பாட்டின் இலக்கணம்

அறம் முதல் நான்கு என்றும், அகம் முதல் நான்கு என்றும்

திறன் அமைந்த செம்மைப் பொருள்மேல் குறைவு இன்றி

செய்யப் படுதலால் செய்யுள், செயிர் தீரப்

பையத் தாம் பாவுதலால் பா

நூல்: யாப்பருங்கலக் காரிகை (செய்யுளியல்)

பாடியவர்: அமுதசாகரர்

அறம் முதலான நான்கு உறுதிப்பொருள்களையும், அகம் முதலான நான்கு வகைத் தலைப்புகளையும் நன்றாக ஆராய்ந்து, நம்முடைய திறமை நன்கு வெளிப்படக்கூடிய சிறந்த விஷயங்களைத் தேர்வு செய்யவேண்டும். பின்னர் அந்த விஷயத்தைக் குறை இல்லாதபடி பாடலாக வடிக்கவேண்டும்.

இப்படிச் செய்யப்படுவதால்தான், அதன் பெயர் ‘செய்யுள்’. கேட்பவர்களின் கோபம் தீரும்படி அவர்கள் மனத்தில் மெல்லப் பாவுவதால் (நெய்வதால்) அதன் பெயர் ‘பா’.

துக்கடா

 • அறம் முதலான நான்கு : அறம், பொருள், இன்பம், வீடுபேறு
 • அகம் முதலான நான்கு : அகம், புறம், அகப் புறம், புறப் புறம்
 • செய்யுள், பா வரிசையில் இங்கே விடுபட்டுப்போன இன்னொரு விஷயம் : ‘பண்ணப்படுவதால் அது பண்’
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • அறமுதல்நான் கென்றும்; அகமுதல்நான் கென்றும்
 • திறனமைந்த செம்மைப் பொருள்மேல் குறைவின்றி
 • செய்யப் படிதலால் செய்யுள்; செயிர்தீரப்
 • பையத்தாம் பாவுதலால் பா

297/365

Advertisements
This entry was posted in இலக்கணம், யாப்பருங்கலக் காரிகை, வெண்பா. Bookmark the permalink.

5 Responses to பாட்டின் இலக்கணம்

 1. //கேட்பவர்களின் கோபம் தீரும்படி அவர்கள் மனத்தில் மெல்லப் பாவுவதால் (நெய்வதால்) அதன் பெயர் ‘பா’.//

  #365பா நல்ல பெயர் காரணம்! 365 நாளும் நீங்கள் இடுகின்ற பாக்கள் படிப்பவர் மனதில் மெல்லப் பரவி நல்லெண்ணத்தை நிறைக்கின்றது. கோபத்தையும் தீர்த்து விடும் என்று நம்புவோமாக.

  @kryes and @RagavanG please make up. You both are such knowledgeable and good people. Let bygones be bygones. I am appealing to the compassion that resides in both your hearts.

  amas32

  • என். சொக்கன் says:

   வழிமொழிகிறேன்

  • ஆனந்தன் says:

   இவர்களுக்கிடையில் இன்னும் செயிர் தீரவில்லையென்றால் 365பா இவர்கள் மனதில் பாவவில்லை என்று அர்த்தம் வந்துவிடும். ஆதலால், இது வேறு ஏதோ ‘ஊடல்’ என்று வைத்துக் கொள்கிறேன்!

 2. +1 on @amas32’s plea.

  ’யாப்பருங்கலக்காரிகை’ இது பள்ளியில் படித்திருந்தாலும், இப்போது நினைவுக்கு வருவது, ‘மர்ம தேசத்தில்’ வரும் ‘அம்பலக்காலக்கடிகை’. அடிக்காதீங்க. 🙂

 3. suresh says:

  @kryes and @RagavanG ,தயவு செய்து பின்னூட்டம் இடவும்.
  உங்கள் பின்னூடங்கள் இந்த ௩௬௫ ஐ முழுமை அடையசெய்கின்றன ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s