இனியன்

எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும்

மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக்

கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

உண்டே எனக்கரியது ஒன்று?

நூல்: அற்புதத் திரு அந்தாதி (#10)

பாடியவர்: காரைக்கால் அம்மையார்

என் உயிருக்கு இனிமை தருபவனை, என் தலைவனை, அந்தச் சிவபெருமானை நான் நிரந்தரமாக என்னுடைய உள்ளத்தில் பதித்துவைத்திருக்கிறேன், அதனால் என் மனம் இனிக்கிறது.

நான் அந்தச் சிவனை என்னுடைய தலைவனாக ஏற்றுக்கொண்டேன். அதனால் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். இனி என்னால் செய்யமுடியாத ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லை!

துக்கடா

 • காரைக்கால் அம்மையாரின் கதை:
 • படிக்க: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16
 • திரைப்பட வடிவத்தில் பார்க்க: http://www.youtube.com/watch?v=mLxzU6yRc2o
 • ’புனிதவதி’ (அல்லது) ’காரைக்கால் அம்மையார்’ எழுதிய இந்தப் பாடலின் இரண்டாவது வரியில் வரும் ‘இனிய வைப்பாக வைத்தேன்’ என்ற பகுதி மிகவும் அழகானது. ‘வைப்பு’ என்கிற அருமையான தமிழ்ச்சொல் இப்போது தப்பர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிற ஒன்றாகவே மாறிவிட்டது. (Except ‘நிரந்தர வைப்பு நிதி’ = Fixed Deposit 🙂
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
 • மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கவனைக்
 • கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
 • உண்டே எனக்கரிய தொன்று

319/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, சினிமா, சிவன், பக்தி, பெண்மொழி, வெண்பா. Bookmark the permalink.

25 Responses to இனியன்

 1. ஆனந்தன் says:

  நேற்று KRS:
  //தமிழ் இலக்கியத்தில் பெண்கள்-ன்னா எனக்கு..ஆண்டாள்…அதே போல் இன்னும் ரெண்டு பேர்..புனிதா (காரைக்கால் அம்மையார்), பாரி மகளிர்…அவங்க பேதை உள்ளம் நினைக்கும் போதெல்லாம் கண் கலங்கும்…//

  கேயாரெஸைக் கண்கலங்க வைப்பதென்று முடிவெடுத்துவிட்டீர்கள் போலிருக்கிறது! நேற்றுப் பாரி மகளிர், இன்று புனிதா…

 2. anonymous says:

  #365paa வில் புனிதா (காரைக்கால் அம்மை) யின் பாடல் வருவது – இதுவே முதல் முறை ன்னு நினைக்கிறேன்! என் மனப்பூர்வமான நன்றி சொக்கரே!

  கிட்டத்தட்ட, புனிதாவும் நானும் ஒன்னு தான், மனத்தளவில்….
  அதனால்….புனிதாவின் பாடல்கள்….என்னை…….

  • anonymous says:

   புனிதாவின் கதை – மனதில் பல அலைகளை எழுப்பும்!!
   அந்த அலைகள் எழும்பியதால் தான், முன்பு ஒரு பதிவினை இட்டேன் – செம எதிர்ப்பு….கலாச்சாரக் காவலர்களிடம் இருந்து 🙂

   ஆனால் வாசகர்கள் வாக்கெடுப்பில், அந்தப் பதிவே, முதல் பரிசு பெற்று, தமிழ்மண விருதைத் தட்டிச் சென்றது!

   இதோ அந்தப் பதிவு….”தேவாரம் பாடிய ஒரே பெண்”
   http://madhavipanthal.blogspot.com/2008/11/icon-poetry.html

  • anonymous says:

   அன்று, ஊரே ஒன்று கூடி, புனிதாவை மறுதலித்தது
   இன்று, ஊரே ஒன்று கூடி, புனிதாவுக்கு இந்தப் பரிசைக் குடுத்தது-ன்னே இதை எடுத்துக்கிட்டேன்…..

