நட்பு மரம்

நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே

ஒரு நாள் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க்கும்மே

நூல்: வெற்றிவேற்கை (#33 & #34)

பாடியவர்: அதிவீர ராம பாண்டியன்

மூர்க்கர்களுடன் நாம் நூறு ஆண்டுகள் பழகினாலும் சரி, அந்த நட்பு நீரில் படியும் பாசியைப் போன்றதுதான். மேலோட்டமாகப் பார்ப்பதற்குப் பெரிதாகத் தெரியும், கையை வைத்தால் விலகிவிடும்.

நல்லவர்களின் நட்பு இதற்கு நேர் எதிர். அவர்களுடன் நாம் ஒரு நாள் பழகினால்கூடப் போதும், வலிமையான பூமியைப் பிளந்துகொண்டு உள்ளே செல்லும் வேரைக் கொண்ட மரம் போல அந்த நட்பு உறுதியாகிவிடும். அதன்பிறகு அதனை யாராலும் அசைக்கமுடியாது.

308/365

Advertisements
This entry was posted in அதிவீர ராம பாண்டியன், அறிவுரை, உவமை நயம், வெற்றிவேற்கை, வெற்றிவேற்கை / நறுந்தொகை. Bookmark the permalink.

10 Responses to நட்பு மரம்

 1. anonymous says:

  உலகு அனைய உயர்ந்த பாடல்!
  இதை எழுதியவருக்கு என் கை கூப்பிய வணக்கம்!

  நாமெல்லாம், நம் உள்ளத்தில் = நீரில் பாசியா? நிலத்தில் வேரா??
  —————–

  பாசி, முதலில்…நல்லாத் தான் இருக்கும்! வெளியே தெரியாது! உள்ளேயே தண்ணிக்கு ஒரு வித நீலப்-பசுமை நிறம் குடுத்து, Romanticஆ கிளுகிளுப்பைக் கூட்டும்! ஆனால் பரவப் பரவ, நன்கு விரிந்து, வழுக்கடித்து விடும்!

  பாசி ஒரு தாவரம்(algae); அது நீரில் பரவுவதே அது வாழத் தான்!
  வாழட்டும்!
  ஆனா, தாகத்தோடு நீரை நாடி வருபவர்கள்…அவர்களும் வாழ வேணாமா? விடாது! வழுக்கடிக்கும்!

  ஆனா வேர்?
  = தான் வாழணுமே ன்னு பரவாது! செடி வாழணுமே ன்னு பரவும்!
  —————–

  வேருக்கு என்ன பெருசா வாழ்வு?
  * அழகும், கவர்ச்சியும் உண்டா? = இல்லை
  * வெளியில் தோன்றி, இலை, தண்டு, பூ போல, பலரைக் கவர்ந்து இருக்குமா? = இல்லை

  ஆனா, உள்ளுக்குள்ளேயே ஓடும்! தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது!

  • anonymous says:

   நாமெல்லாம் இரும்பாலான மண்வெட்டி வச்சித் தானே, மண்ணைக் கொத்தவே முடியுது! ஆனா வேரு?

   சொல்லப் போனா, அது ஆரம்பத்தில் மென்மையும் கூட! அது எப்படி, எந்த இரும்பும் இல்லாம, மண்ணைக் கொத்திக் கொத்தி உள்ளே போகுது? = யோசிச்சி இருக்கீங்களா?

   ஏன்னா = அன்பில் உறுதி!
   அந்த உறுதியே, ஒரு மென்மைக்கும் இரும்பு வலிமையைத் தருது!
   ——————–

   இப்படி உள்ளே போயிப் போயி, அது பெருசா என்னத்தைக் கண்டது? = சோறு!
   தான் சாப்பிடவா? = இல்லை!
   மேலே, வெளியுலகுக்கு கவர்ச்சி காட்டிக் கொண்டிருக்கும் பூவும், இலையும், செடியும் வாழ, இது சோறு தேடி அனுப்புது!

   அந்தச் சோற்றை வெயிலில் கொதிக்க வைத்து, பசுஞ் சாப்பாடாக்குது இலை! அதுவே தண்டு, பூ, பழம் ன்னு எல்லாத்துக்கும் ஆதாரம்!
   —————-

   இலை, பூவை எத்தனையோ பூச்சி, பொட்டு தாக்கும்! நோய் படும்!
   ஆனா வேரு?
   எவ்ளோ வந்தாலும் தாங்கிக்கிடும்!

   எத்தனை புழுக்கள் தன்னைக் கொத்தி எடுத்தாலும் தாங்கிக்கிடும்!

  • anonymous says:

   ஏன் தாங்கிக் கிடணும்?
   ஏன்-ன்னா மேலே இருப்பது = தன் அன்பால் விளைந்த உறவு!

   முதலில் இருந்தே, கொழுந்தாய் இருக்கும் போதே வந்து விட்ட உறவு! = வேரும் கொழுந்தும்!
   அப்பறமா, எவ்ளோ மாற்றங்கள்!
   கொழுந்துக்கு வாழ்வு அமைஞ்சி, பூத்துக் குலுங்குது!

   அதான் செடிக்கு வாழ்வு அமைஞ்சிருச்சே! வேரு இப்போ விட்டுறலாம்-ல்ல?
   ஊகும்!

   வெளியே வந்து தன்னைக் காட்டிக்கவும் காட்டிக்காது! அதே சமயம் விடவும் விடாது!
   எவ்ளோ காத்து அடிச்சாலும், செடியை இறுக்கித் தாங்கிக்கும் வேரு! அதை விடவே விடாது!

