ஓவியம் தவிர்

ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்

தேவியை யான் அழைத்திட, ‘ஆண் சித்திரமேல் நான் பாரேன்,

பாவையர்தம் உருவம் எனில் பார்க்க மனம் பொறேன்’ என்றாள்,

காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால்

நூல்: நீதி நூல் உரை

பாடியவர்: மாயூரம் வேதநாயகம் பிள்ளை

முன்கதை

மதுரையில் திருமலை நாயக்கர் ஓர் அழகிய மாளிகையைக் கட்டினார். அதன் சுவர்களில் அருமையான ஓவியங்கள் வரையப்பட்டன. அதுவே ஓர் ஓவியக் கண்காட்சிபோல் தெரிந்தது.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட இளைஞன் ஒருவன், தன்னுடைய மனைவியிடம் செல்கிறான், ‘நாம் சென்று அந்த ஓவியங்களைப் பார்த்து வரலாமா?’ என்று அழைக்கிறான்.

உரை

’திருமலை நாயக்கர் மாளிகையின் நீண்ட சுவர்களில் பல அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கிறதாம், நாம் போய்ப் பார்த்துவிட்டு வரலாம், புறப்படு.’

‘ம்ஹூம், நான் வரவில்லை.’

‘ஏன்? உனக்கு ஓவியங்களைப் பிடிக்காதா?’

‘பிடிக்கும், ஆனால் அங்கே ஆண் ஓவியங்கள் இருக்கும், அவற்றை நான் பார்க்கமாட்டேன்.’

’ஒருவேளை, அங்கே பெண் ஓவியங்கள்மட்டுமே இருந்தால்?’

’பெண் ஓவியங்களை நீங்கள் பார்த்து ரசிப்பீர்கள், அதைக் காண என் மனம் பொறுக்காது.’

அடடா, சிவந்த விழிகளைக் கொண்ட இந்தப் பெண்ணின் கற்பு, மலை போல வலுவானதுதான்!

துக்கடா

 • இந்தப் பாடலைப் படித்துவிட்டு ‘இதுதான் கற்புக்கு இலக்கணமா?’ என்று யாரும் அடிக்க வரவேண்டாம், ஒரு சுவையான கற்பனை என்ற அளவில்மட்டும் ரசித்தால் நல்லது :>
 • வேதநாயகம் என்ற இந்தப் புலவர் பற்றி மேல்விவரம் தெரியவில்லை. ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘தமிழ் விருந்து’, மு. வரதராசனார் எழுதிய ’இலக்கியத் திறன்’ ஆகிய நூல்களில் இந்தப் பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. தமிழின் முதல் நாவலாசிரியர் இவர்.
 • மாயூரம் வேதநாயகம் பிள்ளை பற்றி மேலும் : http://nailango.blogspot.in/2010/02/2_20.html
 • நீதி நூல் உரை முழுமையாக உரையுடன் வாசிக்க : http://www.tamilvu.org/library/l61A0/html/l61A0ind.htm
 • இது யாரோ ‘வேதநாயகம்’ என்பவர் எழுதிய தனிப்பாடல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அப்படியே பதிவிலும் எழுதியிருந்தேன், அதில் திருப்தி அடையாமல் தேடிக் கண்டுபிடித்து நூல் பற்றியும் ஆசிரியர் பற்றியும் முழு விவரங்கள் தந்த கே ஆர் எஸ் ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி

324/365

Advertisements
This entry was posted in அகம், ஊடல், காதல், தனிப்பாடல், நாடகம். Bookmark the permalink.

18 Responses to ஓவியம் தவிர்

 1. அனானியின் அசரீரிக் கேள்வி ஒலிப்பதற்கு முன் நானே கேட்டுவிடுகிறேன்.

  ‘காவி விழி’ மங்கை என்றதேன்?

  காவி mascara தீட்டியதாலா?

  ‘என் இறைவன் அவனே அவனே’ எனத் தன் காதலன் ஒருவனைத்தவிர வேறோருவனையும் பாரேன் என்ற கற்பெனும் துறவறத்தாலா?

  சிவந்த விழிகள் என்றால் விழிகள் ஏன் சிவந்தன?

  நாணத்தாலா? (‘ச்சே என்னங்க, அதயெல்லமா என்னப் பாக்கச்சொல்லிக்கிட்டு’). நாணத்தால் கன்னம் சிவக்கும், கண்களுங்கூடவா?

  ஓவியத்தில் பெண்ணிருந்து அதை அவன் பார்த்துக்கொண்டிருப்பானோ என்ற ஊடலிலா? (‘அங்கென்ன வாயப் பொளந்து பாத்துக்கிட்டு’). இலக்கியக் காட்சிகளில் பெண் ஊடல் கொண்டால், மேனி பசப்புறும். ஆனால், இலக்கியங்களில் ஊடினால் கண் சிவக்கும் காட்சிகள் உண்டா?