 3. anonymous says:

  கருணையே உருவான சிவபெருமானுக்கு = ஆதியும் இல்லை! அந்தமும் இல்லை!
  “அநாதிநாதன்” என்பார்கள்!
  அப்படி ஆதியில்லாத ஒருவர் – அம்மா அப்பா இல்லாத ஒருவர் – இன்னொருவரைப் பார்த்து…..

  * அம்மா என்றது = காரைக்கால் அம்மையார் என்று ஆகிவிட்ட புனிதாவை
  * அப்பா என்றது = திருநாவுக்கரசரை

  வேறு எவரையும் இப்படி உறவு சொல்லி அழைத்ததில்லை!
  ———————

  63 நாயன்மார்கள் வரிசையில்….காலத்தால் மிக மிக முந்தியவர் = காரைக்கால் அம்மையார்
  முதல் நாயன்மார் = காரைக்கால் அம்மா தான்!

  முதலாழ்வார்கள் என்பது போல, ஏனோ, இவருக்கு அப்படி ஒரு பேரோ/ அடைமொழியோ கிட்டவில்லை! 😦

  இவர் எழுதிய வெண்பாக்களும், பதிகங்களும் தான்…..முதன் முதலாக வந்த “முதல் திருமுறை! ஆனால் பகுப்பு கருதியோ என்னவோ, அவை கடைசியாக வைக்கப்பட்டுவிட்டன! 11ஆம் திருமுறையில்!

  புனிதாவுக்காக, இன்றும் திருவாலங்காட்டில், ஈசன் நடம் இடுகிறார்!
  சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் போது = வழியில், திருவாலங்காடு = முருகனுக்கும் முன்னே, புனிதா கண்ணில் படுவாள்!

 4. anonymous says:

  வாழ வேண்டிய பொண்ணு….
  மனசுல இல்லற ஆசை……காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து ன்னு எவ்ளோ கனவுகள்…..

  ஆனா, சிவபெருமான் மேல் சிவ-அன்பு! = ’ஆன்மீகம்’ ன்னு இன்னிக்கி முத்திரை குத்திட்டாங்களே, அது ன்னு வச்சிக்கோங்களேன்!

  * ஒரு பொட்டச்சி, ஆன்மீகமா இருக்கலாமா? குடும்பம் நடத்த முடியுமா??
  * ஒரு ஆம்பிளை, ஆன்மீகமா இருக்கலாம்! இருக்குறாப் போல பாவ்லா காட்டிட்டு, குடும்பம் நடத்தலாம், குழந்தை பெத்துக்கலாம் = கேட்டா சிவப் பிரசாதம்!

  * ஆனா பொம்பளை???
  ———————–

  புனிதா “அப்படிப்பட்டவ” ன்னு தெரிஞ்ச உடனேயே மறுதலித்தான் புருசன்!

  வேற ஊருக்கு ஓடிப் போய், இன்னோரு கல்யாணம் கட்டிக்கிட்டு ஜாலியா இருந்தான்
  திரும்பி வந்து, புனிதாவையே பாத்து, அம்மா ன்னான்
  துடிச்சா….இந்தப் பொண்ணு

  ஆனா ஊரு, அவன் பக்கமே நியாயம் பேசியது! :(((

  அதெப்படி “இப்படியான” பொன்ணு கூட குடும்பம் நடத்த முடியும்? ன்னு எல்லாரும் கேட்டாங்க! = அப்படி என்ன தான் பண்ணிட்டா அவ?

  சுந்தரர் “ஆன்மீகத்” தலைவர்! ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு என்னென்னமோ பண்ணா…அதெல்லாம் தம்பிரான் தோழர் ன்னு சொல்லும் உலகம்….
  ஒரு சாதாரண புனிதா, சிவ-அன்பு வச்சா…..அவ கூட…இல்லறம் வாழ முடியாது! Too dangerous ன்னு சொல்லும் உலகம்!!
  அடா அடா அடா….என்னவொரு நியாயம்!