   ஆனா இப்பேர்ப்பட்ட வேரும் ஒரு நாள் விட்டுரும்!

  • anonymous says:

   எப்போ?
   வேர் துண்டு துண்டாப் பல்கிப் பரவி இருக்கும்! அந்தச் சிறு சிறு வேரெல்லாம் உடையலாம், மிதிபடலாம், வெட்டுப்படலாம்…..

   இப்பிடி….ஒவ்வொரு துண்டாப் போனாலும்…..அப்பவும் அந்த வேர் தாங்கிக்கிடும்….அதை ஆணி வேரில் அடிக்கும் வரை….
   ————————-

   இதான் வேரின் லட்சணம்!

   தன் உயிரான ஆணி வேர் இருக்கும் வரை, வெளியே தலை காட்டாமல், ஆனா….விடாது பற்றிக் கொண்டிருக்கும் மனசு….
   அந்த “வேர் மனசு”!

   //இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே//
   = வேர் கிளைக்கும், வேர் பரவும், வேர் விரியும் ன்னு சொல்லி இருக்கலாம்
   = ஏன் “வேர் வீழ்க்கும்” ன்னு சொல்லுறான் அதிவீரராம பாண்டியன்???
   = தானே வீழ்ந்து படும் வரை, பற்றி இருக்கும்
   = வேர் வீழ்க்கும்மே!

   வேர் மனசு!
   வேருண்டு வினையில்லை! வேலுண்டு வினையில்லை!

   என் ஐயா, யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தசாமியே!
   உன்னை நாடி வரும் வேளையில், இந்த “வேர் மனசையே” எனக்குக் காலமெல்லாம் குடுத்து அருள்வாய்!

  • ஆனந்தன் says:

   A beautiful exposition about வேர்!

   ஒரு சாதாரண மரத்தின் வேரைப் பற்றிய ஆழமான பார்வை!
   வேரைப் பற்றிய ஒரு நெகிழ்ச்சியான சிறுகதையே எழுதிவிட்டீர்கள்!
   இனி எந்த மரத்தின் வேரை வெட்டும் போதும் அழுகை அழுகையாக வரப்போகிறதே!

  • ஆனந்தன் says:

   யாழ்ப்பாணத்து நல்லூரிலும் வேல் வழிபாடுதான், கதிர்காமத்தைப் போல.

  • ஆனந்தன் says:

   //(வேர்) உள்ளுக்குள்ளேயே ஓடும்! தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது!//
   அதுவும் ஒரு anonymous!

 2. anonymous says:

  வெற்றி வேற்கை = வெற்றி வேல் கை
  இப்படிக் கையில் “வேலோடு” தொடங்கும் நூல்!

  சிலரு தப்பா வெற்றி வேட்கை (வெற்றியை விரும்பு)-ன்னு எழுதிப் பாத்து இருக்கேன்!
  True in a motivational sense, as this book contains secrets of success!
  ஆனா இது = வெற்றி + வேல் + கை!

  இதுக்கு நறுந்தொகை ன்னு தான் பேரு வச்சான் பாண்டியன்!
  = குறுந்தொகை போல, நறுந்தொகை!

  ஆனா, நூலின் முதல் அடியையே, நூலுக்குப் பேராச் சொல்லும் மரபில்…(ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், கண்ணி நுண் சிறுத்தாம்பு…..)
  பின்னாள் புலவர்கள், இந்த நூலின் பேரையே “வெற்றி வேற்கை” என்று புழக்கத்தில் மாற்றி விட்டனர்!
  —————-

  • anonymous says:

   அதி வீர ராம பாண்டியன் = இவன் இன்னோரு பேரு குலசேகரன்
   சிவபெருமானின் உள்ளார்ந்த பக்தன்!

   ரொம்பவும் பிற்காலப் பாண்டியன்; மதுரை அல்ல! தெக்கத்திச் சீமை, தென்காசிப் பாண்டியர்களில் சேர்த்தி!

   * சங்க காலப் பாண்டியர்களில் எப்படி ஒரு = அறிவுடை நம்பியோ…
   * அது போல பாண்டியர்கள் முடியும் கட்டத்தில், இப்படி ஒரு = அதிவீரராமப் பாண்டியன்!
   வேறெந்த தமிழ் மன்னர் குலமும், தமிழுக்கு இப்படிப் பரந்து பரந்து கவிதைகள் செய்ததில்லை!
   —————–

   எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
   கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
   செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
   ….ன்னு பள்ளிக் கூடத்துல கூட்டமா ஒப்பிச்ச ஞாபகம் வருதா?:) இவன் எழுதிய இந்த நூல் தான்!
   —————–

   வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
   = போயே போச்சி:)

   மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
   = மந்திரிக்கு அழகு வரும்பொருள் எடுத்தல் ன்னு ஆயிருச்சி!:)

   • //நல்லவர்களுடன் நாம் ஒரு நாள் பழகினால்கூடப் போதும், வலிமையான பூமியைப் பிளந்துகொண்டு உள்ளே செல்லும் வேரைக் கொண்ட மரம் போல அந்த நட்பு உறுதியாகிவிடும். அதன்பிறகு அதனை யாராலும் அசைக்கமுடியாது.//

    இது என் வாழ்வில் உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு 🙂 அதற்காக நான் எனதருமை முருகப் பெருமானுக்கு தான் தினம் தினம் நன்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s