சிற்பம் வடிக்க என்ன தேவை?

கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்

மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்

கண்ட சர்க்கரையும் மெழுகும் என்று இவை

பத்தே சிற்பத் தொழிற்கு உறுப்பு ஆவன

நூல்: திவாகர நிகண்டு

எழுதியவர்: திவாகர முனிவர்

சிற்பம் செய்வதற்குப் பயன்படக்கூடிய பொருள்கள் மொத்தம் பத்து. அவை:

 1. கல்
 2. உலோகம்
 3. செங்கல்
 4. மரம்
 5. மண்
 6. சுதை (சுண்ணாம்பு)
 7. யானைத் தந்தம்
 8. வண்ணம்
 9. சர்க்கரைக் கட்டி
 10. மெழுகு

துக்கடா

 • ’இது என்ன பாட்டுமாதிரி இல்லையே, பட்டியல்மாதிரி அல்லவா உள்ளது?’ என்று யோசிக்காதீர்கள். பட்டியலேதான். தமிழில் ‘நிகண்டு’ என்றால் தொகுப்பு அல்லது கூட்டம் என்று அர்த்தம்
 • பழங்காலத் தமிழர்கள் (இந்த நூல் எழுதப்பட்ட காலகட்டம் கிபி 8ம் நூற்றாண்டு) இத்தனை பொருள்களைக் கொண்டு சிலை வடித்திருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை இப்போதும் வழக்கத்தில் உள்ளன. ‘செங்கல்’தான் சரியாகப் புரியவில்லை, செங்கல்களை வைத்துக் கட்டப்படும் கட்டடங்களைச் சிலை என்று சொல்கிறார்களோ?
 • அப்புறம், இந்தப் பட்டியலில் ‘வண்ணம்’ என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்
 • Update : வண்ணம் பற்றி விளக்கம் சொன்ன அனைவருக்கும் நன்றி

316/365

Advertisements
This entry was posted in பட்டியல். Bookmark the permalink.

21 Responses to சிற்பம் வடிக்க என்ன தேவை?

 1. ஆனந்தன் says:

  வண்ணம் என்றால் வர்ணம் இல்லையா? அது வடமொழியோ? 8ஆம் நூற்றாண்டில் கலப்பு எற்பட்டிருக்காதா?
  “கல்லிலே கலை வண்ணம் கண்டான்”
  “பால் வண்ணம் பருவம் கண்டேன்”
  இங்கே “அழகு” என்ற பொருளில் வருகிறது. சிலை அமைப்பதற்கு அழகுணர்ச்சியும் தேவைதான். ஆனால், அது ஒரு சடப்பொருளல்லவே?
  எல்லாம் கேள்விகள்தான். பதிலுக்குக் காத்திருக்கிறேன். முருகனருள்!

  அதுசரி, சிலை வடிக்க சர்க்கரைக் கட்டி எதற்கு?

  • அது ஒருவேளை சிற்பி சிலை செதுக்கும்போது சாப்பிடுவதற்கோ? 🙂
   amas32

   • என். சொக்கன் says:

    அஸ்கா சர்க்கரைக் கட்டியில அழகாச் சிலை செய்யலாம்ங்க, பார்த்த/சாப்பிட்டதில்லையா? 🙂

   • வரவர ரொம்ப ஓட்ட ஆரம்பிச்சிட்டீங்க-ம்மா:))

    Jokes apart, கண்ட சர்க்கரை ன்னு இங்கே வருவது, சுதைச் சிற்பம் செய்யப் பயன்படும்!
    சுடு சர்க்கரை – கண்ட சர்க்கரைப் பாகு எடுப்பது = சுதையை இறுக்க!

