் ன்னு பாகுபாடு இல்லை! ஒரு வித “ஈனத்தனம்” ஏற்றப்படவில்லை! அவரவர் நிலைகளுக்கு ஏற்ப social drinking
   * போர் என்றால் = வெறிக்கு, Hi content
   * இல்லம் என்றால் = மகிழ்ச்சிக்கு, Light content…அவ்ளோ தான்!

   உடனே, தமிழாள் எல்லாம் குடிகாராளா இருந்திருக்காள் ன்னு முடிவு கட்டிறாதீக:))
   Pl Note: This was only social drinking & NOT மொடக் குடி or டாஸ்மாக்!

   குடிக்கிறவன் எல்லாம் அயோக்யன் ன்னு சமயவாதிகள் காலத்தில் தான் ரொம்ப பரப்பி விட்டு….ஆனால், திரை மறைவில் ஆதீன ஆட்டங்கள்:)
   இதுக்கு, சங்க காலப் பழக்கம் எவ்வளவோ மேல்!
   கள்ளுண்ணாமை என்பதும் அறமாகக் கொண்ட அறவோர்களும் உண்டு!

  • anonymous says:

   சொக்கரே,
   On a serious note….
   நீங்க ஏன் சங்க-இலக்கியக்-கள் பற்றி ஒரு நூல் எழுதக் கூடாது?

 6. 292. சினவல் ஓம்புமின்!

  292. சினவல் ஓம்புமின்!

  பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார். விரிச்சியூர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். அரசனுக்காக விரிச்சி கூறிய பெண் ஒருத்திக்கு அரசன் இவ்வூரை நன்கொடையாக வழங்கியிருக்கக்கூடும் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். நன்னானாகனார் என்று அழைக்கப்பட்ட மற்றொரு புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் விரிச்சியூர் நன்னாகனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
  பாடலின் பின்னணி: ஒருகால், உண்டாட்டு ஒன்று நடைபெற்றது. அவ்விடத்து, வீரன் ஒருவன் முறை தவறி, அரசனுக்குக் கொடுத்த கள்ளைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கூறி வாளைக்கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் செயலால், அங்கிருந்தவர்கள் சினமுற்றனர். அதைக் கண்ட புலவர் விரிச்சியூர் நன்னாகனார், “அவ்வீரன் கள் குடிப்பதில் மட்டும் முந்திக் கொள்பவன் அல்லன்; அவன் போரிலும் அப்படித்தான். ஆகவே, அவன் மீது சினம் கொள்ள வேண்டா.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

  திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.

  துறை: பெருஞ்சோற்று நிலை. போருக்குச் செல்லும் அரசன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்குப் பெரிய விருந்தளித்தல்.

  வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
  யாம்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி
  வாய்வாள் பற்றி நின்றனென் என்று
  சினவல் ஓம்புமின்; சிறுபுல் லாளர்!
  5ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
  ”என்முறை வருக” என்னான்; கம்மென
  எழுதரு பெரும்படை விலக்கி
  ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

  அருஞ்சொற்பொருள்:

  1. ஏந்திய = எடுத்த; தீ = இனிமை; தண் = குளிர்ந்த; நறவம் = மது. 2. முறை = வரிசை, ஒழுங்கு; வளாவல் = கலத்தல். 3. வாய்வாள் = தப்பாமல் வெட்டும் வாள். 4. ஓம்புதல் = தவிர்தல்; புல்லாளர் = குறைந்த ஆண்மையுடைவர்கள் ( வீரம் குறைந்தவர்கள்). 5. ஈண்டு = இவ்விடம். 6. கம் – விரைவுக் குறிப்பு.

  கொண்டு கூட்டு: சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவன் ஆயின், ”என்முறை வருக” என்னான்,கம்மென விலக்கி நிற்கும் ஆண்தகை யன்னே எனக் கூட்டுக.

  உரை: ”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த கள்ளை நாங்கள் முறைப்படிக் கலந்து கொடுத்தோம்.இவன், அதை மறுத்துத், தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்” என்று அவன் மீது சினம் கொள்ளாதீர்கள். வீரத்தில் அவனைவிடக் குறைந்தவர்களே! இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல் போர்க்களத்திலும் செய்வான்; ”எனக்குரிய முறை வரட்டும்.” என்று காத்திருக்காமல், விரைந்து முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி அங்கே நிற்கும் வீரம் (ஆண்மை)உடையவன் அவன் என்பதை அறிவீர்களாக.

  சிறப்புக் குறிப்பு: “அரசனுக்கு முன்னதாக, எனக்குக் கள்ளைத் தருக.” என்று கூறியவன் வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன். அவன் போர்க்களத்தில் விரைந்து சென்று எதிர்த்துவரும்பெரும்படையை விலக்கிப் போரிடும் பேராண்மையுடையவன். அவன் சிறப்பை அறியாமல் அவன் மீது சினம் கொண்டவர்களின் அறியாமையைக் கருதி, அவர்களைச்”சிறுபுல்லாளர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

  Posted by முனைவர். பிரபாகரன் at 2:45 PM
  We have a Tamil Illakiya Research Team in Washington DC. We have been leraning Purananuru for the last 4 years and completed 360 peoms.