  நடைமுறையில், நீள்சுவர்களில் படர்ந்திருக்கும் ‘நீல’ (!) நாயகிகளை நின்று பார்ப்பவனைக் காதலி முனிந்தால் அவள் கண் மட்டும் சிவக்காது, அவன் கன்னமுங்கூட.

  சிவகுமாரா…,ஏதேனும் செவ்விளக்கம் உண்டா?

  • என். சொக்கன் says:

   ஊடல் கொண்டு (பொய்யாக) அழுதாலும் கண் சிவக்குமல்லவா? :>

   • ஊடல் அழுகாச்சி பற்றி மறந்துவிட்டேன். ஏனோ அவள் ஊடல் கோபமும் நம் கன்னச்சிவப்புந்தான் திரும்பத்திரும்ப flash ஆகிக் கொண்டுள்ளது மனதில். 😉

   • anonymous says:

    இது ஆணாதிக்கம்:)
    ஊடலில் பெண்கள் அழுவது, ஒமக்கு “பொய்” என்று படுகிறதோ?:))

  • உங்க பேர் போடாம அனானி என்று போட்டிருந்தீங்கனா அவர் தான் என்று நம்பியிரோப்போம். அதே எழுத்து நடை! 🙂

   amas32

   • அறியாமலே நடையில் அனானியின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். அப்படியிருந்தால், தமிழ்க்கடவுள் முருகனுக்கு நன்றி.

   • anonymous says:

    no no no! this is kanthasaamy ayya in style! so nice!:)

  • anonymous says:

   //இது யாரோ ‘வேதநாயகம்’ என்பவர் எழுதிய தனிப்பாடல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அப்படியே பதிவிலும் எழுதியிருந்தேன்,

   அதில் திருப்தி அடையாமல் தேடிக் கண்டுபிடித்து நூல் பற்றியும் ஆசிரியர் பற்றியும் முழு விவரங்கள் தந்த கே ஆர் எஸ் ரவிசங்கர் அவர்களுக்கு நன்றி//

   :))))
   நானும் @kryes க்கு நன்றி சொல்லிக்கிறேன்! ரொம்ப நன்றி-ங்க!

   மாயூரம் வேதநாயகம் பிள்ளை = எனக்கு முதல் அறிமுகம், பள்ளி மனப்பாடச் செய்யுளில்!
   சிறந்த கிறித்துவத் தமிழ்க் கவிஞரு! பிரதாப முதலியார் சரித்திரம் = தமிழின் முதல் நாவலை எழுதியவரு!

   அவரைப் போயி, “யாரோ வேதநாயகம்”, “தனிப்பாடல்” ன்னு சொல்லலாமே சொக்கரே?:)) அதான்!!

 2. சொக்கரே!

  ‘ஓவியம் தவிர்’ – இம்மாதிரி அட்டகாசமான தலைப்புகள் எப்படித்தான் உங்களுக்கு வருகிறதோ? ரூம் போட்டு உக்காந்து யோசிப்பீங்களா, இல்ல, ஒரு ‘flow’ தானா வந்திருமா? இம்மாதிரியான தலைப்புகளைப் பிரசவிப்பதன் வலியை எடுத்துரைக்க இயலுமா?

  நன்றி

  • I think he should write a post about his experiences on #365paa later. He can shed light on a lot of interesting facts like the one you have mentioned 🙂
   amas32

   • anonymous says:

    The making of the Paa!
    அம்மாவை வழிமொழிகிறேன்!
    நான் ஒரு சோம்பேறி என்று சொக்கர் தப்பிக்க முடியாதபடி, பிடி வாரண்ட்டும் போட்டுருவோம்:))

  • என். சொக்கன் says:

   நீங்க வேற, என் எடிட்டர்ஸைக் கேளுங்க, எனக்குத் தலைப்பு வைக்கவே வராது, செம மொக்கையா யோசிப்பேன், அவங்கதான் சொல்லிக்கொடுத்தாங்க பொறுமையா, நிறை இருந்தா அவங்களுக்கு, குறை இருந்தா எனக்கு!

 3. காவி என்பதற்கு கள் என ஒரு பொருள் தருகிறது சென்னைப் பேரகரமுதலி (http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:321.tamillex).

  காவி: , n. perh. காவு-. Toddy; கள். (பிங்.)

  அப்படியென்றால் காவி விழி என்றால் போதை தரும் விழி, கிறக்கம் தரும் விழி.

  பாடலில் காவுவிழி என்றிருந்தால் கூடப் பொருந்தியிருக்கும். காவு கொள்ளும் விழி. காதலனைக் கவுக்கும் விழி..

  ம்ம்ம்..

 4. anonymous says:

  //‘காவி விழி’ மங்கை என்றதேன்?
  காவி mascara தீட்டியதாலா?//

  I like this Mascara:)
  இப்ப தான் விதம் விதமான shade களில் கிடைக்குதே! காவியிலும் கிடைக்குதோ என்னவோ?:)

  Jokes apart….
  காவி விழி-ன்னு இளங்கோவும் சொல்லுவாரு!

