குதிரையை நம்பினோர் கைவிடப்படார்

விதையர் கொன்ற முதையல் பூழி,

இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்

கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை,

அரலை அம் காட்டு இரலையொடு வதியும்

புரவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே!

‘எல்லி விட்டன்று வேந்து’ எனச் சொல்லுபு

பரியல்; வாழ்க, நின் கண்ணி! காண் வர

விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா

வண் பரி தயங்கை எழீஇ தண் பெயல்

கான் யாற்று இகுமணல் கரை பிறக்கு ஒழிய

வெம் விருந்து அயரும் மனைவி

மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!

நூல்: நற்றிணை (#121)

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார்

சூழல்: முல்லைத் திணை, பணி நிமித்தம் மனைவியைப் பிரிந்து வருகிறான் ஒரு வீரன். வந்த வேலை முடிந்தது. கிளம்புகிறான். மனைவியைப் பார்த்து ரொம்ப நாளாயிற்றே என்று அவன் முகத்தில் வாட்டம். அதைப் பார்த்த தேர்ப்பாகன் அவனிடம் சொல்கிறான்

’சுருக்’ விளக்கம்:

என்னய்யா? ஆஃபீஸ்ல லேட்டாயிடுச்சா? வொய்ஃபைப் பார்த்து ரொம்ப நேரமாச்சேன்னு வருத்தப்படறியா? கவலையே வேணாம், நம்ம தேர்ல ஏறி உட்காரு, இந்தக் குதிரை செம ஃபாஸ்டு, கண் மூடித் திறக்கறதுக்குள்ள உன்னை உன் பொண்டாட்டி மடியில கொண்டுபோய்ச் சேர்த்துடறேன்!

முழு விளக்கம்

வீரனே, நீ வாழ்க, நீ அணிந்துள்ள அழகிய மாலையும் வாழ்க!

ஆயர்கள் நடவு செய்வதற்காகப் பழங்காட்டை வெட்டித் திருத்துகிறார்கள், அதனை முறைப்படி உழுது, விதைக்கிறார்கள்.

கொஞ்ச நாள் கழித்து, அந்தப் புழுதி நிலத்தில் பசுமையான இலையைக் கொண்ட வரகுப் பயிர் விளைகிறது. அதன் பிளவுபட்ட கதிரை அழகிய இளம் பெண்மான் ஒன்று கொறிக்கிறது. பின்னர் ’கொடும்பு’ என்கிற செடியைக் கொண்ட அழகிய காட்டில் ஆண் மானோடு சென்று சேர்கிறது.

அப்படிப்பட்ட முல்லை நிலத்தைச் சேர்ந்தவன் நீ. உன்னுடைய மனைவியும் அந்த ஊர்க்காரிதான். வேலை காரணமாக நீ அவளைப் பிரிந்து வந்துவிட்டாய்.

உடனே திரும்பிச் செல்லவேண்டும் என்பதுதான் உன்னுடைய ஆசை. ஆனால் அரசன் (முதலாளி) அப்படி நினைப்பானா? வந்த வேலை முழுமையாக முடிந்தபின்னர் நேற்று இரவுதான் உன்னை விடுவித்திருக்கிறான்.

அதனால் என்ன? வருத்தப்படாதே, நான் இருக்கிறேன், என்னுடைய தேர் இருக்கிறது, நீ என்னை நம்பாவிட்டாலும், இந்தத் தேரில் கட்டப்பட்டிருக்கிற குதிரையை நம்பு.

இந்தக் குதிரையைப் பார், பரந்த தலையில் அழகிய அணிகலன்களைச் சூடியுள்ள இந்தக் குதிரை மிகச் சிறப்பானது, அதிவேகமாக ஓடக்கூடியது, குளிர்ந்த மழைத்தூறலுடன் கூடிய இந்தக் காட்டாற்றின் மணல் கரையைப் பின்னே தள்ளிவிட்டு விரைவில் உன்னுடைய ஊருக்குச் சென்றுவிடும்.

