இரு வகை நெல்

சொல் அரும் சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்

மெல்லவே கரு இருந்து, ஈன்று, மேல் அலார்

செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே!

நூல்: சீவக சிந்தாமணி (நாமகள் இலம்பகம் #53)

பாடியவர்: திருத்தக்க தேவர்

கர்ப்பம் தாங்கிய பசும்பாம்பின் தோற்றத்தைப்போலவே நெற்பயிரும் கருத்தரிக்கிறது, மெல்ல வளர்ந்து கதிர்களைப் பிரசவிக்கிறது.

ஆரம்பத்தில் அந்தக் கதிர்களில் பால் பிடிக்கவில்லை. அவை நேராக நிமிர்ந்து நிற்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது அற்பர்கள் தாங்கள் கொண்ட செல்வத்தை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்துத் திரிவதுபோல் தோன்றுகிறது.

கொஞ்ச நாள் கழித்து, அந்தக் கதிர்களில் நன்கு பால் பிடித்து மணி நிரம்பிவிடுகிறது, அப்போது அவை நன்கு வளைந்து நிற்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, நன்கு படித்த அறிஞர்கள் கர்வம் இல்லாமல் பணிவோடு தலை வணங்கி வாழ்வதைப்போல் தோன்றுகிறது.

துக்கடா

 • நெற்பயிரின் வளர்ச்சிபற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே இந்தப் பாடலுக்கு Academic உரைமட்டுமே எழுதியுள்ளேன். முருகன் அருளால் அன்பர்கள் சிலர் பின்னூட்டத்தில் விரிவான விளக்கம் தருவார்கள் :>
 • சரக்கில்லாத கதிர்கள் நிமிர்ந்து நிற்பதும், நிறைகுடங்கள் பணிந்து நிற்பதும் அழகான காட்சி, பொருத்தமான உவமை, இது உங்களுக்கு ‘யாரையாவது’ நினைவுபடுத்தினால் கம்பேனி பொறுப்பேற்காது 😉
 • ‘சீவக சிந்தாமணி’ தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று, அதனை முழுமையாக உரையுடன் வாசிக்க இங்கே செல்லலாம்: http://www.tamilvu.org/library/l3300/html/l3300sta.htm
 • இந்தச் ‘சீவக சிந்தாமணி’யின் கதைப் பகுதியைக் கிழக்கு பதிப்பகம் எளிய வடிவத்தில் இரு நூல்களாக வெளியிட்டுள்ளது. அவை:
 • 1. நாவல் வடிவம் : எழுதியவர்: ராம் சுரேஷ் (என்கிற ’பெனாத்தல்’ சுரேஷ்) (தற்போது அச்சில் இல்லை)
 • 2. காமிக்ஸ் வடிவம் : https://www.nhm.in/shop/978-81-8493-465-6.html

311/365

Advertisements
This entry was posted in உவமை நயம், சீவக சிந்தாமணி. Bookmark the permalink.

11 Responses to இரு வகை நெல்

 1. anonymous says:

  1. //(தற்போது அச்சில் இல்லை)// = what if one needs to purchase? shd he goto kizhakku office straight to buy this?

  2. இந்தப் பாட்டு = தற் குறிப்பேற்ற அணி தானே?

  • என். சொக்கன் says:

   1. Enquire Kizhakku when it will come in print again

   2. உவமை அணி அல்லவோ?

   • anonymous says:

    “சூல்” பசும் பாம்பு ன்னு சொல்லுறாரே!
    பாம்பு முட்டை தானே இடும்? சூல் (கர்ப்பம்) தரிக்காதே! அதான் கேட்டேன்!

   • anonymous says:

    hmmmm…
    இல் பொருள் உவமை ன்னும் எடுத்துக்கலாமோ?

    ஏன் கேக்குறேன்-ன்னா, எனக்குத் தெரிஞ்சி, கிராமத்துல பாத்திருக்கேன்; பாம்பு முட்டையிட்டு, அது பொறிக்கும்

    திருத்தக்க தேவர் தப்பாப் பாடி இருக்க மாட்டாரு!
    அதான் தற்குறிப்பான கற்பனையோ? (அ) இல்லாத பொருள் கற்பனையோ??