  • anonymous says:

   அவ மனசு ஆசையே அத்து விழுந்துச்சு!
   அம்போ ன்னு போனா!
   சிவ சம்போ ன்னு போனா!

   சரிடாப்பா….இறைத்தமிழ் விரும்பும் பொண்ணு கூட வாழ முடியாது தான்-ன்னே வச்சிப்போம்!
   நேத்து வரைக்கும் அவளை அனுபவிச்சிட்டு, இன்னிக்கி “அம்மா” ன்னு கூப்புட்டியே…..அந்த “அம்மா”வையாச்சும் ஒழுங்காக் காப்பாத்தினியா?:((

   ஊரு சேர்ந்து அவளுக்கு நியாயம் மறுத்துச்சே….அவளை எங்காவது ஒரு மடத்திலாச்சும் சேர்த்துச்சா?

   அம்போ ன்னு தனியா விடப்பட்டாள்!
   பசி…
   சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு வாழ்ந்தாள்!
   வயசுப் பொண்ணு -> “பேய் மகளிர்” ஆனாள்!!
   ———————-

   இறைவனே அவ உடம்பை மாத்தி, பேய் ஆக்கிட்டாரு ன்னு டுமீல் வுட்டுட்டானுங்க கதைகாரனவுங்க
   “பேய் மகளிர்” ன்னு மரியாதையா ஒரு பட்டம்…..

   ஆனா, இதுபோல, பல “பேய்மகளிரை”, புனிதா தன் பாட்டில் காட்டுறா!
   அவளைப் போலவே நிராதரவாய், சுடுகாட்டில் வாழ்ந்த பெண்கள்!
   அவிங்கள கூட சிவபெருமான் தான் தோன்றி, பேய் உடம்பா மாத்திட்டாரா என்ன?

   புனிதா படிச்சவ, தமிழ் புனைபவள் என்பதால்….அவளை மட்டும் வரலாற்றுக்கு உபயோகப்படுத்திக்கிட்டு,
   பேய் மகளிர் ன்னு சிறப்புப் பட்டம்/கதை குடுத்து, ஆன்மீகத்துல சேத்துக்கிட்டு, நமப் பார்வதீ பதயே ஹரஹர மகாதேவா ன்னு ஆக்கிட்டாங்க!

   ஆனா, அந்தப் பச்சைப் பொண்ணு, அவ மனசு ஆசையைத் திருப்பிக் குடுக்க முடியுமா உங்களால?
   சுடுகாட்டு வாய்க்கரிசியைப் பொறுக்கிப் பொறுக்கித் தின்னாளே….நீங்க பகவத் பிர்சாதம் தின்னும் போது, அந்த வாய்க்கரிசியை நினைச்சிக்க முடியுமா உங்களால??

   பெருசா, பேச மட்டும் தான் முடியும்!
   நாக்குல தமிழ்! நாக்குல சைவம்! – மனசுல இல்ல:((((

   வெளியில் = கருத்துச் சுதந்திர முழக்கம்….
   வீட்டில் = ஏன்டீ, உனக்கு-ன்னு கருத்து ஒன்னும் இருக்கக் கூடாது:)))
   ———————–

   • anonymous says:

    இன்னிக்கும் அவளைப் பரிதவிக்க விட்டுட்டுப் போனவனுக்கு, பல்லாக்குல விழா எடுத்து, திருவிழா நடத்துறாங்க – காரைக்கால் கோயிலில்….ஆதீனங்கள்!

    கேட்டா…
    “அம்மாவை” பக்தி உலகத்துக்கு காட்டி அருளினானாம்!
    ஆமா, ஆமா…..

    * தான் படுக்க முடியாது ன்னு நினைச்சி, மறுதலித்தானா?
    * இல்லை….சிவபெருமானுக்கு நிறைய பதிகம் எழுதட்டும் ங்கிற ஆசையில், அவளை அம்போ ன்னு விட்டானா???