நாளை காலை, உனக்கு உன் வீட்டில்தான் சுடச்சுட விருந்துச் சாப்பாடு. நன்றாக உண்டபின்னர், மெல்லிய முன்கையை உடைய , மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட உன் மனைவியின் தோளில் நீ சாய்ந்து தூங்கலாம்!

துக்கடா

 • ’விதையர்’ என்பது, விதையைக் கையாளும் உழவர்கள் என்ற அர்த்தத்தில் வருகிறது, கவிஞர், எழுத்தாளர்போல
 • ’கறித்தல்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலப் பதம் Browse 🙂 சும்மா மேய்தல், கொறித்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்

321/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, நற்றிணை, பிரிவு, முல்லை, வர்ணனை. Bookmark the permalink.

15 Responses to குதிரையை நம்பினோர் கைவிடப்படார்

 1. anonymous says:

  ஒருத்தன் வூட்டுக்கு லேட்டாப் போறான்
  டாக்சி டிரைவர், அவன் கிட்ட பேச்சுக் குடுத்து, வேகமாப் போறான்….

  இது ஒரு கவிதையா?
  என்னாங்கடா சங்கத் தமிழ்?:))

  அவ்ளோ தானா இருக்கு சங்கத் தமிழ்ல?:)

 2. anonymous says:

  பாட்டு எழுதியவர் பேரைப் பாருங்க!
  = ஒருசிறைப் பெரியனார்

  அம்மாவின் பொற்கால ஆட்சியில் Jailக்கு போனவரா?:))
  ஏங்காணும்; எங்கிருந்துங்காணும், இப்படிப் பேரைப் புடிக்கிறீரு?:)

 3. anonymous says:

  //இது ஒரு கவிதையா?
  என்னாங்கடா சங்கத் தமிழ்?:))//

  சங்கத் தமிழ் என்பது புராணம் அல்ல!
  நடக்காத ஒன்றை நடந்தவையாகக் காட்டும் பத்துத்தலை, ஆறுமுகம், எட்டுக்கை கதையும் அல்ல!:)

  சங்கத் தமிழ் = மனித உணர்ச்சி! உள்ளத்தின் உண்மையான உணர்ச்சி!

  * காதலி மடியில் தூங்கும் சுகம்
  * காதலன் தோளில் தூங்கும் சுகம்
  – இதை லேசா மனசுக்குள்ள ஓட விடுங்க! எப்பிடி இருக்கு?

  பொதுவா, கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்காது! தோளில் தான் சார்த்தப்பட்டு இருக்கும்!
  எனக்கு, அதைப் பாக்கும் போதெல்லாம்….
  நானே, என் முருகனின் தோளில் சாய்ந்து கொள்வது போல இருக்கும்…..ஏன்னு தெரியல! ஆனா அப்படித் தான் தோனும்:))

  * காதலி மடியில் தூங்கும் சுகம்
  * காதலன் தோளில் தூங்கும் சுகம்
  —————-

  நீங்க ஏதோ ஒரு Projectக்கு வெளியூருக்குப் போயிட்டு, திரும்பி வரீங்க…
  ஆச்சு மூனு மாசம்!
  தினமும் தொலைபேசினாலும்….விமானநிலையத்தில் எறங்கியவுடனே…ஏதோ ஒரு குறுகுறுப்பு…
  அவ கிட்டக்க, இன்னும் இன்னும் நெருங்குறாப் போல ஒரு உணர்வு!