  • anonymous says:

   அடுத்த கேள்வி:))
   தற் குறிப்பேற்றம் ன்னா என்ன? இல் பொருள் உவமை ன்னா என்ன?:)
   ————

   //முருகன் அருளால் அன்பர்கள் சிலர் பின்னூட்டத்தில் விரிவான விளக்கம் தருவார்கள் :>//

   இப்படிப் போட்டதுக்காக, இத்தினி கேள்வி கேட்டு பழிவாங்கல என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…:)

 2. anonymous says:

  சரி….பாம்பு சூல் (கர்ப்பம்) சுமக்குமா என்பதை தற்போதைக்கு விடுத்து….நாம வயலுக்குள்ள இறங்கிப் பார்ப்போமா?
  செருப்பைக் கழட்டிட்டு இறங்குங்க! இது பூமி மண்ணு, சாமி மண்ணு!
  —————-

  வரப்போரமா நடக்கும் போது பார்த்து இருப்பாரு போல திருத்தக்கதேவரு! என்னவொரு அழகான கற்பனை!
  * நெற்கதிர் வளையாம மெதப்பா இருக்கு = உள்ள ஒன்னும் இல்ல = மேல் + அல்லார் கல்விச் செல்வம்
  * நெற்கதிர் வளைஞ்சி, சாஞ்சி இருக்கு = உள்ள கதிரா இருக்கு = மேலார் கல்வி
  —————

  நெல் வேற, அரிசி வேற
  நெல்லுக்கு உள்ளார இருப்பது அரிசி! நெல்லின் உமி நீக்கினாத் தான் அரிசி கெடைக்கும்!
  ஆனா அரிசியைப் போட்டா ஒன்னும் விளையாது! நெல்லு தான் விளையும்!

  அது போல, குற்றங் குறை (உமி) உள்ளது தான் வாழ்க்கை-நட்பு எல்லாம்!
  அது தான் விளையும்!
  உமியெல்லாம் நீக்கிச் சுத்தமா வெள்ளை வெளேர்-ன்னு இருந்தா மட்டுமே விளைப்பேன் ன்னு சொல்ல முடியுமா?

  வேணும்ங்கிற போது, நாம தான் உமி நீக்கிச் சாப்பிட்டுக்கணும்!
  உமி இருக்கே ன்னு நெல்லை ஒதுக்கவும் கூடாது! அதுக்காக உமியோடும் சாப்பிட முடியாது! குறையை நீக்கி, குணத்தைக் கொண்டு உண்பதே = வாழ்க்கை!

  நெல்லுக்கு உமி உண்டு, நீருக்கு நுரை உண்டு, புல் இதழ் பூவிற்கும் உண்டு!

  • anonymous says:

   கிராமத்துல, அறுவடைக்குப் பின், மொத்த நெல்லையும் அரிசி ஆக்கீற மாட்டாங்க! குதிர் (அ) மூட்டைல, நெல்லாவே வச்சிருப்பாங்க!

   அந்த வாரத்துக்கு வேணுங்கற அளவுக்கு, மர உலக்கைல குத்தி, உமி நீக்குவாங்க = கைக்குத்தல் அரிசி!

   நல்ல வாசனையா இருக்கும்! நெல்லுச் சோறு பொங்கித் தின்னு பாருங்க! கூடச் சுடச்சுடக் காராமணிக் கொழம்பு! யப்பா…அந்த சொகமே தனி:)

 3. anonymous says:

  நெல்லு விளைய சுமார் ஐஞ்சு மாசம் ஆவும்!

  * ஏர் உழுதல்
  * விதைப்பு
  * நாற்றாங்கால்
  * களை பறிப்பு
  * உரம்
  * நடவு நடல் (மாத்தி நடல்)
  * பாடு நிரப்பல்
  * மறுபடியும் ரெண்டாம் உரம்

  இவ்வளவும் பண்ணாப் பொறவு தான், தூர் கட்டும், கதிர் உருவாகும், பால் பிடிக்கும், நெல் முத்து வரும்! :))
  அதான் “மெல்ல்ல்ல்லவே கரு இருந்து, ஈன்று” ன்னு பாடுகிறார் போல!
  —————–