  விழிக்
  காவி உகுநீரும், கையில் தனிச்சிலம்பும்
  ஆவி குடிபோன அவ்வடிவும், பாவியேன்
  ன்னு கண்ணகி, வழக்குரை காதை!

  காவி = நீல மலர்
  குவளை மாதிரி, ஆனா நீலம் வேற! Blue Shaded Lotus மாதிரி-ன்னு வச்சிக்குங்களேன்!
  கண்ணின் உள்ளே இருக்கும் கருவிழிக்கு = இந்தக் கரு நீல மலரை உவமை சொல்லுதல், சங்கத் தமிழிலேயே வாடிக்கை! Itz for that heavenly blue!

  சிவபெருமானை = காவிக் கண்டன் ன்னு தேவாரம் பேசும்! = Blue Shaded Neck!
  ————–

  காவி = is not red eye!
  Itz Saffron Color!

  But , காவி = கள்ளும் கூட….
  கதறி அழும் கண்ணகியிடம் கள்-ன்னு எடுக்க முடியாது!
  ஆனா, இந்தப் பாட்டில் ரெண்டு பொருளுமே எடுத்துக்கலாம்! ஏன்னா, இந்தப் பாட்டில் அந்தக் கணவன் – மனைவியிடையே ஒரு மெல்லிய குறுகுறு Romance ஓடுது! I like it:))

 5. anonymous says:

  இந்தப் பாட்டுல ஒரு அழகான சொல்லாட்சி இருக்கு….கவனிச்சீங்களா?
  = “கற்பு வெற்பு”
  = காவி விழி மங்கை இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால்

  கற்பு எனும் வெற்பு
  Rhymingly beautiful!
  கற்பு = மலை போல இருக்காம்!
  ——————-

  மலை = நான் தான் மலை ன்னு சொல்லிக்காது! மரத்துக்காச்சும் இலை அசைவு இருக்கும்! மலைக்கு அசைவே இல்ல!
  ஆனா, சத்தம் போடாமலேயே, மலை எங்கிருந்தாலும் தெரியும்! = வெள்ளிடை மலை!

  கற்பும் அது போலத் தான்! = கிட்ட இருக்கோமோ, தூர இருக்கோமோ, தானாவே தெரியும்! தானாவே பரிமளிக்கும்!
  சொல்லணும் ன்னு அவசியம் இல்ல!

  • anonymous says:

   விதை போட்டுச் செடி வளர்வதைப் பாத்துருக்கோம்!
   மீன் தொட்டியில் மீன் வளர்வதைப் பாத்துருக்கோம்!

   ஒரு மலை வளர்வதைப் பாத்திருக்கோமா?

   மண்ணு கெட்டியானா கல்லு; கல்லெல்லாம் ஒன்னாச் சேர்ந்தா மலை; பாறைகள் உருவாகும் பரிமாணம் ன்னு படிச்சிருக்கோம்!
   ஆனா, ஒரு மலை உருவாவதைக் கண்ணால் பாத்திருக்கோமா? பார்க்கத் தான் முடியுமா?

   அதே போலத் தான் = கற்பு!
   அதுக்கு definition எல்லாம் குடுக்க முடியாது! எப்படி அந்த உணர்ச்சி ன்னும் தெரியாது!
   ஆனா இருக்கு = மலை போல இருக்கு!
   ———————-

   அது பெண்ணுக்கு மட்டுமே ன்னு முத்திரை குத்தவும் முடியாது!
   ஆணுக்கும் கற்பு உண்டு!
   ஆழ்ந்த அன்பால் விளைவது = கற்பு!
   அதுக்கும் உடம்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல!

   “கற்பழித்தான்” என்ற சொல்லே எனக்குப் பிடிப்பதில்லை!
   கற்பு மலைய்யா!
   அதை எப்படி அழிக்க முடியும்? எத்தனை குண்டு போடுவ?
   கொழுப்பெடுத்துப் போயி, உடம்பால் ஏதோ பண்ணிட்டான் ன்னா = வன்புணர்ந்தான் ன்னு சொல்லிட்டுப் போங்களேன்! அதென்ன = கற்பு+அழிப்பு?

 6. பெண் எப்பொழுதும் தன் கணவன் கற்புடையவனாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறாள். முன் காலத்திலும் சரி இப்பவும் சரி கற்புக்குக் களங்கம் வந்துவிட்டது என்று யாராவது குக்குரலிட்டால் அது பெண்ணின் கற்பைப் பற்றியதாகவே இருக்கும். ஆணின் ஒழுக்கமின்மை வீர தீர பிரதாபமாகத் தான் பாடல்களிலும் கதைகளிலும் பெருமைப் படுத்தப் படுகிறது.

  ஆனால் இந்த அழகிய கண்களை உடைய பெண் தன் விருப்பத்தைக் கணவனிடம் சொல்லும் விதம் நாகரீகமாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.

  விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே….என்ற பாடலில் வருவது போல கண்ணில் தான் காதலும் காமமும் தொடங்குகிறது. அதனால் புத்திசாலி மனைவி அதற்கு தடா போடுகிறாள்.

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s