நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை

ஓட்டியவா, என் கண் ஓடியவா, தன்னை உள்ள வண்ணம்

காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,

ஆட்டியவா நாடகம், ஆடகத் தாமரை ஆர் அணங்கே!

நூல்: அபிராமி அந்தாதி (#80)

பாடியவர்: அபிராமி பட்டர்

தங்கத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் உயர்வானவளே, அபிராமி அன்னையே,

இப்போதெல்லாம் என்னைச் சுற்றி நடப்பது ஒவ்வொன்றும் மிகுந்த ஆச்சர்யம் தருவதாகவே இருக்கிறது!

முதலில் நீ என்னை உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கோண்டாய், பின்னர், என் வணங்குதலை ஏற்று என்னுடைய கொடிய வினைகளை ஓட்டினாய், என்முன்னே விரைவாக எழுந்தருளினாய், உன்னுடைய திருவுருவத்தை உள்ளபடி காண்பித்து அருளினாய், அதைக் கண்ட என்னுடைய கண்ணும் மனமும் மகிழ்ச்சியில் மிதந்தது… இதெல்லாம் எளியோனை முன்வைத்து நீ நடத்துகிற திருவிளையாடல்தானே?

துக்கடா

 • ’நீ என்னை வைத்து நாடகமா நடத்துகிறாய்?’ என்கிறார் அபிராமி பட்டர், இது கோபம் அல்ல, ‘இந்த நாடகம் திரை விழாமல் என்றைக்கும் தொடர்ந்து நடக்கட்டும்’ என்கிற வேண்டுதல்!
 • அபிராமி பட்டர் வெறும் பக்தரல்ல, அம்மை நடத்தும் நாடகத்துக்கு Scene By Scene One Line போடுகிறார், அதுவும் சரியான Sequenceல்:
 • காட்சி 1 : அபிராமி பட்டர் அன்னையின் பக்தர்கள் கூட்டத்தில் சேர்கிறார், வழிபடுகிறார்
 • காட்சி 2 : அவரது பழைய வினைகள் தீர்கின்றன
 • காட்சி 3 : அவர் மனம் உருகிப் பாடும் பக்தி அன்னைக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
 • காட்சி 4 : அன்னை அவருக்குக் காட்சி தருகிறாள்
 • காட்சி 5 : அதனால் அபிராமி பட்டரின் கண்களும் மனமும் களிக்கின்றன
 • அந்த ஐந்தாவது காட்சியின் வரிசையைக் கவனியுங்கள், கண்கள், அப்புறம்தான் மனம், என்னதான் மனத்தால் ஒன்றினாலும், முதலில் பார்ப்பது கண்தானே, அதற்குதான் முதல் சந்தோஷம் (இது காதல் பாட்டா, அல்லது பக்திப் பாட்டா என்று சந்தேகம் வருகிறதா? போய் ‘குணா’ படம் பாருங்கள், பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்கும் :>)
 • இந்தப் பாடலில் வருகிற கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா போன்ற சொற்களை முறையே கூட்டியவாறும் (கூட்டியதும்), ஓட்டியவாறும் (ஓட்டியதும்), ஓடியவாறும் (ஓடியதும்) என்று புரிந்துகொள்ளவேண்டும், இவை பாடலின் சந்தத்துக்கு ஏற்ப ஈறு (இறுதிப்பகுதி) கெட்டு அமைந்துள்ளன

325/365

Advertisements
This entry was posted in அந்தாதி, அபிராமி, அபிராமி அந்தாதி, அபிராமி பட்டர், சினிமா, பக்தி. Bookmark the permalink.

6 Responses to நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

 1. யம்மா, தாயி, அபிராமீ, ஆத்தா….
  கும்புட்டுக்கறேன்-ம்மா!

  இந்தச் சொக்கரு + பட்டரு, ரெண்டு பேரும் ஒன்னைய நல்லா ஏமாத்துறாங்க!
  ஒன்னைப் பாடுறாப் போல சீன் போட்டுட்டு, ஒன் புருசனைப் பாடுறாங்களா? நீயே check பண்ணிக்கோ தாயீ :))

  >கூட்டியவா, ஓட்டியவா, ஆட்டியவா<
  = இதெல்லாம் ஆண்பாலா? பெண்பாலா?:)))

  • சரி….தமிழ் மைதானத்தில் எல்லாரும் கொஞ்சம் ஓடிப் புடிச்சி விளையாடுவோம்:))
   இன்னும் ஒரு மணி நேரத்தில், ஒரு இனிமையான நாளை நோக்கிக் காத்திருக்கேன்:)
   —————-

 2. சொக்கரு, கீழே ஒரு துக்கடாச் சொல்லி இருக்காரு! கவனிங்க!