  உங்களை அழைத்துப் போகத் தெரிஞ்ச Driver வராரு!
  அவள் விமானநிலையத்துக்கு வரல! ஏதோ காய்ச்சல்…
  வீட்டுக்குப் போக மூனு மணி நேரம் ஆகும்…..என்ன பேசுவீங்க?:))

 4. anonymous says:

  எடுத்தவுடனேயே அவளைப் பத்திக் கேக்க வெட்கம்:)

  என்ன கணேசு-ண்ணே? செளக்கியமா? மழை பெஞ்சுதா? பாலம் கட்டியாச்சா?…அப்பிடி இப்பிடி ன்னு ஆரம்பிச்சு…

  அவளைப் பற்றிய விசாரிப்புகள்…..
  * நல்லா இருக்காங்களா?
  * இளைச்சிட்டாங்களா?
  * வேளைக்குச் சாப்பிடறாங்களா?
  * வேலைக்கு ஒழுங்கா நீங்க கொண்டு போயி விடுறீங்களா?
  ….

  இத்தனை கேள்விக்கும் நடுவுல….நடுநடு மெளனம்….அவ கிட்டயே மனசுல பேசிக்கறது…
  * என்னடீ வரல Airportக்கு?
  * உன்னை வீட்டில் முதல்ல பாத்தவுடனே என்ன பண்றேன் பாரு?
  * கள்ளி, என்ன காய்ச்சல்? காதல் குளிரா?
  * என்ன செஞ்சி வச்சிருக்கியோ, சாப்பிட?

  * மூனு மாசமா…நான் பட்டினி டீ
  * மவளே, இன்னிக்கி ராத்திரி…நீ அழிஞ்சடீ:))))
  * ஏய்…இதென்ன புதுப் பொண்ணாட்டம் வெட்கம்?:)

  இப்பிடியெல்லாம்,….
  Driver கிட்டயும், உங்க மனசு கிட்டயும் மாறி மாறிப் பேசிக்கிட்டே….
  க்றீச்ச்ச்ச்ச்! வீடு வந்தாச்….
  ——-

  புராணம் இல்லாத இப்பிடியான மன உணர்வுகளைக் காட்டுவதே = சங்கத்தமிழ்!

  • என். சொக்கன் says:

   //எடுத்தவுடனேயே அவளைப் பத்திக் கேக்க வெட்கம்:) என்ன கணேசு-ண்ணே? செளக்கியமா? மழை பெஞ்சுதா? பாலம் கட்டியாச்சா?…அப்பிடி இப்பிடி ன்னு ஆரம்பிச்சு…//

   ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்யமா 😉

   • anonymous says:

    இங்கே தான் ஓய் நீரு நிக்குறீரு:)
    துக்கடால = சங்கப் பாட்டு
    பின்னூட்டுல = சினிமாப் பாட்டு
    :))

 5. anonymous says:

  நற்றிணை = நல்ல + திணை
  (திணை=ஒழுக்கம்)
  = நல்ல முறையில் காதலில்/ காமத்தில் ஒழுகுதல்….

  எட்டுத் தொகை நூல்களில் இதுவே முதல் நூல்!
  அடுத்து குறுந்தொகை!
  இந்தப் பாட்டு = முல்லைத் திணை
  இருத்தலும் இருத்தல் நிமித்தமும்! = அதாச்சும் அவனுக்காக/அவளுக்காக காத்து இருத்தல்!
  ————

  திணைகளில் முல்லையே முதல்! அடுத்து தான் குறிஞ்சி!
  இன்னிக்கி, நாம கண்டபடி மாத்தீட்டோம்
  (இதுலயும் சமய அரசியல், அவரவர் பிடித்தங்கள்:((

  கேட்டா…எனக்குப் பிடிச்சதை நான் செய்யுறேன், இது அவசியம், அது அநாவசியம் ன்னு நாமளா, தொல்காப்பியரை overrule செய்வது!

  ஆனா, தொல்காப்பியர் காட்டுவது = முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்கிற வரிசையே!
  மாயோன் மேய காடுறை உலகமும்
  சேயோன் மேய மைவரை உலகமும்
  ……
  முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
  சொல்லிய வகையான் சொல்லவும் படுமே

  • anonymous says:

   தொல்காப்பியர், சும்மா ஒன்னும் இப்படி வரிசை அமைக்கலை! காரணமில்லாம பண்ணமாட்டாரு, ஆதித் தமிழ்த் தந்தை!