    இறைவனை முன்னிறுத்தாமல், சமயத்தையும்-மதத்தையும் முன்னிறுத்தினால்….இப்படித் தான் “புருடாணங்கள்” விளையும்:((

 5. anonymous says:

  நாம, பாட்டுக்கு வருவோம்…..

  * எனக்கு இனிய எம்மானை ஈசனை = எனக்கினியன் (MySweet)! என்ன அழகான பதம்!

  * யான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் = என்றும் வைப்பு (Ever Deposit)

  = கற்பனை, பண்ணிப் பாருங்க! Ever Deposit!
  மாசா மாசம்….Deposit இல் இருந்து வந்து கொண்டே இருக்கு! திவால் ஆகாது! நீங்களே மறந்தாலும், அது மறப்பதில்லை!
  = அது போல ஈசனை, Deposit போட்டு வைக்கிறா புனிதா? எங்கே? = மனக்கினிய = மனத்தில்! = Deposit in the Heart

  வைப்பு = செந்தமிழ்ச் சொல்
  வைத்த மா நிதிப் பெருமாள் ன்னு திருக்கோளூர், தூத்துக்குடிக்குப் பக்கம்….
  ————————-

  • anonymous says:

   * எனக்கு அவனைக் கொண்டேன் = wow!

   இதுக்கு விளக்கமெல்லாம் சொல்லவே முடியாது!
   எனக்கு=அவனைக் கொண்டேன்!
   அவ்ளோ தான்!

   அவனும் கொண்டானா? = தெரியாது
   கொள்வானா? = இன்றேனும் கொள்வான், என்றேனும் கொள்வான்
   …ஆனால் கொள்வான்!

   வள்ளியைப் போல….
   * எனக்கு=அவனைக் கொண்டேன்!
   * அவன் கொண்டானா? = தெரியாது!
   * அவனைச் சாமி ன்னு சொல்றாங்களே! சரி வருமா? = தெரியாது!
   * அவன் அழகனாமே, நீ குறத்தியாச்சே! = தெரியாது!

   அவன் குணமே போதும்!
   அவன் தமிழே போதும்!
   அவன் முருகே போதும்!

   அடிப்பாவீ….அவன் வேணாம்-ன்னுட்டா….கைக்கிளை ஆயிருவடீ….
   கைக்கிளைடீ…கைக்கிளை
   :)) ஊருக்கு முத்திரை குத்த ஒரு பேரு வேணும்! அதைக் கைக்கிளை ன்னு சொன்னால், சொல்லிக்கட்டுமே!

   நான் அவனையே கேட்கவே இல்லையே!
   அவனைக் கொண்டேன் = அவ்வளவு தான்!

   அவன் குணமே போதும்! அவன் தமிழே போதும்! அவன் முருகே போதும்!
   அதே போல்,
   கொள்ளா விடினும், என் முருகையும் தமிழையும் அவன் தள்ளத் துணியான்!

   எனக்கு அவனைக் கொண்டேன்
   எனக்கு அவனைக் கொண்டேன்!

  • anonymous says:

   * பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
   = அவனையே என் “பிரான்” என்ற கொண்ட அடுத்த கணமே, இன்பம் பெற்றேன்…..

   உடல் சேரவில்லை
   உதடு சேரவில்லை
   அப்புறம், எப்படி இன்பம் வரும்?
   பேசக் கூட இல்லை….

   எப்படி இன்பம் வந்ததா? சொல்லட்டுமா?
   * பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

   உண்டே எனக்கு அரியது ஒன்று?
   = எனக்கு, இனி வாழ்க்கையில் அரியது ன்னு ஒன்னுமே இல்ல!
   = எனக்கு, அவனைக் கொண்டேன்
   = பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்

   முருகா!

 6. நன்றி KRS.

  On a different note, but a different state of a woman uncared for is the wife of Gouthama Budha, Yashodara.