    வெள்ளை அதிரசம் செய்யும் போது, சர்க்கரையின் கம்பிப் பாகு – அதன் ஒட்டும் திறன் உங்களுக்குத் தெரியும் தானே!:)
    ————-

    பெரும்பாலும், தென்மாவட்டங்களில், esp தோழன் இராகவனின் ஊரான தூத்துக்குடி….
    வில்லிபுத்தூர்/ விருதுநகர் பெருமாள் கோயில் கருவறைச் சிற்பங்கள் = கருங்கல் அல்ல! சுதைகளே!
    வண்ணம் அடிக்கப்பட்டு, பச்சை/நீலமா இருப்பாரு:) கலர் கலர் பொம்மைகள் போல பெருசா இருக்கும்:) No Bath:))

    நீங்களே பாருங்க…
    தூத்துக்குடிக்கு அருகே திருத்தங்கல் பெருமாள் = http://temple.dinamalar.com/Popupimage.aspx?Photo=G_L8_687.jpg

    இதுக்கெல்லாம், கண்ட சர்க்கரை & வண்ணம் & செங்கல் (செம்மண் கட்டி) அவசியம்;
    இன்னும் சுதைச் சிற்பத்துக்கு, சர்க்கரையின் அவசியம் இங்கே படிக்கலாம்= http://www.tamilvu.org/courses/diploma/d061/d0612/html/d0612333.htm

  • //எல்லாம் கேள்விகள்தான். பதிலுக்குக் காத்திருக்கிறேன். முருகனருள்!//

   தோடா! இது வேறயா?:)
   முருகனுக்கு ஒன்னும் தெரியாது! அவன் சரியான லூசுப் பய:))

  • வண்ணம்/ வருணம் = தமிழ்….
   சங்கத் தமிழிலேயே உள்ளது!

   வர்ணம் – வடமொழி!
   நிறம் (அ) நால் வர்ணங்களைக் குறிக்கும்

 2. sk says:

  Does ‘Vannam’ refer to Colouring material (paints)?

 3. உலோகத்தில் சிற்பம் செய்யும் பொழுது மெழுகில் தான் வார்ப்பு எடுப்பார்கள். பின் உருக்கிய உலோகத்தை அதில் விட்டு மெழுகு உருகி அதன் உருவில் உலோகம் கெட்டிப்படும் என்று நினைக்கிறேன்.

  சர்க்கரை மற்றும் சுதை கெட்டிப் படுத்த உதவும் (to help bind).

  வண்ணம் உருவத்தை வரைய, மற்றும் குறியீடுகளை பதிக்க பயன்படுத்தப்டும் என்று நினைக்கிறேன்.

  பெரிய கற்சிலை வடிக்க சாரம் கட்ட மரம் தேவைப் படுமோ?

  பாடல் படிக்க அருமையாக உள்ளது 🙂

  amas32

  • என். சொக்கன் says:

   ஏன்? மரத்திலேயே சிலை செய்யலாமே, அதுதானே மரப்பாச்சி?

   • ஆமாம்! திருக்கோயிலூர் உலகளந்த பெருமாளின் சிலை, மரத்தால் ஆனது! தைலக் காப்பும் உண்டு!

 4. சொக்கரிடம் ட்விட்டரில் சொன்னதை, இங்கும் பதிஞ்சி வைக்கிறேன்!:)

  //‘செங்கல்’தான் சரியாகப் புரியவில்லை, செங்கல்களை வைத்துக் கட்டப்படும் கட்டடங்களைச் சிலை என்று சொல்கிறார்களோ?//

  செங்கல் என்பது செம்மண் கட்டி/ காவிக் கட்டி
  நிறம் குழைக்கவும், சுதைக்குச் சேர்க்கவும் பயன்படும்!
  வீட்டுல கோலம் போட்டு, செம்மண் கட்டியால் Border கட்டுறோம்-ல்ல? அதே போலத் தான்!:)

 5. anonymous says:

  shucks….i am forgetting to change the id & then comment….
  itz fine….
  ———–
  ஒவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் பார்ப்போமா?