   எப்பமே காத்து இருந்து கூடுவது போல், ஒரு சுகம் வராது:))
   அதான் Taxi கதையைச் சொன்னேன்:)
   * முல்லையின் உரிப்பொருள் = காத்திருத்தல்
   * குறிஞ்சியின் உரிப்பொருள் = புணர்தல்
   அதான் முல்லை 1st, குறிஞ்சி next…

   முல்லை-குறிஞ்சியின் காலம், கருப்பொருள் எல்லாம் பாருங்க! இதை ஒட்டியே இருக்கும்!
   முல்லை = மாலை | குறிஞ்சி = இரவு (யாமம்)
   முல்லை = கார் காலம் | குறிஞ்சி = கூதிர் (குளிர்)

   * மாலைக்கு அப்பறம் தானே இரவு?
   * மழைக்கு அப்பறம் தானே குளிர் காலம்?
   * காத்திருப்புக்கு அப்பறம் தானே கூடல்/ புணர்ச்சி?
   முல்லைக்கு = திருமால்; குறிஞ்சிக்கு = முருகன்! பழந்தமிழ்த் தெய்வங்கள்!

   அத்தனையும் இயற்கை-ங்க!
   அப்படித் தான் தொல்காப்பியர் அமைச்சி வச்சாரு!
   நாம தான், திமிரு புடிச்சிப் போய், தமிழ் இலக்கியத்தை அணுகத் தெரியாம, நம்ம பிடித்தங்களையே வச்சிக்கிட்டு அணுகறோம்:((

 6. anonymous says:

  இப்போ…..பாட்டை நேரடியா வாசிங்க…
  காபி உறிஞ்சும் Technique சொல்லி இருக்கேன்-ல்ல?:) அது போல, ரெண்டு ரெண்டா உறிஞ்சுங்க பார்ப்போம்:))

  Who wants to volunteer & try?? – Cmon, Getup Guyz:)
  எனக்கும் நீங்க சொல்லுறதைக் கேட்கும் ஆசை இருக்காதா என்ன?:)
  ————-

  அருஞ் சொற் பொருள் மட்டும் சொல்லுறேன்; Give it a try!

  * விதையர் கொன்ற முதையல் பூழி
  விதையர் = விதைப்போர்
  முதையல் = கொல்லைப்புறம்
  பூழி = புழுதி

  * இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின்
  ஈர் இலை = ஈரமான இலை
  வரகின் = வரகு (Millet) – வரகுத் தோசை சூப்பரோ சூப்பர்:)
  ———-

  * கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை
  கவை = Branch
  கறித்த = கொறித்த/தின்ற
  பிணை = இணை (மான்)

  * அரலை அம் காட்டு இரலையொடு வதியும்
  அரலை = மரச் சுள்ளிகள்
  இரலை = மான்
  ————

  * புரவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே!
  புரவு = விளையாடு
  * ‘எல்லி விட்டன்று வேந்து’ எனச் சொல்லுபு
  எல்லி = இரவு
  வேந்து = அரசன்
  ———–

  • anonymous says:

   * பரியல்; வாழ்க, நின் கண்ணி! காண் வர
   பரியல் = பரிந்து கொள்ளாதே, வருந்தாதே
   வாழ்க நின் கண்ணி = உன் மாலை வாழ்க!

   * விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா
   உளை = பிடரி மயிர்
   வீங்கு செலல் கலி மா = வேகமான & ஒலி கொண்ட
   ———–

   * வண் பரி தயங்கை எழீஇ தண் பெயல்
   பரி = குதிரை
   தண் பெயல் = மழை

   * கான் யாற்று இகுமணல் கரை பிறக்கு ஒழிய
   யார்று = ஆறு
   ———–

   * வெம் விருந்து அயரும் மனைவி
   = இது கொஞ்சம் double meaning 🙂
   = சூடான விருந்து சாப்பிட்டதால் அயரும்!
   = எந்த விருந்து-ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க-ப்பா! Me & Murugan are good boys! We dont know dbl meanings:)

   * மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே!
   பணைத் தோள் = அவள் மூங்கில் தோளில்
   துயில் அமர்வாயே = உட்கார்ந்துக்கிட்டே தூங்குறாங்க போல:))

   • anonymous says:

    //வெம் விருந்து//

    டேய் முருகா, சொல்லீறலாமா மக்களுக்கு?:)
    அதாச்சுங்க…chokkan & co, ஒரு சினிமாப் பாட்டு இருக்குதுங்க! ராஜா இசை-ங்க:)

    சூசகமா சொல்லப் போறேன் பொம்பள தாங்க
    சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

    இப்போ புரியுதா, //வெம் விருந்து// ன்னா என்ன-ன்னு?:))) நித்தம் நித்தம் நெல்லுச் சோறு….நெய மணம் கத்திரிக்கா

 7. முருகனருளால் double meaning என்ன, எத்தனையோ பொருள் கிடைக்கிறது, ஒவ்வொரு நாளும். நன்றி முருகா, நன்றி.

 8. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, அப்பாடா வந்துவிட்டார் காபி உறிஞ்சி குடிக்கச் சொல்லித் தர என்றவுடன் தான் நிம்மதியாகிறது 🙂

  திரு.சொக்கரே, சினிமா எதற்கு, நாடகம் எதற்கு, Marina beach எதற்கு, #365Paa வந்தாலே எல்லா entertainmentம் கிடைக்கும் என்று ஆக்கிய பெருமை உங்களையே சாரும்! 🙂

  பாடலின் ஆரம்பமே பெண் மானும் ஆண் மானும் உண்டபின் களிப்பதைப் பற்றி தானே உள்ளது. உழவர்கள் புழுதிக் காட்டு முல்லை நிலத்தை உழுது வரகு பயிரிட்டு உள்ளனர். அந்த பசுமையான வரகு இலைகளை பெண் மான் கொறித்து பின் காட்டுக்குச் சென்று அங்குள்ள ஆண் மானோடு இணைந்து இன்பம் துய்க்கிறது.

  அதே நாட்டைச் சேர்ந்த தலைவனும் வேலை நிமித்தமாகப் பிரிந்திருந்து விரைந்து தலைவியைச் சேரத் துடிக்கிறான். தேர்ப்பாகன் தேர்ந்த பாகன்! தன் Horsepowerன் மகிமையைப் பற்றித் தலைவனிடம் சொல்கிறான் 🙂 கவலைக் கொள்ளாதே, சீக்கிரமே தலைவியிடம் கொண்டு சேர்க்கிறேன் என்கிறான் அந்த நல்லவன்.

  வேகமாகச் செல்வதற்கு சீதோஷண நிலையும் ஒத்துழைக்கிறது. லேசான தூறலுடன் குளிர் காற்று வீசும் இரவு நேரம். குளிருக்கு இதமாக ஊர் போய் சேர்ந்தவுடன் மனைவியுடன் உல்லாசம்! உழைத்து களைத்து வந்தவனுக்கு
  தகுந்த சன்மானம் வழங்கப் பட்டது ! 🙂

  amas32

 9. ஆனந்தன் says:

  // காபி உறிஞ்சும் Technique சொல்லி இருக்கேன்-ல்ல?:) அது போல, ரெண்டு ரெண்டா உறிஞ்சுங்க பார்ப்போம்:))//

  அடுத்த பாடல் வரமுதல், யாருக்காவது காபி, டீ…….டீ, காபி……

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s