  ஆண்களின் ஆன்மீகத்தைக் கொண்டாடும் உலகம் பெண்களின் எந்த நிலையைப் பற்றியும் கவலைக் கொள்வது இல்லை. இங்கே காரைக்கால் அம்மையார் ஈசன் மேல் கொண்ட அளவில்லா பக்தியை ஒரு ஆண் கொண்டிருந்தால் அவனை உலகம் கொண்டாடியிருக்கும். இன்னும் ஆழ்வார் பெருமக்கள் நாயகி பாவத்தில் பெருமாளை பாடுகின்றதை சிலாகித்துப் பேசுகின்ற இந்த உலகம் உண்மையிலேயே ஒரு பெண் இறைவனை துதித்துப் பாடுவதை மட்டும் ரசிப்பதில்லை!

  அதே போல கௌதம புத்தரை நாம் ஒரு அவதாரமாகவே கொண்டாடுகிறோம். ஆனால் ஒரு க்ரஹஸ்தனின் கடமையில் இருந்து தவறி இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு விலகுகிறார் அவர். அந்த பெண்ணின் இளமைக் காலம் எவ்வாறு கழிந்திருக்கும் என்று யாரேனும் சிந்தித்து வருத்தம் அடைந்தது உண்டா? (வைரமுத்து அவர்களைத் தவிர )

  யசொதராவாவது அரச குடும்பத்துப் பெண். பாதுகாக்க மற்றவர்கள் இருந்தனர். வேங்கட நாதன் (ராகவேந்திர சுவாமி) சன்யாசத்தை மேற்கொண்டதும் அவர் துணைவியார் பட்ட இன்னலைக் கூறவும் வேண்டுமோ?

  காரைக்கால் அம்மையார் ஈசனை “sweet heart” என்கிறார். அருமையான பதம். உள்ளத்தில் இறைவன் பால் அன்பை மட்டுமே நிறைத்திருப்பவர் அனைவரும் அறிந்த உணர்வு இது.

  // என் உயிருக்கு இனிமை தருபவனை, // என்ன அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் திரு.சொக்கரே!

  amas32

  • anonymous says:

   உண்மை தான்-ம்மா!
   பிரிவுத் துயர்….மிக்க துயர் தருவது தான்! எனக்கே பட்டிருக்கேன்!

   ஆனா, ஒன்னு கவனிக்கணும்!
   புத்தரோ, இராகவேந்திரரோ….இன்னொரு பெண்ணைக் கொண்டு வந்து வச்சிக்கிட்டு…கும்மியடிக்கவில்லை!
   தங்கள் மனைவியரை அவர்கள் பக்திக்காக இழிக்கவும் இல்லை! நிர்க்கதியாக விடவும் இல்லை!

   புத்தர், யசோதரையை விட்டுப் பிரிந்து சென்றாலும், தவத்துக்கே சென்றார்! அப்படிச் செல்லும் முன்னர், தன் மன மாற்றங்களை, யசோதரையிடம் பேசுகிறார்!
   பின்னாளில், யசோதரை, புத்த சங்கத்தில் சேர்ந்து, தலைமைப் பிக்குணி ஆகவும் ஆகிறார்கள்! அப்போது, பெண்களின் ஆன்ம-பலம் கண்டு புத்தர் பயப்படவில்லை! உற்சாகமே படுத்துகிறார்!

   இராகவேந்திரரும், பல முறை, தன் மனைவியிடம் இசைவு வாங்கப் பார்க்கிறார்! ஆனால் அவள் அன்பு அதீதம்! விட்டுக் குடுக்க முடியவில்லை! வேறு வழியின்றிச் சொல்லிக் கொள்ளாமல் செல்கிறார்!
   சரஸ்வதி, தன்னை மாய்த்துக் கொண்டாள்! அவளுக்கு நற்கதி குடுத்து, அவள் பேரில் அறங்கள் செய்விக்க ஏற்பாடு செய்கிறார்!