  திடீர்-ன்னு நாலாம் மாசத்துல, கதிரு….பச்சையா, புடைப்பா நிக்கும்!
  அட, இம்புட்டு நாள் எங்கே இருந்துச்சி ன்னே தெரியாது!:)
  திடீர் ன்னு காத்துல அப்படியும் இப்படியும் ஆடும்! அல்பனுக்கு பவுசு வந்தா ன்னு சொல்லுவாங்களே; அது போல:))

  கிட்டக்க போயி, கதிரை உலுக்கிப் பாத்தா, உள்ள ஒன்னுமே இருக்காது!:)))
  = மேல் அலார் செல்வமே போல், தலை நிறுவி!
  = குறிப்பாக் கல்விச் செல்வத்தைச் சொல்லுறாரு! அடுத்த வரியில இருக்கு!
  ——————

  ஆனா, பால் பிடிக்கத் துவங்கியவுடனே, கதிர்-ல மணி காணும்!
  மணி காணக் காண, பாரம் தாங்காது!
  அப்படியே பயிரு வளையும்! நெல்லுத் தலையும் ஒரு பக்கமா வளைஞ்சி நிக்கும்!
  (ஆனா எல்லாப் பயிரும் ஒரே பக்கமாத் தான் வளையும் – பார்த்து இருக்கீங்களா? – இதை இயற்கை-ம்பதா? இறைவன்-ம்பதா?? முருகா)

  தேர்ந்த நூல் கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே!

  கண்ட நூல் இல்ல! தேர்ந்த நூல்!
  நூல்களைப் படிக்கப் படிக்க = அட, நம்ம அறியாமை இவ்ளோ இருக்கா? இன்னும் எவ்ளோ இருக்கோ?
  * நூல்களைப் படிக்கப் படிக்க = பணிவு வரும், நமக்கு
  * கதிர்கள் புடிக்கப் புடிக்க = பணிவு வரும், நெல்லுக்கு!

 4. anonymous says:

  Hurrah! கண்டுபுடிச்சிட்டேன்….Maybe chokkan can validate!

  சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல் = எப்படி பாம்பு கர்ப்பம் திரிச்சிச்சா ன்னு வெளிப் பார்வைக்குத் தெரியாதோ
  (ஏன்னா பாம்பு முட்டை இட்டுட்டுப் போயிடும், கர்ப்பம் ன்னே தெரியாம, திடீர் ன்னு ஒரு நாள் பத்து பாம்புங்க தோன்றி நிக்கும்…)

  அது போல், கர்ப்பம் ன்னே தெரியாம, திடீர் ன்னு தோன்றி, நெல்லு தூர் கட்டி ஆடும்! ஆனா உள்ள ஒன்னுமே இருக்காது!:)

  பாம்பு சூல் கொள்ளாது = “சொல் அரும் சூல்”! அப்படிக் கொண்டு கூட்டி எடுத்துக்கணும் ன்னு நினைக்கறேன்! செம உவமை-ல்ல?? வாவ்!

  திருத்தக்க தேவரா? கொக்கா? மேன்மை கொள் சமண நீதி ஓங்குக உலகமெல்லாம்!

 5. முற்றிய கதிர்களை உடைய நெற்பயிர்கள் வளைந்து நிற்பது, முதலமைச்சரை வணங்கும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் போல என்று இன்றைய கவிஞர்கள் நாளை எழுதக் கூடும் 🙂 (திரு.சொக்கரும் அதைத் தான் சொல்ல வருகிறார் என்றே நினைக்கிறேன்)

  கர்ப்பம் தரித்த பெண்ணும், பால் பிடித்து மணி நிரம்பிய கதிரும் உடலின் கனத்தால் நிமிர்ந்து இருக்க முடிவதில்லை. தாய்மையின் மகிழ்ச்சியும் ஒரு தளர்ச்சியைத் தந்து உடலின் வணக்கத்திற்கு ஒரு காரணம் ஆகிறது.

  நன்கு படித்த அறிஞர்கள் ஞானத்தின் முதிர்ச்சியால் அதைத் தாங்கும் பலத்தால் வணக்கத்துடன் இருக்கிறார்கள்!

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s