கூடல் வெள்ளம்

குன்றில் உற்றவெள்ளம் கொழுந்து ஓடி வையைதனில்

சென்று எதிர்த்து நிற்பது எனச் சீபதியோர் அன்று எதிர்த்துக்

கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில்

ஏடு அலர் தாரான் எழுந்து அருளி…

நூல்: அழகர் கிள்ளை விடு தூது

பாடியவர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

சூழல்: அழகர் கோடைத் திருவிழாவுக்காக மதுரையில் உள்ள வையை ஆற்றில் எழுந்தருளுகிறார்

கோடைத் திருவிழாவை முன்னிட்டுத் திருமால் / அழகர் மதுரையில் உள்ள வையை ஆற்றுக்கு வருகிறார். அப்போது அவரைத் தரிசிப்பதற்காக அழகர்மலையில் வாழ்கிற மக்களெல்லாம் ஆற்றங்கரைக்கு மொத்தமாகத் திரண்டு வருகிறார்கள்.

இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, மலைமேல் பெய்த தண்ணீர் வெள்ளமாகப் பெருகி ஓடி வையை ஆற்றில் கலப்பதைப்போல் இருக்கிறது.

இப்படி எண்ணற்ற மக்கள் வந்து கூடுவதால்தான் மதுரைத் திருநகருக்குக் ‘கூடல்’ என்று ஒரு பெயர் வந்ததோ?

துக்கடா

  • ’கிள்ளை’ என்றால் கிளி (’மாமன் தோளில் சாய்ந்த முல்லையே, மயங்கி மயங்கிப் பேசும் கிள்ளையே’ (வாலி), ‘பேசும் கிள்ளையே, ஈர முல்லையே’  (வைரமுத்து) என்று சினிமாப் பாட்டில் நிறையக் கேட்டிருக்கலாம்). அந்தக் கிளியைத் தூது விடும்படி அமைந்த நூல் என்பதால் இதற்குக் ‘கிள்ளை விடு தூது’ என்று பெயர்.
  • அந்தக் கிளி யாரிடம் தூது செல்கிறது? அதைத்தான் நூல் பெயரின் முதல் பகுதி சொல்கிறது, திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் அழகரிடம் கிளியைத் தூது விடுகிறாள் ஒரு பெண்
  • இந்த நூலைப்பற்றி மேலும் அறியவும் இதனை முழுமையாக வாசிக்கவும் இங்கே செல்லலாம் : http://www.tamilvu.org/library/l5810/html/l5810inx.htm

305/365

Advertisements
This entry was posted in சினிமா, திருமால், தூது, பக்தி, வர்ணனை, விஷ்ணு. Bookmark the permalink.

One Response to கூடல் வெள்ளம்

  1. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டப் பாடல். ஆனால் இப்பொழுதும் உண்மையாக இருப்பது நம் தமிழ் கலாச்சாரத்தின் பெருமையே! கள்ளழகர் அழகிய அலங்காரத்துடன் பட்டுத்தி ஆற்றில் இறங்கும் திருக் காட்சியைக் காண இன்றும் திரளாக வருகிறது கூட்டம்.

    கூடல் நகரம் என்ற பெயர் காரணம் கூட இதனால் பொருத்தமாகத் தான் உள்ளது. அனைத்து மக்களும் ஆவலோடு ஆற்றின் அருகே வெள்ளமெனக் கூடுகின்றனர். திருமாலின் அருளைப் பெறுகின்றனர்!

    amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s