   இங்கே பரமதத்தன்…இப்படியெல்லாம் செய்யவில்லை!
   தன் சுயநலத்துக்காக…எங்கே தன் காமம் எடுபடாதோ-ன்னு, அவளை அம்போ என்று விட்டான்!
   மதத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு, ஆன்மீகத்தில் இருக்கும் பெண், குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கு அற்றவள் ன்னு ஊரோடு பேச வைத்தான்!
   அவனுக்கு, இன்னமும் பல்லாக்கும், பூசைகளும்:((

 7. என். சொக்கன் says:

  test

  • anonymous says:

   அப்பப்போ இவரு ஒருத்தரு! சோதனை சோதனை ன்னு போடுறாரு! இதன் “சூட்சுமம்” என்னவோ?:))

 8. ஆனந்தன் says:

  அருமையான பதிவு. நன்றி!
  //இன்னிக்கும் அவளைப் பரிதவிக்க விட்டுட்டுப் போனவனுக்கு, பல்லாக்குல விழா எடுத்து, திருவிழா நடத்துறாங்க – காரைக்கால் கோயிலில்….ஆதீனங்கள்//
  இதெல்லாம் கூட நடக்கிறதா!

  புனிதாவுக்கு இழைக்கப் பட்டது அநீதிதான். சந்தேகமில்லை. அதனாற்றான் இறைவனே அவரைக் காரைகால் அம்மையாராக்கி இன்று அவரை நாமெல்லாம் வழிபடவும் அவர் புகழைக் கூறவும் வழி செய்துள்ளான். பரமதத்தனின் பெயர் காரைக்காலம்மையாரின் கணவன் என்பதால் மட்டும்தான் நிலைத்திருக்கிறது.

  இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் பெருந்துன்பங்களுக்கு ஆளான பெண்கள் எத்தனையோ பேர். “நியாயங்களோ பொதுவானது; புரியாமல் போனது…!”
  “This is a man’s world..But it would be nothing, without a woman or a girl”- James Brown!

  இந்தச் சமயத்தில் இலக்குவனை 14 வருடங்கள் பிரிந்து வாழ்ந்த ஊர்மிளையையும் சற்று நினைவுகூர்வோம்!

  • anonymous says:

   இதனால் தான் ஒரு சில இராமாயணக் கதாபாத்திரங்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை!:)
   வாழ்வை விடுத்த நீதிகளைப் போதிப்பதால்…..

   இலக்குவன், இன்னொரு பெண்ணை மணந்து கூத்தடிக்கவில்லை! காடுகளில் அல்லலே பட்டான்…
   எனினும், ஊர்மிளை நிலை…எனக்கு வருத்தம் தான்!

   சீதையே, வாதாடித் தானே, இராகவனுடன் செல்லவேண்டி இருந்தது…
   ஏனோ, ஊர்மிளை வாதாடி, இலக்குவனோடு உடன் செல்லவில்லை!

 9. ஆனந்தன் says:

  Some more thoughts on this…

  கணவனைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுவது தமிழர் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. அதனால், சுந்தரருடைய மனைவியருக்கு அவரை வழிபடுவதிலோ, தங்களைக் கொடுப்பதிலோ முரண்பாடு எதுவும் தோன்ற இடமில்லை. ஆனால், மனைவி ஒரு தெய்வப்பிறவி என்று அறிந்தபின் அவளுடன் குடும்ப வாழ்க்கை நடத்துவது ஒரு சாதாரண மனிதனுக்குச் சங்கடமான காரியம்.

  சில மிருகத்தனமான மனிதர்கள் அந்தப் பெண்ணின் தெய்வத்தன்மையை உணரக் கூட முடியாமல் அவளுடன் வாழ்ந்தே அவளைக் கொடுமைப்படுதியிருக்கக் கூடும். அப்படிப்பட்ட பல மனிதர்களை இப்பொழுதும் நாம் காணலாம்.

  Atleast பரமதத்தன் அவளுடைய தெய்வத்தன்மையை உணர்ந்துகொண்டான். ஆனால், அவளைக் கொடுமைப் படுத்தாமல், அதேசமயம் ஒரு ‘பரமஹம்சர்’ போலவும் நடந்து கொள்ளாமல், அவளுடைய வாழ்வுக்கு ஒரு வழியும் செய்யாமல் வீட்டை விட்டு ஓடி, கோழைத்தனமாக நடந்து கொண்டான். அது அநீதி. ஊர்மக்கள் அவளுக்கு ஆதரவ்ளிக்காதது அதைவிடக் கொடுமை என்பேன்.