  1.கல் = திருவேங்கடமுடையான்/ திருச்செந்தூர் முருகன்
  2.உலோகம் = சிதம்பரம் நடராஜர்

  3.செங்கல் = சித்தி (சிந்தாமணி) விநாயகர்
  4.மரம் = திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள்

  5.மண் = காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் (மணல் லிங்கம்)
  6.சுதை (சுண்ணாம்பு) = வில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையான்

  7.யானைத் தந்தம் = திருவரங்கம் கோயிலில், நாயக்க மன்னர் சிலைகள்
  8.வண்ணம் = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்

  9.சர்க்கரைக் கட்டி = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்
  10.மெழுகு = பூண்டி மாதா கோயில்

 6. ஒவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் பார்ப்போமா?

  1.கல் = திருவேங்கடமுடையான்/ திருச்செந்தூர் முருகன்
  2.உலோகம் = சிதம்பரம் நடராஜர்

  3.செங்கல் = சித்தி (சிந்தாமணி) விநாயகர்
  4.மரம் = திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள்

  5.மண் = காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் (மணல் லிங்கம்)
  6.சுதை (சுண்ணாம்பு) = வில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையான்

  7.யானைத் தந்தம் = திருவரங்கம் கோயிலில், நாயக்க மன்னர் சிலைகள்
  8.வண்ணம் = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்

  9.சர்க்கரைக் கட்டி = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்
  10.மெழுகு = பூண்டி மாதா கோயில்

  • சென்னை அருகே மகாபலிபுரத்தில் திருவலந்தை திருக்கோவில் உள்ளது. இங்கு மூலவரும் சுதையால் ஆனவர் தான். அந்த வராக மூர்த்தியின் மேல் உள்ள வர்ணங்கள் அனைத்தும் அத்தனை அழகு. நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு திருவிடந்தை என்று பெயர். அருகிலேயே இந்தக் கோயில். தாயார் வலப்பக்கம் மடியில் உட்கார்ந்திருப்பார்.
   amas32

   • thanks ma for this info
    திரு இட எந்தை தெரியும்;
    திரு வல எந்தை நீங்க சொல்லித் தான் கேள்விப்படுறேன்…
    next time, i come….hav to go here for pleasure trip:)

 7. ஆனந்தன் says:

  //வண்ணம்/ வருணம் = தமிழ்….//
  //வண்ணம் = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்//

  ஐயா, வண்ணம் என்றால் என்ன பொருள் என்று இன்னும் கூறவில்லையே?

  • ஆனந்தன் says:

   //வண்ணம் = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்//
   இந்தச் சிலை எப்படி இருக்கும்? பல நிற்ங்களால் ஆனதோ?

  • வண்ணம் = நிறம் (அ) மூலப் பண்
   shade ன்னு சொல்லுறோம்-ல்ல, அது போல!

   இங்கே வண்ணம் என்பது = வண்ணக் கட்டிகள்! அதால் செய்யப்படும் சிற்பங்கள்!
   —————-

   //வண்ணம் = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்//
   இந்தச் சிலை எப்படி இருக்கும்? பல நிற்ங்களால் ஆனதோ?

   நீங்களே படத்துல பாத்துக்கோங்க…. 🙂

   கை, கால், விரல், உடம்பு, கண்ணு ன்னு ஒவ்வொரு கலரு!

  • ooops
   one small mistake..sorry…got swapped

   6.சுதை (சுண்ணாம்பு) = தூத்துக்குடி, திருத்தங்கல் பெருமாள்
   8.வண்ணம் = வில்லிபுத்தூர் வடபெருங் கோயிலுடையான் (multi color)
   ன்னு மாத்திப் படிக்கவும்! படங்கள் சரியே!

 8. raja says:

  நீங்கள்கூறியது போல் சர்க்கரை சிலை என்றால் சாப்பிட கூடிய சர்கரை இல்லை அது சிலைபோல்கட்டையில் செய்து அதன்மேல் துணியை சுற்றி அதன்மேல்சர்கரை பாகுபோல் திரவம்தடவி பின்புஅதன்மேல் அலங்கார வேலைபாடீகள் செய்து சிலைய முடீப்பர் ஆதாரம் சிற்ப செந்நூல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s