தங்கச் சோறு

மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு நீர் உலையுள்

பொன் தந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்று உறா முன்றிலோ இல்

நூல்: பழமொழி நானூறு (#381)

பாடியவர்: முன்றுரையரையனார்

வள்ளல் பாரியின் நாட்டில் பெரும் பஞ்சம். மழையே இல்லை. வயல்களெல்லாம் வறண்டு காணப்பட்டன.

அப்போது, பாரியுடைய அரண்மனைக்குச் சில பாணர்கள் வந்தார்கள். ‘ரொம்பப் பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடு’ என்று கேட்டார்கள்.

ஒரே பிரச்னை, அப்போது அங்கே அரிசியோ வேறு தானியங்களோ இல்லை. வந்தவர்களுக்கு எதைச் சமைத்துப் பரிமாறுவது?

அப்போது, பாரியின் மகள் அறியாமையுடன் ஒரு யோசனை சொன்னாள், ’சோறு சமைக்கும் பானையில் தங்கத்தைப் போட்டுச் சமைத்தால் என்ன?’

அதுபோல, ’எதுவுமே இல்லாத வீடு’ என்று ஒன்றும் கிடையாது. அப்போதைக்குக் கையில் இருப்பதை வைத்து நிலைமையைச் சமாளிப்பதுதான் புத்திசாலித்தனம்.

துக்கடா

 • இதைத்தான் ‘Resourceful’ங்கறான் வெள்ளைக்காரன் :>
 • இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
 • மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
 • பாரி மடமகள் பாண்மகற்கு நீருலையுள்
 • பொன்தந்து கொண்டு புகாவாக நல்கினாள்
 • ஒன்றுறா முன்றிலோ இல்

294/365

Advertisements
This entry was posted in அறிவுரை, கதை கேளு கதை கேளு, பழமொழி நானூறு, வள்ளல், வெண்பா. Bookmark the permalink.

6 Responses to தங்கச் சோறு

 1. ஆனாலும், மதன் அவர்கள் ஒரு முறை சொல்லியது போல், நம் புலவர்கள் ஓவராக சோம பானம்,சுறா பானம் சாப்பிட்டு விட்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்… உணர்ச்சி வசப்படுவதை அகம் சார்ந்த பாடல்களோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. இப்படி பாடல்களில் மித மிஞ்சிய அளவில் கற்பனையை விரவி எழுதியனதால்தான், சங்க கால மன்னர்களின் வரலாறு தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது…

  • என். சொக்கன் says:

   அதனால் என்ன? பாடல்களின் அழகை / கற்பனை எழிலை ரசிப்போம், அதன்மூலம் வரலாறு தெரியவில்லை என்பது ஒரு குறையாகச் சொல்லமுடியாது, அது புலவரின் நோக்கமும் அல்ல, எந்தக் காலத்திலும் மிகைப்படுத்திப் போற்றுவதுதான் வழக்கம் 🙂

 2. angavaiyaa sangavaiyaa ?

 3. During the French Revolution, when the peasants complained that there was no bread to eat, Queen Marie Antoinette wife of Louis XVI supposedly said “let them eat cake”!

  பாரியின் மகளும் அறியாமையால் இந்த மாதிரி ஒரு யோசனையை சொல்கிறாள்.

  திரு சொக்கர் இதை ‘Resourceful’ என்று கூறுகிறார். அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் நம் கையில் என்ன இருக்கிறதோ அதை பயன்படுத்தி மேல் நிலைக்கு நாம் வரவேண்டும்.

  நான் ஒரு கதை படித்திருக்கிறேன். அதில் ஒருவன் பாம்புகள் நிறைந்த நிலத்தை ஏமாந்து வாங்கிவிடுவான். திரும்ப விற்கவும் முடியாமல் திண்டாடும்போது அந்த பாம்பு விஷத்தையே எடுத்து விஷக்கடிக்கு மருந்து தயாரித்து பெரிய செல்வந்தன் ஆகிறான்! This is being resourceful 🙂

  amas32

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s