  • anonymous says:

   //We have a Tamil Illakiya Research Team in Washington DC. We have been leraning Purananuru for the last 4 years and completed 360 peoms//

   அருமை! – கூடி இருந்து தமிழ் குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

   நாஞ்சில் பீட்டர் ஐயா, ஒரு கேள்வி
   ஏன் புறநானூறு மட்டும்? குறுந்தொகை போன்ற அகப்பாடல்களைத் தவிர்ப்பது ஏனோ?:)

 7. anonymous says:

  Statutory Warning to all my comments here:
  1. Habitual Drinking is Injurious to health; Drink Responsibly:)))
  2. Dont conclude that I am a drinker; I like to drink my murugan, more than anything else:)
  வாழி நலம் சூழ….

 8. நன்றி கேயாரெஸ் (பேர் போட மாட்றீங்களே, நீங்க தானே?)

  சிறுபுல்லாளர் அப்டீங்க்றதை பாரதியோட சிறுபுல்லென மதிக்கிறேன் மாதிரி மொழி பேத்துட்டேன் 😳

  புல்லுதல் > புல்லாளன் அப்படின்னு அப்புறம் தான் தெரிஞ்சது.

 9. Suresh says:

  சொக்கர் , dagalti ,KRS, மற்றும் Naanjil Peter , நன்றிகள் பல .

 10. நானும் உள்ளே வரலாமா? 🙂

  எல்லா காலத்திலேயும் ஆண்கள் மது அருந்தித் தான் ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தனர் போலும்! ஆண்களுக்கு போதை, புறப் பொருட்களால் தான் வரும் போலிருக்கிறது 🙂
  இதில் KRS, matrimonial விளம்பரங்களில் வரும் light social drinker என்ற விளக்கம் போல // உடனே, தமிழாள் எல்லாம் குடிகாராளா இருந்திருக்காள் ன்னு முடிவு கட்டிறாதீக:))
  Pl Note: This was only social drinking & NOT மொடக் குடி or டாஸ்மாக்! // என்று வக்காலத்து வேற! 🙂

  அவசர குடுக்கை எல்லாத்திலேயும் அவசரக் குடுக்கையா இருப்பான் என்கிறார் விரிச்சியூர் நன்னாகனார். அதனால் சொக்கர் தலைப்பின் படி இவன் பந்திக்கு மட்டும் முந்துபவன் அல்லன் படைக்கும் முந்துபவன் தான். ஆக இவனுக்கு வந்து சேர வேண்டிய மது பானத்தை விரைவில் கொடுத்து அவன் கோபத்தைத் தணிய வைக்கச் சொல்கிறார் புலவர். ஏனென்றால் அவன் தான் முதல் மரியாதைப் பெற தகுதியானவன்!

  குடித்துக் கும்மாளமிடும் போர் வீரர்கள் நடுவில் ஒரு சின்ன பிணக்கினால் ஏற்படும் சச்சரவு (brawl) இந்தப் பாடலில் நன்கு சித்தரிக்கப் பட்டிருகிறது. ரொம்ப வித்தியாசமானப் பாடல்.

  amas32

  • anonymous says:

   //இதில் KRS, matrimonial விளம்பரங்களில் வரும்//

   ha ha ha!
   me no viLambarams:)

   //ஆண்களுக்கு போதை, புறப் பொருட்களால் தான் வரும் போலிருக்கிறது 🙂 //

   haiyo! இது அபாண்டமான குற்றச்சாட்டு!
   இதான் பெண்ணாதிக்கம்:))))
   அம்மா…நீங்களுமா?:)

  • அவசரக் குடுக்கை? குடுக்கையில் என்ன இருப்பதால் அவசரம் :).

   ஆமாம், அவசரக் குடுக்கை என்ற சொல் எப்படி வந்தது? (குடுக்கையிலிருப்பதை முண்டியடித்து முகர்ந்து குடிக்கச் செல்வதாலா?)

   முருகா, பொருள் தருகா!

   • aaga, just now seeing! sorry sire:)
    (@anandraaj04 put link to this post on twitter today; then i came and saw yr question)

    குடுக்கை = குடுவை
    சுரைக்காயை, குடுவை/ குடுக்கை போல் கட்டிக்கிட்டு, நீச்சல் பழகக் குதிப்பாங்க-ல்ல? அதுவே!

    அவசரக் குடுக்கை = நீச்சல் பத்தி ஒன்னுமே தெரியாம, வெறுமனே சுரைக் குடுக்கை-யைக் கட்டிக்கிட்டு குதிச்சீறலாம் -ன்னு அவசரப்படுபவன்!

 11. நாளும் அகம், புறம், சமயம், தனிப்பாடல் என பலதமிழ் (பழந்தமிழ்)ப் பாட்டில்களை (பாடல்களை 😉 வளாவி வளாவி வழங்கும் சொக்கருக்கு நன்றி.

  கண்டோர்க்குங் குறையுண்டோ? கலந்து கொண்டேன்
  கள்ளுண்ட வண்டுபோ லாயி னேனே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s