  ஆனால், end result ஐ வைத்துப் பார்த்தால், பரமதத்தன் ஓடியதாற்றான் புனிதவதிக்குத் தன்னை இறைவனிடம் முழுதாகக் கொடுக்க முடிந்தது. அதனால், அதுவும் நன்மைக்கே!

  • anonymous says:

   //ஆனால், end result ஐ வைத்துப் பார்த்தால், பரமதத்தன் ஓடியதாற்றான் புனிதவதிக்குத் தன்னை இறைவனிடம் முழுதாகக் கொடுக்க முடிந்தது. அதனால், அதுவும் நன்மைக்கே//

   Sorry, I wish to disagree:))
   இப்படிச் சொல்வதால், ஆணாதிக்கம் தான் இன்னும் வளரும்!
   சமயவாதிகள் கட்டும் சப்பைக் கட்டுக்குத் துணைசெய்யும்:))

   * யாரும் ஓடாமலே, ஆண்டாள் தன்னை இறைவனிடம் முழுமையாகக் குடுக்க முடிந்தது
   * வில்லிதாசன் விட்டுவிட்டு ஓடாமலேயே, பொன்னாச்சி, இறைவனிடம் முழுமையாகக் குடுக்க முடிந்தது
   * திருமங்கை ஆழ்வார் ஓடாமலேயே, குமுதவல்லி, இறைவனிடம் முழுமையாகக் குடுக்க முடிந்தது…இன்னிக்கும் பக்கத்தில் சிலையா இருக்காள்!

   அவ்வளவு ஏன்….வசிட்டர் விட்டுவிட்டு ஓடியா, அருந்ததி விண்ணில் ‘ஜொ’லிக்கின்றாள்?
   அம்மி மிதித்து, “அருந்ததி” பார்க்கின்றோம்??

   வள்ளியின் தேடல் முருகனுக்குத் தொல்லை குடுக்குதா?:)))
   ———–

   புனிதா, பேயாய் அழுது, துன்பப்படாமல் இருந்திருந்தால்….இன்னும் பல நல்ல இறைக் கவிதைகளைத் தந்து…சைவத் தமிழை உயர்த்தியே இருப்பாள்!

   • anonymous says:

    சிவ ஆனந்தன்
    //Sorry, I wish to disagree:))// ன்னு சொன்னதுக்கு கோச்சிக்க மாட்டீங்க-ல்ல?:))
    தப்பா எதுனா சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க:)
    சைவத் தமிழுக்கான, என் மனப்பூர்வமான ஆதங்கமே அது!

 10. ஆனந்தன் says:

  // Sorry, I wish to disagree:))// – No need to be sorry!
  //இப்படிச் சொல்வதால், ஆணாதிக்கம் தான் இன்னும் வளரும்!// – Actually, I agree my last para can be (and is often) misinterpreted and misused. So, I am happy to withdraw it in this context!
  //புனிதா, பேயாய் அழுது, துன்பப்படாமல் இருந்திருந்தால்….இன்னும் பல நல்ல இறைக் கவிதைகளைத் தந்து…சைவத் தமிழை உயர்த்தியே இருப்பாள்!// – True, one can argue like that too!

  I have already agreed that Paramathathan running away from home was COWARDLY and an INJUSTICE to Punitha. It just shows that Paramathathan and Punitha are at completley different wavelengths, unlike Thirumangai Azhvaar-Kumuthavalli, Vasittar-Arunthathi, Murugan-Valli and other such divine couples.
  Sorry, not at a PC that can type Tamil !

  • anonymous says:

   :))))
   views are views; heart is what that matters! – enakku adikkadi chollipEn:)
   thank you for your benevolent understanding!:)

 11. loganathans says:

  Simply Awesome..!! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s