  //இந்தப் பாடலில் வருகிற கூட்டியவா, ஓட்டியவா, ஓடியவா போன்ற சொற்களை முறையே கூட்டியவாறும் (கூட்டியதும்), ஓட்டியவாறும் (ஓட்டியதும்), ஓடியவாறும் (ஓடியதும்) என்று புரிந்துகொள்ளவேண்டும்//

  இதையே என் நண்பர் குமரனும் ஒரு முறை சொன்னாரு!
  அவர் கிட்ட கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டேன்! டேய் ரவீ்….எப்பிடிறா இப்பிடி யோசிக்கிற?-ன்னுட்டாரு:))
  ————-

  கூட்டியவா றென்னைத் தன் அடியாரில், கொடிய வினை
  ஓட்டியவா றென்கண்ணோ டியவாறு, தன்னுள்ள வண்ணம்
  -ன்னு புணர்ச்சியால், சேர்த்து எழுதியிருந்தாலும், சந்தம் வந்திருக்கும்….
  ஆனா அபிராமி பட்டர் அப்படிச் சேர்த்து எழுதாம, ஈறு கட்டிங்!:) இங்கே மட்டும்! Why?:))
  ————-

 3. சரி, நாம எல்லா வரியிலும் “ஆறு, ஆறு” ன்னு சேர்த்துப் பார்ப்போமா? பொருள் வருதா?-ன்னு பாருங்க!

  கூட்டியவாறு என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
  ஓட்டியவாறு என் கண் ஓடியவாறு, தன்னை உள்ள வண்ணம்
  காட்டியவாறு, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவாறு,
  ஆட்டியவாறு நாடகம் ஆடகத் தாமரை ஆர் அணங்கே!

  எல்லாமே Present Continuousல இருக்கு! வாக்கியம் முடிஞ்சா மாதிரி தெரியலை! கூட்டியவாறு….ஓட்டியவாறு….ஆட்டியவாறு….என்ன செஞ்சீங்க? அதைச் சொல்லலையே!
  கூட்டியவாறு….கூடினேன்
  ஓட்டியவாறு….ஓடினேன்
  ஆட்டியவாறு….ஆடினேன் ன்னு வரவில்லை! ஒரு sentence ending அமையவில்லை!
  அதனால் “ஆறு” என்ற விகுதியை நாமாகச் சேர்க்கலாமா தெரியவில்லை!:)

  கூட்டியவா, ஓட்டியவா ன்னு எடுத்துக்கிட்டா, வாக்கியம் நிறையும்! அவரை(ளை) விளித்து, வாழ்த்துவதாக அமையும்!

  என்ன சொல்ல வருகிறார் அபிராமி பட்டர்?:) அபிராமி அந்தாதி உரைநூல் எடுத்துப் பார்த்தாத் தெரியும்;))
  Who is the கூட்டியவா? = he or she?:)) Have fun!
  ————

  • ஆனந்தன் says:

   அவா, இவா, பெரியவா என்று சிலர் பேசுவார்களே, அது போல் பாடுகிறாரோ அபிராமிப்பட்டர்?! அன்னல் அது பன்மைக்கு வரும். பெண்களைக் கொஞ்சம் மரியாதை கொடுத்துக் குறிப்பிடும்போதும் அவ சொன்னா, இவ வந்தவ..இப்படிக் கூறுவதுண்டு, நம்மூரில்!

 4. அடியவர்களில் ஒருவராக இருப்பதே பெரும் பாக்கியம். அது நடந்ததும் அவள் அருளாலே. பின் அபிராமி பட்டரின் இறைஞ்சுதலைக் கேட்டு முன் வினைகளை ஓட்டி விடுகிறாள்.

  அவருக்கு தயைக் கூர்ந்து திருக் காட்சியும் கொடுக்கிறாள். என்ன ஒரு திவ்ய காட்சியாக அது இருந்திருக்கும். அதைக் காண அவரின் கண்கள் என்ன தவம் செய்திருந்ததோ! கண்ணிலிருந்து இறங்கி மனதில் நிலைத்து நிலையான ஆனந்தத்தை அருளுகிறாள் ஒளி வடிவமான அன்னை.

  நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என்பது போல அம்பாளின் நாடகத்தில் அபிராமி பட்டார் பங்கு பெற்று பேருவகைப் பெறுகிறார்!

  நாமும் தான் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம் நாடகத்தின் காட்சி அமைப்பு வேறாக உள்ளது!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s